கபர்ஸ்தானம்.. திமுகவுக்கு சிறுபான்மையினர் ஓட்டு மட்டும் போதுமா? நறுக்குன்னு கேட்டது யார்னு பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிறுபான்மையினரின் வாக்கு வங்கிக்காக திமுகவும் அதிமுகவும் மாறிமாறி போட்டி போடுவதாக இந்து முன்னணி கடுமையாக விமர்சித்துள்ளது. சிறுபான்மையினருக்காக பணத்தை செலவிடும் திராவிட மாடல் அரசு, பெரும்பான்மை இந்து சமுதாயத்தை பற்றியும் கொஞ்சம் கவலைப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் தெரிவித்திருப்பதாவது:

Did Hindu Munnai Criticized DMK Government MK Stalin and dmk, admk both are competing for the minority vote bank

சிறுபான்மையினர்: "சென்னை, தலைமைச் செயலகத்தில் சிறுபான்மையினர் நலன் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், முதலமைச்சர், கிறிஸ்தவ தேவாலய தலைவர்கள் மற்றும் இஸ்லாமிய மதபோதகர்களுடனும் தனியாக ஆலோசனை நடத்தி சிறுபான்மையினருக்காக பல நலத்திட்டங்களையும், அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளார்.

இந்த அறிவிப்புகள் மூலம் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் யார் சிறுபான்மையினருக்கு உதவி செய்வதில் சிறந்தவர், அவர்களின் வாக்கு வங்கியை யாருக்கு சாதகமாக்குவது என்ற போட்டி தான் நடக்கிறது. சிறுபான்மையினரின் பாதுகாவலர்களாக தங்களை காண்பித்துக் கொள்கின்றனர்.

கல்லறை தோட்டங்கள்: கல்வி நிறுவனங்கள் வழிபாட்டுத்தலங்கள், கல்லறை தோட்டங்கள், கபர்ஸ்தானங்கள் என சிறுபான்மையினருக்காக தங்களது மூளையையும், பணத்தையும் செலவிடும் தமிழ்நாடு அரசு பெரும்பான்மை இந்து சமுதாயத்தைப் பற்றியும் கொஞ்சம் கவலைப்பட வேண்டும்.

மதச்சார்பற்ற அரசியல் செய்வதாகக் கூறிக் கொள்ளும் முதல்வர்ஸ்டாலின், இந்துக்களின் சுடுகாடுகள் பராமரிப்பின்றி கிடக்கின்றன என்பது பற்றி சிறிதும் கவலைப்படுவதில்லை. பல சுடுகாடுகளில் அடிப்படை வசதிகளே இல்லை. சென்னை மற்றும் பிற முக்கிய மாவட்டங்களில்இந்துக்களின் சடலங்களை எரிப்பதோடு சரி. புதைப்பதற்கு அரசாங்க நிர்வாகம் அனுமதிப்பதில்லை.

உரிமைகள் மறுப்பு: இந்துக்கள் உயிரோடு இருந்தாலும் உரிமைகள் மறுக்கப்படு கிறது. இறந்த பின்பும்கூட அவர்களது உரிமைகள் பறிக்கப்படுகிறது. இந்துக்களின் கோயில்களைபோல, அவர்களின் சுடுகாடுகளும் அரசின் பிடியில் சிக்கி சீரழிகிறது. கட்டணக் கொள்ளை நடக்கிறது. சென்னை, கோவை, திருப்பூர், சேலம் உட்பட அனைத்து மாநகராட்சி பகுதிகளிலும் உள்ள இந்து சுடுகாடுகள் ஆக்கிரமிக்கப்படுகின்றன.

தமிழகத்தில் பல விவசாய நிலங்கள் கல்லறை தோட்டங்களாக மாறிஇருக்கின்றன. திமுக, அதிமுகபோன்ற கட்சிகள் சிறுபான்மையினரின் வாக்கு வங்கியை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்வதில் மாறி மாறி போடும் போட்டிதான் இதற்கு காரணம்.

திராவிட மாடல்:
கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத்தலங்கள், கல்லறை தோட்டங்கள், கபர்ஸ்தானங்கள் என சிறுபான்மையினருக்காக பணத்தை செலவிடும் திராவிட மாடல் அரசு, பெரும்பான்மை இந்து சமுதாயத்தை பற்றியும் கொஞ்சம் கவலைப்படவேண்டும். இந்துக்களை திமுக அரசு புறக்கணிக்கிறது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+