• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"கனிமொழி"யை எச்.ராஜா அப்படி பேசினாரே.. காயத்ரி வாய் திறந்தாங்களா.. இப்ப மட்டும் என்னவாம்: Dr ஷர்மிளா

Google Oneindia Tamil News

சென்னை: காயத்ரி ரகுராம் பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்து திமுக ஆதரவாளரான டாக்டர் ஷர்மிளா நம்மிடம் கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.

Recommended Video

  DaisySaran - Trichy Surya விஷயத்துலயே அண்ணாமலை Action எடுக்கலைனா வேற எதுக்கு எடுப்பாரு?- Dr Sharmila

  காயத்ரி ரகுராம் கட்சியை விட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.. இதற்கு காயத்ரி ரகுராம், "நான் கட்சியை கலங்கப்படுத்தவில்லை. என்னிடம் விளக்கம் கேட்காமல் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடவடிக்கை எடுத்துள்ளார். இதனை விடமாட்டேன். தொடர்ந்து கட்சி பணி செய்வேன் என்று காயத்ரி ரகுராம் கூறி வருகிறார்.

  இதனிடையே, அரசியல் விமர்சகரும், திமுக ஆதரவாளருமான டாக்டர் ஷர்மிளாவிடம், இதுகுறித்த கேள்வியை முன்வைத்தோம்.. நம் ஒன் இந்தியா தமிழுக்கு ஷர்மிளா தந்த ஸ்பெஷல் பேட்டியில் தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார். அவர் நம்மிட சொன்னதாவது:

  ஆடியோ விவகாரத்தில் துச்சாதனனுக்கே வெற்றி.. திருச்சி சூர்யா சிவாவை சொல்கிறாரா காயத்ரி ரகுராம்? ஆடியோ விவகாரத்தில் துச்சாதனனுக்கே வெற்றி.. திருச்சி சூர்யா சிவாவை சொல்கிறாரா காயத்ரி ரகுராம்?

   டாக்டர் ஷர்மிளா

  டாக்டர் ஷர்மிளா

  "இந்த சம்பவத்தை பார்த்தால், 2, 3 நாளில் மட்டுமே நடந்த விஷயமாக எனக்கு தோன்றவில்லை.. காயத்ரியின் மன உளைச்சல் அவரது 2 நாள் பதிவிட்ட ட்வீட்களிலேயே தெரிந்தது.. பாஜகவில் சேர்ந்ததில் இருந்தே தன்னை வெளியேற்றும் முயற்சிகள் நடப்பதாக அவரே சொல்லி இருந்தார்.. கட்சிக்காக 8 வருஷம் உழைத்துக் கொண்டிருக்கும்போது, அதற்கான அங்கீகாரம் என்பது கிடைக்காமல் போவது என்பது ஏமாற்றத்துக்குரிய ஒன்றுதான்.. இது பலவகையான மனஉளைச்சலை ஏற்படுத்தவே செய்யும் என்பதையும் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. இதில் கொடுமை என்னவென்றால், அந்த கட்சியில் உள்ளவர்களே அவரை விமர்சிக்கிறார்கள், ட்ரோல் செய்கிறார்கள்..

   விசிக + லைக்ஸ்

  விசிக + லைக்ஸ்

  "ஒழுங்கா தலைவர் சொல்றதை கேட்டுட்டு இருந்தா இரு, இல்லாட்டி மானாட மயிலாட ஷோ-வுக்கு போ" என்றெல்லாம் தரக்குறைவான விமர்சனங்கள் வருகிறது.. அதுக்கு அந்த கட்சியில் இருந்தே ஒரு நிர்வாகி லைக் போடுகிறார்.. அதை பார்த்ததும் காயத்ரி இன்னும் டென்ஷன் ஆகிறார்.. வேதனைப்படுகிறார். "விசிக, திமுகவில் இருப்பவர்கள் என்னை டிரோல் செய்தாலும் கவலைப்பட மாட்டேன், ஆனால், சொந்த கட்சியை சேர்ந்தவர்களே ட்ரோல் செய்வது வருத்தமாக இருக்கிறது என்று குமுறுகிறார் காயத்ரி.. ஒரு பெண்ணின் வருத்தத்தை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது..

  சஸ்பெண்ட்

  சஸ்பெண்ட்

  எந்த ஒரு விளக்கத்தையும் அவரிடம் கேட்காமல் சஸ்பெண்ட் செய்துள்ளது, ஒருதலைப்பட்சமாக தெரிகிறது.. என்னதான் பிரச்சனை என்று கட்சி அவரிடம் விசாரித்திருக்கலாம்.. அசிங்கமாக ஒரு ஆடியோ வெளியாகி உள்ளபோது, அதை விசாரிப்பதற்காக, ஒரு குழுவை போட்டு, இரு தரப்பிலும் என்ன நடந்துள்ளது என்பதை கேட்டுதான் முடிவெடுக்க வேண்டும் என்றெல்லாம் தெளிவாக பேசும் அண்ணாமலை, காயத்ரி விஷயத்தையும் விசாரிக்கலாமே? இதுக்கும் ஒரு குழுவை போட வேண்டியதுதானே? விசாரித்துவிட்டு எங்கே தப்பு நடந்திருக்கிறது என்று தெளிவாக கண்டுபிடிக்கலாமே? ஆனால், விசாரிக்க அவர் தயாரில்லை.. காயத்ரியிடம் பேச்சுவார்த்தை நடத்தக்கூட தயாரில்லை..

  சப்போர்ட்

  சப்போர்ட்

  தன்னை சந்திக்கக்கூட தலைமை வாய்ப்பு தரவில்லை என்று காயத்ரி சொல்வதில் இருந்தே தெரிகிறது, எல்லாரும் "கேங்"காக ஒன்று சேர்ந்து அவரை வெளியேற்றியிருக்கிறார்கள் என்பது தெரிகிறது. இவர்களுக்குள் நீண்ட காலமாக புகைந்து கொண்டிருந்த ஒன்று, இன்று வெட்ட வெளிச்சமாகி உள்ளது.. ஆனால், காயத்ரியுடன் தங்களுக்கு கருத்து வேறுபாடு இருந்தாலும், காயத்ரிக்கு சப்போர்ட் செய்கிறோம் என்று ஒரு குரூப் சோஷியல் மீடியாவில் சொல்லி வருகிறது.. இதில் எனக்கு உடன்பாடு இல்லை..

   கலிவரதன்

  கலிவரதன்

  காரணம், பாஜகவில் கலிவரதன் விவகாரம் நடந்தபோது, பாலியல் புகாரை தந்து ஒரு பெண் கதறி கதறி அழுதாரே, அதுக்கெல்லாம் காயத்ரி ஏதாவது கேட்டாரா? கேடி ராகவன் வீடியோ வெளிவந்தபோது, அதில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்காக, காயத்ரி எதுவுமே பேசவில்லையே.. ஆனால், குஷ்புவுக்கு ஒரு விஷயம் என்றதும் கோபம் வருகிறது.. மானம், மரியாதை என்பதெல்லாம் குஷ்புவுக்கும் ஒன்றுதான், டாக்டர் டெய்ஸிக்கும் ஒன்றுதான்.. கலிவரதன் விஷயத்திலும், கேடி ராகவன் விஷயத்திலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக பேசாத காயத்ரி, இன்று டெய்ஸிக்கு மட்டும் ஏன் வக்காலத்து வாங்குகிறார்? இதன் உள் அர்த்தத்தையும் இங்கு பார்க்க வேண்டும்..

   கனிமொழி

  கனிமொழி

  ஒருவேளை, காயத்ரிக்கு, தன் கட்சிக்குள் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்திருந்தால், இதே டெய்ஸி ஆடியோவுக்கு ரியாக்ட் செய்திருப்பாரா என்று தெரியாது.. நிச்சயம் டெய்ஸி விவகாரத்தையும் கடந்து தான் சென்றிருப்பார்.. இன்னைக்கு தனக்கு ஒரு பிரச்சனை என்றதும், பெண்ணுக்காக சப்போர்ட் செய்வதாக காட்டிக் கொள்ள குரல் எழுப்புகிறார்.. உண்மையிலேயே காயத்ரி, பெண்களுக்கு பாதுகாப்பை விரும்புபவராக இருந்தால், அல்லது பெண்களுக்கு அநீதி இழைத்தவர்களுக்கு எதிராக குரல் கொடுப்பவராக இருந்திருந்தால், எச். ராஜா, என்னைக்கு கனிமொழியை பேசினாரோ, அன்னைக்கு காயத்ரி குரல் கொடுத்திருக்க வேண்டும்..

   கனிமொழியை

  கனிமொழியை

  எச்.ராஜா, கனிமொழியை எவ்வளவு தரக்குறைவாக பேசினார்.. இதே குஷ்புவையும் அன்று தரக்குறைவாக பேசினாரே.. அப்போது குஷ்பு காங்கிரஸில் இருந்தார்.. அப்போவெல்லாம் காயத்ரி ஏன் வாய் திறக்கவில்லை.. பிஸ்கிஸ் பானுவை பலாத்காரம் செய்தவர்களை மாலை போட்டு வரவேற்று வெளியே அனுப்பினார்களே, அப்போவெல்லாம் காயத்ரி வாய் திறக்கலையே.. அப்படின்னா, உங்களுக்கு தேவைப்படும்போது மட்டும் கோபப்படுவீங்க.. கொந்தளிப்பீங்களா? அதனால், காயத்ரியின் விவகாரம் சுயநலமாகவே, எனக்கு தோன்றுகிறது" என்றார்.

  English summary
  Did Gayathri Raghuramm support DMK MP Kanimozhi and this is purely selfish politics, says Dr Sharmila: Specials
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X