மைக்கை பிடித்த உதயநிதி.. எடப்பாடி பக்கம் திரும்பி சொன்ன "அந்த" வார்த்தை.. கடுப்பான அதிமுக.. ஹைலைட்டே வேற
சென்னை: பொதுச்செயலாளராக பதவியேற்றுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு, அரசியல் கட்சி தலைவர்கள், தமிழக சட்டசபை வரை வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.. ஆனால், திமுக அமைச்சர் உதயநிதி என்ன செய்தார் தெரியுமா?
அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்... கடந்த 28-ம் தேதி தீர்ப்பு வந்ததையடுத்து, அன்றைய தினமே, அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுச்செயலாளராக அவர் பதவி ஏற்றுக்கொண்டார்...
தீர்ப்பு என்பதைவிட, இடைக்கால ஆணை என்றே சொல்லலாம்.. இப்படி ஒரு உத்தரவு வந்த உடனேயே இந்த பதவியேற்பு சூட்டோடு சூடாக முடிந்தது..

அப்பீல்
பொதுவாக அதிமுக தலைவர்கள், முக்கியமாக ஜெயலலிதா போன்றோர் நேரம் காலம் பார்த்து, அதற்கு பிறகுதான், எந்த பதவிகளையுமே ஏற்றுக்கொள்வார்கள்.. இதற்காக பிரத்யேகமான நிகழ்ச்சியையும் ஏற்பாடு செய்வார்கள்.. ஆனால், நீதிமன்ற அவசரம் கருதி, ஒரு மணி நேரத்திற்குள்ளாகே பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றார்.. எனினும், இது தொடர்பாக ஓபிஎஸ் அப்பீல் சென்றுள்ளார்.. அதன் முடிவு என்னாகும் என்று தெரியவில்லை.. அதைவிட முக்கியமாக, தேர்தல் ஆணையம் என்ன செய்ய போகிறது என்று இறுதி முடிவு எடுக்க போகிறது என்று தெரியவில்லை..

பூரிப்பு ஹேப்பி
திருத்தப்பட்ட தேர்தல் விதிகளின்கீழ் தேர்தல் நடந்தது என்பது குறித்து தேர்தல் ஆணையத்துக்கு எடப்பாடி தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், திருத்தப்பட்ட விதிகளுக்கு, இதுவரை தேர்தல் ஆணையம் ஒப்புதல் தந்ததில்லை.. அப்படிஇருக்கும்போது, திருத்தப்பட்ட விதிகளுக்கு ஒப்புதல் தராத ஒரு பொதுச்செயலாளர் தேர்தலை, எப்படி தேர்தல் ஆணையம் இந்த முறையும் ஒப்புதல் தரும்? என்று சந்தேகமும் எழுந்தபடியே உள்ளது.. இவ்வாறான சட்டசிக்கல்கள் ஒருபக்கம் இருந்தாலும், எடப்பாடி பழனிசாமி பூரிப்பில் உள்ளார்.. பதவியேற்றபோது, எம்ஜிஆர் தொப்பி, கண்ணாடி சகிதம் காட்சியளித்த எடப்பாடி, நிர்வாகிகளின் விருப்பத்துக்காக சிறிதுநேரம் அதே கெட்டப்பில் இருந்தார்.

முதல் வாழ்த்து
முதல்வாழ்த்தை சொன்னது பாமகதான்.. டாக்டர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி, தமாகா ஜிகே வாசன், மத்திய இணை அமைச்சர் எல். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, டாக்டர் பாரிவேந்தர், புதிய நீதிக் கட்சி தலைவர் ஏசி சண்முகம், தேமுதிக பிரேமலதா விஜயகாந்த், புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி, புரட்சி பாரதம் டாக்டர் பூவை ஜெகன்மூர்த்தி, சமக சரத்குமார், ஜான்பாண்டியன், கொங்கு ஈஸ்வரன், என பலரும் திரண்டு வாழ்த்து சொன்னார்கள்.. இந்நிலையில், சட்டப்பேரவை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வந்தார்...

ஆரவாரம்
அப்போது சட்டசபையில் இருந்த அனைத்து அதிமுக எம்எல்ஏக்களும் எழுந்து நின்று மேஜையை தட்டி எடப்பாடிக்கு பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்காக வாழ்த்து தெரிவித்தனர். மேலும் கேள்வி நேரத்தின்போது பேசிய அதிமுக எம்எல்ஏக்கள் எல்லாருமே பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்த பிறகே, தங்களுடைய கேள்வியை தொடங்கினர்.. அந்தவகையில், இன்றும் எடப்பாடி பழனிசாமி சட்டசபைக்கு வந்திருந்தார். சட்டப்பேரவையில் இன்று பதிலுரையில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் நன்றி தெரிவித்து தன்னுடைய பேச்சை தொடங்கினார்.

உதயநிதி
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக, இன்று மானியக் கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று பதிலுரையில் பேசினார்.. அப்போது, தன்னுடைய பேச்சின் தொடக்கத்தில் பேரவை தலைவர், முதலமைச்சர், அமைச்சர் பெருமக்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்தவர், "எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கும் நன்றி" என்று கூறி, தன் பேச்சை தொடங்கினார்.. அதாவது பொதுச்செயலாளர் என்று உதயநிதி குறிப்பிடவில்லை.. அதுமட்டுமல்ல, எதிர்க்கட்சி துணைத் தலைவரை மாற்ற வேண்டும் என்று அதிமுகவினர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வரும் நிலையில், உதயநிதி ஸ்டாலின் தன் பேச்சில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் யார் என்பதையும் பெயரை குறிப்பிடாமல் சஸ்பென்ஸ் வைத்து பேசியதை, எடப்பாடி தரப்பு கவனிக்காமல் இல்லை...

ஷார்ப் எடப்பாடி
சமீபகாலமாகவே, எடப்பாடி பழனிசாமியும், உதயநிதி ஸ்டாலினும் வெளிப்படையாகவே கருத்து மோதல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.. உதயநிதியே அமைதியாக இருந்தாலும், செல்லும் இடமெல்லாம், நீட் விவகாரத்தை கிண்டி எடுத்து, காட்டமான கேள்விகளை எடப்பாடி எழுப்பி கொண்டிருக்கும் நிலையில், இவர்களின் மோதல் அதிகரித்தபடியே வருகிறது.. இப்படிப்பட்ட சூழலில், ஒட்டுமொத்த பேரும் திரண்டு வாழ்த்து சொல்லி வரும்போது, உதயநிதி மட்டும், எதிர்க்கட்சி தலைவர் என்று குறிப்பிட்டு பேசியிருப்பது, அனைவரின் மிகுந்த கவனத்தை பெற்று வருகிறது.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications