எடப்பாடி மகன் அமெரிக்கா போனாரா? நிரூபிக்காவிட்டால் தங்கம் தென்னரசு பதவி விலகணும்! ஜெயக்குமார் சவால்!
சென்னை: எடப்பாடி பழனிசாமி மகன் மிதுன் இதுவரை அமெரிக்காவுக்கே சென்றதில்லை எனக் கூறியிருக்கிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
அப்படியிருக்கும் போது எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த காலத்தில், அவர் மேற்கொண்ட அமெரிக்க அரசு முறை பயணத்தின் போது மிதுனும் உடன் சென்றார் என தங்கம் தென்னரசு எப்படி கூறலாம் என வினவியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி மகன் அமெரிக்கா சென்றதாக கூறும் தங்கம் தென்னரசு, அதை நிரூபிக்க தவறினால் அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும் என ஜெயக்குமார் சவால் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக ஜெயக்குமார் நமது அம்மா நாளிதழில் விடுத்துள்ள பதிவின் ஒரு பகுதி வருமாறு;
''எங்கள் கழகப் பொதுச் செயலாளர் மகனைப் பற்றி அமைச்சர் தங்கம் தென்னரசு குறிப்பிட்டுள்ளார். நான் ஒரு சவால் விடுகிறேன். அண்ணன் எடப்பாடியார் முதலமைச்சர் பதவியை வகிப்பதற்கு முன்போ, பதவி வகிக்கும் போதோ, அல்லது இன்று வரையோ அவரது மகன் அமெரிக்காவே போகவில்லை என்று நான் சவால் விடுகிறேன்.
இதை முதலமைச்சர் ஸ்டாலினோ அல்லது பிதற்றல் அறிக்கை வெளியிட்டுள்ள தங்கம் தென்னரசுவோ அவரது அறிக்கையில் உள்ளபடி, அண்ணன் எடப்பாடியார் மகன் அமெரிக்கா சென்றார் என்பதை நிரூபிக்க வேண்டும்.
இல்லாவிடில், ஸ்டாலினும், தங்கம் தென்னரகவும் தங்களது பதவிகளை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்.'' இவ்வாறு ஜெயக்குமார் சவால் விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications