Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ட்ரான்ஸ்ஃபரன்சி.. ஜூமில் உருண்ட "செந்தில் பாலாஜி" தலை.. மோசமான வார்த்தையால் பாய்ந்து வந்த ஜோதிமணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியில் பரபரப்பு எகிறி வருகிறது.. அக்கட்சியில் நடந்த மீட்டிங் குறித்து, பிரத்யேகமான தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது..

தமிழக காங்கிரஸில் உட்கட்சி பூசல் தலைவிரித்தாடுவது புதிதில்லை என்றாலும், தமிழக மாநில தலைவராக கே.எஸ். அழகிரி நியமனம் செய்யப்பட்ட பிறகு, நிறைய அதிருப்திகள் வெடிக்க துவங்கின.. ஒருகட்டத்தில் சத்தியமூர்த்தி பவனே ரணகளமாகிவிட்டது.. அழகிரிக்கு எதிரான அணி உருவாகி, பஞ்சமில்லாத பரபரப்பு சம்பவங்கள் சத்தியமூர்த்தி பவனில் நடந்ததை இந்த தமிழகமே கண்டது.

Did Jothimani slams KS Azhagiri and what happened in Tamil Nadu Congress Committee Zoom Meeting

எனவேதான், அழகிரி மீதான புகார்களை தமிழகத்தின் சீனியர்கள், அகில இந்திய தலைவர் கார்கேவிடம் கொண்டுசென்றவாறே இருந்தனர்.. கட்சி அலுவலகத்துக்குள்ளேயே ரவுடிகளை வரவழைத்த அழகிரி, காங்கிரசை வேறுபாதையில் வளர்த்து வருகிறார் என்று புகார் தந்தனர்.

அதுமட்டுமல்ல, அழகிரி பதவியேற்றது முதல், கட்சியில் என்னென்ன ஊழல்கள் நடந்துள்ளது என்பதையெல்லாம் ரிப்போர்ட்டாகவும் மேலிடத்துக்கு தந்தார்களாம்.

சிதம்பரம்: அதுபோலவே, மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம், தங்கபாலு ஆகியோரின் ஆதரவாளர்கரும், மாநில தலைவர் அழகிரியை மாற்ற வேண்டும் என்று கூறியதுடன், தமிழக காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர்களில் 50 சதவீதம் ஊழல் நடந்திருக்கிறது என்றும் மேலிடத்தில் தெரிவித்துள்ளனர். மேற்கண்ட இந்த தகவல்களெல்லாம் கடந்த வரும் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டவையாகும்.

தற்போது விரைவில் தேர்தல் வரப்போகிறது.. திமுக கூட்டணியில் நிறைய சீட்களை காங்கிரஸ் எதிர்பார்த்தாலும், அந்த அளவுக்கு கிடைக்காது என்றே தெரிகிறது.. இப்படிப்பட்ட சூழலில், ஒரு பிரத்யேகமான தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.

பொதுக்கூட்டம்: அதாவது, இந்த மாதம் 13-ந்தேதி சென்னைக்கு வருகிறார் மல்லிகார்ஜுனகார்கே. அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுப்பதுடன் பிரமாண்டமான பொதுக்கூட்டம் ஒன்றை நடத்த வேண்டும் என்று திட்டமிட்டு, தமிழக காங்கிரஸ் எம்.பி.க்களுடன் ஜூம் மீட்டிங்கில் ஆலோசனை நடத்தியிருக்கிறார் தமிழக காங்கிரசின் மேலிட பொறுப்பாளர் அஜோய்குமார்.

இதில் காங்கிரஸ் எம்.பி. க்கள் ஒவ்வொருவரும் ஒருவிதமாக ஆலோசனையை சொல்லியிருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் வரவேற்பு, பேரணி, பொதுக்கூட்டம் நடத்துவதற்கான செலவுகளுக்கு கட்சி தலைமை கொடுத்து உதவ வேண்டும் என்று சொல்லப்பட்டது. ஆனால், அஜோய்குமாரோ, "தமிழ்நாட்டில் 8 எம்.பி.க்களும், 18 எம்.எல்.ஏ. க்களும் காங்கிரசுக்கு இருப்பதால் செலவுகளை நீங்கள் தான் பகிர்ந்து கொள்ள வேண்டும்" என்று சொல்லியிருக்கிறார்.

அழகிரி: அதனடிப்படையில், எம்.பி.க்கள் ஒவ்வொருவரும், 15 லட்சமும், எம்.எல்.ஏ.க்கள் தலா 5 லட்சம் தர வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து, இந்த பணத்தை யாரிடம் கொடுக்க வேண்டும் ? யார் இதற்கு பொறுப்பேற்றுக் கொள்வது ? என்கிற விவாதம் வந்தபோது, தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரியிடம் தான் மொத்த தொகையும் தர வேண்டும் ; அவர் பார்த்துக்கொள்வார் என்று சொல்லப்பட்டுள்ளது.

இதைக்கேட்டதும் ஜோதிமணி கொந்தளித்துவிட்டார்.. "அழகிரி பொறுப்புக்கு வந்த பிறகு கட்சியில் வெளிப்படைத்தன்மை (ட்ரான்ஸ்ஃபரன்சி) இல்லாமல் போய்விட்டது. கட்சியில் நிறைய தவறுகள் நடக்கின்றன" என்று கரூர் எம்.பி.ஜோதிமணி சொல்ல, அழகிரிக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது.

ஜோதிமணி: "யாரிடம் ட்ரான்ஸ்ஃபரன்சி இல்லை ? உன் ட்ரான்ஸ்பரன்சி என்னன்னு நான் சொல்லவா?" என்று ஆரம்பித்து, ஜோதிமணியையும் செந்தில் பாலாஜியையும் இணைத்து ஒரு விதமாக அட்டாக் பண்ணாராம்.. அப்போது அந்த பேச்சில் "கோடிகள்" குறித்த பண விவகாரமெல்லாம் வந்திருக்கிறது.

உடனே இதைக்கேட்டு பொறுக்க முடியாத ஜோதிமணி, அழகிரியை ஒருமையில் அட்டாக் பண்ண, இரண்டு பேரும் மோசமாக வார்த்தைகளை விட்டு வீசியிருக்கிறார்கள்.

ரிப்போர்ட்: இவர்கள் 2 பேரையும் சிரமப்பட்டுத்தான் அமைதிப்படுத்தியிருக்கிறார் அஜோய்குமார். இதனால் ஜூம் மீட்டிங் செம ஹாட்டாக போயுள்ளது.. கடைசியில், இந்த பஞ்சாயத்து ராகுல்காந்தி வரையும் சென்றுவிட்டது.. அஜோய்குமார் மற்றும் ஜோதிமணியிடம் ராகுல்காந்தி இதுகுறித்து கேட்டாராம்.. அதேபோல, அழகிரியிடமும் கார்கே விளக்கம் கேட்டுள்ளாராம். அடுத்து என்ன நடக்க போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்...!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+