Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாசன் "அதை" சொன்னதுமே.. படார்னு திரும்பி பார்த்த எடப்பாடி.. "மதில்மேல்" அதிமுக.. அப்படின்னா ஈவிகேஎஸ்

ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட அதிமுக கூட்டணி மும்முரமாக வருகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து, அதிமுக கூட்டணிக்குள் விறுவிறு ஆலோசனைகள் நடந்து வருவதாக தெரிகிறது.. அந்தவகையில், எடப்பாடி பழனிசாமி என்ன முடிவெடுக்க போகிறார்? யாரை வேட்பாளராக அறிவிக்க போகிறார்? என்ற எதிர்பார்ப்புகள் கூடிக்கொண்டே வருகின்றன.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் விவகாரம் சூடுபிடித்து வருகிறது.. எப்படியும் 6 மாதத்துக்குள் தேர்தலை அங்கு நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றின அறிவிப்பு முறைப்படி வரும் என்றாலும், தமிழக கட்சிகள் இப்போதே தயாராகிவிட்டன.

தமிழக கூட்டணி அரசியலில் இடைத் தேர்தல்களில் போட்டியிடும் வாய்ப்பானது, முந்தைய தேர்தலில் எந்த கட்சி போட்டியிட்டதோ அந்த கட்சிக்கே சீட் ஒதுக்குவது என்பது நாகரீகமாக இருந்து வருகிறது.

கரிசனம்

கரிசனம்

குறிப்பாக இந்த கொள்கையை திமுக பின்பற்றி வருகிறது. ஆனால், இந்த முறை இந்த தொகுதியில் திமுக போட்டியிட வேண்டும் என இப்போதே அறிவாலயத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்கள் ஈரோடு திமுகவினர்.. காங்கிரஸ் தலைவர் அழகிரியோ, மீண்டும் காங்கிரஸ் இங்கு போட்டியிடும் என்று சொல்லியிருக்கிறார்.. பொதுவாக, இடைத்தேர்தல் என்றாலே ஆளும் கட்சியே வெற்றி பெறுவது இயல்பு என்றாலும், இப்படிப்பட்ட சூழலில், முதல்வர் ஸ்டாலின், வேறு ஒரு யோசனையை முன்வைத்திருப்பதாக தெரிகிறது.

 இளங்கோவன்

இளங்கோவன்

"காங்கிரசின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் ஜெயித்த தொகுதி. அதனால் அவரின் மனநிலையை குறிப்பாக அவரது விருப்பத்தை அறிந்து கொள்வது முக்கியம். இளங்கோவனின் குடும்பத்தினர் ஒருவருக்கு காங்கிரஸ் தலைமை வாய்ப்பளிக்கும் பட்சத்தில், காங்கிரசுக்கே மீண்டும் இந்த தொகுதியை ஒதுக்கலாம். செல்வாக்கில்லாத காங்கிரஸ்காரர் ஒருவருக்கு வாய்ப்பளிப்பதாக இருந்தால் திமுகவே போட்டியிடலாம். ஏனெனில், வேறு யாருக்காவது தொகுதியை ஒதுக்கி அவர் தோற்றுப்போனால் அது காங்கிரசை மட்டுமல்ல திமுகவையும் திமுக ஆட்சியையும் அரசியல் ரீதியாக பாதிக்கும். அதனால் காங்கிரசின் முடிவு என்னவாக இருக்கிறது என தெரிந்து முடிவு செய்துகொள்ளலாம்" என்று கருதுகிறாராம் ஸ்டாலின்.

 எகிறும் சாய்ஸ்

எகிறும் சாய்ஸ்

திமுக தரப்பு இப்படியிருக்க அதிமுக கூட்டணியிலோ குழப்பம் எகிறி வருகிறது.. கடந்த முறை இந்த தொகுதியை கூட்டணியான தமாகாவுக்குதான் ஒதுக்கியிருந்தது அதிமுக.. ஆனால், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட யுவராஜ் தோற்றுவிட்டதால், இந்த முறை தாங்களே இறங்கலாம் என்ற யோசனையில் அதிமுக தரப்பு உள்ளதாக தெரிகிறது.. இந்த சூழலில், இடைத்தேர்தல் குறித்து எடப்பாடி பழனிச்சாமியிடம் ஆலோசித்திருக்கிறார் தமாகா தலைவர் ஜி.கே.வாசன். நடக்கவிருக்கும் இடைத்தேர்தலில், தமாகா சார்பில் மீண்டும் தனக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என ஜி.கே.வாசனிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார் முந்தைய தேர்தலில் போட்டியிட்டு வெற்றியை இழந்த யுவராஜா.

 சான்ஸ் கிடைக்குமா

சான்ஸ் கிடைக்குமா

இதனையடுத்து, தமாகாவுக்கே மீண்டும் வாய்ப்பளிக்க வேண்டும் என்று எடப்பாடியை தொடர்பு கொண்டு கோரிக்கை வைத்துள்ளார் ஜி.கே.வாசன். அதற்கு எடப்பாடி பழனிசாமி, கடந்த பொதுத் தேர்தலில் தமாகாவுக்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட்டிருந்ததால் கூட்டணி தர்மத்தை மதித்து தமாகாவுக்கு ஒதுக்கத்தான் எனக்கும் ஆசை. ஆனால், ஈவிகேஎஸ் இளங்கோவனின் குடும்பத்தில் ஒருவருக்கு சீட் ஒதுக்கப்பட்டால், அனுதாப அலையில் மீண்டும் காங்கிரஸ் ஜெயித்து விடும். அதை தடுக்க வேண்டுமானால் அங்கு அதிமுக போட்டியிடுவதுதானே சரியாக இருக்கும்?'' என்று வாசனிடம் சொன்னாராம் எடப்பாடி.

 ஈஸி தமாகா

ஈஸி தமாகா

அதற்கு வாசன், ''திமுகதான் ஆட்சிக்கு வரும்ங்கிற எதிர்பார்ப்பில் பொதுத்தேர்தலில் காங்கிரசை ஆதரித்துவிட்டனர். இந்த முறை அப்படி இருக்காது. அதனால் ஈசியாக தமாகா ஜெயிக்கும். அதனால், மீண்டும் எங்களுக்கு வாய்ப்பு தரவேண்டும்'' என மன்றாடியுள்ளதாக தெரிகிறது.. அவரது பேச்சை மறுத்துப் பேச எடப்பாடி பழனிசாமிக்கு விருப்பம் இல்லை என்றாலும், ''இரட்டை இலை சின்னத்தில் தான் கடந்த முறை தமாகா போட்டியிட்டது. ஆனா, இடைத்தேர்தல் தேதி அறிவிக்கும் போது இரட்டை இலை சின்னம் உயிருடன் இருக்குமா? அல்லது முடக்கப்பட்டு விடுமா? என்று தெரியவில்லை.

 பெருங்குழப்பம்

பெருங்குழப்பம்

ஏனென்றால், அதிமுக-பாஜக கூட்டணி நீடிக்குமா? நீடிக்காதா? என்பதே இன்னும் உறுதியாகவில்லை. அது இறுதி செய்யப்படுவதை வைத்துதான் சின்னம் என்னவாகும்? என்பதெல்லாம் தெரியவரும்.. அதனால் அதிமுக பொதுக்குழு மீதான வழக்கில் தீர்ப்பு வரட்டும். அதற்கு முன்னதாக கட்சியினரிடம் பேசிவிட்டு முடிவை சொல்கிறேன் என்றிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. அதனால், மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா? கிடைக்காதா? என்கிற குழப்பத்தில் இருக்கிறாராம் வாசன்...!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+