விஜய் கூட்டத்திற்குள் புகுந்த ஆம்புலன்ஸ்.. செருப்பு வீசியது திமுகவினரா? ஓபனாக பேசிய போஸ் வெங்கட்
சென்னை: கரூரில் நேற்று தவெக தலைவர் விஜய் நடத்திய பிரசார கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்தக் கூட்டத்தில் விஜய் பேசும் போது ஆம்புலன்ஸ் வந்ததாகவும், விஜய்யை நோக்கி செருப்பு வீசப்பட்டதாகவும் நெரிசலுக்கு இதுபோன்ற விஷயங்களே காரணம் என சில விமர்சனங்கள் முன்வைக்கப்படும் நிலையில் இது தொடர்பாக திமுக பிரமுகரும் நடிகருமான போஸ் வெங்கட் விரிவாக பேசியுள்ளார். அவரது பேட்டி விவரங்களை பார்க்கலாம்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் கரூர் பரப்புரை பயணம் பெரும் துயரத்தில் முடிந்துள்ளது. தமிழகத்தையே உலுக்கியுள்ளது. குழந்தைகள், பெண்கள் என 40 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போஸ் வெங்கட் பேட்டி
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அருணா ஜெகதீசனும் பரப்புரை நடந்த இடத்திலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களிடமும் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார்.
இதற்கிடையே நடிகர் போஸ் வெங்கட் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து ஒன் இந்தியா தமிழுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கோ படம் பார்த்தீங்களா..
கோ படம் பார்த்தீங்களா.. அதில் ஒரு கதாநாயகன் இருப்பான்.. எல்லாத்தையும் பண்ணிவிட்டு, அத யாரோ வில்லன் செய்கிற மாதிரி இருக்கும். ஆனால் எல்லாத்தையும் அவரே பண்ணிவிட்டு கடைசியில் முதல் அமைச்சரா ஆகியிருப்பான். நமக்கு நாமே எதோ பண்ணிவிட்டோம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி விட கூடாது.
எப்போதும் எல்லாத்துக்கும் ஆளுங்கட்சி மீது பழி போட கூடாது. சில தவறுகளை நீங்க ஒத்துக்க வேண்டும். அதனால் தான் இதனை அரசியலாக பார்க்க கூடாது. இந்த தவறுக்கு முற்றிலும் தவெக தானே காரணம்.. இவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்.
செருப்பு வீசப்பட்டது ஏன்?
செருப்பு வீசப்பட்ட விவகாரம் பற்றிய பேசிய போஸ் வெங்கட் கூறியதாவது: விஜய்க்கு எதிரிகளே இல்லையா.. விஜய்யை பிடிக்காதவர்களே இல்லையா.. எனக்கு விஜய்யை ரொம்ப பிடிக்கும் அவருக்கு எதிராக உள்ள ஒரு நடிகரை பிடித்தவர்களே இருக்க மாட்டார்களா..
நடிகர் டூ நடிகராக நடந்த விஷயமாக அது இருந்து இருக்க கூடாதா.. திமுகதான் இதை செய்து இருப்பார் என்று மையப்படுத்தினால் ரசிகர்தான் செய்து இருப்பார் என்று மையப்படுத்துகிறேன். சாதியமாக பாருங்க..மதமாக பாருங்க எப்படி பார்த்தாலும்.. விஜய் அதிமுகவை திட்டி இருக்கிறாரே.. ஜெயலலிதா பற்றி கன்னாபின்னாவென பேசியிருக்கிறார்.அவர்கள் அடிக்க மாட்டார்களா..
ஆம்புலன்ஸ் வருகிறது
பாஜகவை திட்டியிருக்கிறார். அவர்கள் அடிக்க மாட்டார்களா.. திமுக என ஏன் குற்றம் வைக்கிறீங்க.. கரூரில் நடந்ததுதான் உங்களுக்கு பிரச்சினை.. விஜய் கூட்டத்திற்குள் வந்த ஆம்புலன்ஸ் அவுங்க கட்சியினருடையதுதான். கிட்டதட்ட 6 ல் இருந்து 10 ஆம்புலன்ஸ் வரைக்கும் வாட்டர் பாட்டில் கொண்டு வந்து இருந்தாங்க.. விபத்து நடந்ததும் 5,10 நிமிடங்களில் ஆம்புலன்ஸ் வருகிறது என்பதற்கு நீங்கள் பெருமைப்படனும்.. இவ்வாறு அவர் பேசினார்.












Click it and Unblock the Notifications