சுதீஷுக்கு தொகுதி ரிசர்வ்டு? பிரேமலதா தேர்தல் கணக்கு.. டிக் அடித்த பாஜக! கையை பிசையும் பாரிவேந்தர்!
சென்னை: கள்ளக்குறிச்சி தொகுதியில் மீண்டும் எல்.கே.சுதீஷை களமிறக்க பிரேமலதா விஜயகாந்த் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாஜகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2024 மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், கூட்டணி கணக்குகளுடன் அரசியல் கட்சிகள் வேட்டைக்குத் தயாராகி விட்டன. தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி என மும்முனை போட்டி நிலவும் என்று தெரிகிறது. கடந்த தேர்தலைப் போல அல்லாமல், இந்த முறை கூட்டணிகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

கூட்டணி கணக்குகள்: பாஜக - அதிமுக கூட்டணி இரண்டாகப் பிளவுபட்டுள்ளது. முன்பு இந்தக் கூட்டணியில் இருந்த தேமுதிக உள்ளிட்ட கட்சிகள், எந்தப் பக்கம் பாயும் என்பது புரியாத புதிராகவே உள்ளது. திமுக கூட்டணியில் பெரம்பலூர் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் பாஜக கூட்டணியில் இணைகிறார்.
வரும் தேர்தலிலும் ஒரு தொகுதியில் போட்டியிட பாரிவேந்தர் திட்டமிட்டுள்ளார். இந்த முறை பெரம்பலூருக்குப் பதிலாக தனது சொந்த தொகுதியான கள்ளக்குறிச்சியை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பாஜக கூட்டணியில் கள்ளக்குறிச்சி தொகுதி பாரிவேந்தருக்கு டிக் அடிக்க அதிக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. கள்ளக்குறிச்சி தொகுதியை குறிவைத்து தேர்தல் வேலையையும் தொடங்கிவிட்டார் பாரிவேந்தர்.
கள்ளக்குறிச்சி சீட் குறி: திமுக அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் எம்.பி கவுதம சிகாமணி ஆகியோர் அமலாக்கத்துறை ரெய்டுக்கு உட்படுத்தப்பட்டனர். தொடர்ந்து சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றார் பொன்முடி. கவுதம சிகாமணி கள்ளக்குறிச்சி தொகுதியிலிருந்து எம்.பியாக தேர்வு செய்யப்பட்டவர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி தொகுதியை பலரும் விரும்புகின்றனராம்.
இந்நிலையில் தான் பாரிவேந்தருக்கு ஒரு சிக்கல் முளைத்துள்ளது. பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக பிரிந்துள்ள நிலையில் தனி அணியை அமைக்க முயற்சி செய்து வரும் பாஜக, தேமுதிக, அமமுக, ஓபிஎஸ், பாமக ஆகிய கட்சிகளை தங்கள் அணியில் இணைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஓபிஎஸ், டிடிவி தினகரன் இருவரும் பாஜக கூட்டணியில் இணைவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகத் தெரிகிறது.
பாஜக அணியில் தேமுதிக: அந்தவகையில், தேமுதிகவுடன் பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. தேமுதிக, தாங்கள் போட்டியிட விரும்பும் 4 தொகுதிகளை பாஜகவிடம் கேட்டதாகத் தெரிகிறது. ஆனால், பாஜக தரப்பில் உங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள 1 சீட் தருகிறோம், தேமுதிக சார்பில் முதல் முறையாக எம்.பி கிடைப்பார் எனச் சொன்னதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக தேமுதிக தலைமை தீவிரமாக ஆலோசித்து வருகிறதாம். கள்ளக்குறிச்சி தொகுதியை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்பது பிரேமலதா தரப்பின் கணக்காம். கள்ளக்குறிச்சி தொகுதியில் விஜயகாந்த்தின் மைத்துனர் எல்.கே.சுதீஷை போட்டியிட வைக்க பிரேமலதா கணக்கு போட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பாஜகவும், சுதீஷுக்கு கள்ளக்குறிச்சியை ஒதுக்க பச்சைக்கொடி காட்டியுள்ளதாம்.
மீண்டும் களமிறங்கும் சுதீஷ்: ஏற்கனவே, லோக்சபா தேர்தல்களில் 3 முறை போட்டியிட்டுள்ளார் எல்.கே.சுதீஷ். 2009 எம்.பி தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியில் தேமுதிக சார்பாக நின்று தோற்றார் சுதீஷ். 2014 லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியில் இருந்தபோது, சேலம் தொகுதியில் நின்று வெற்றி வாய்ப்பை இழந்தார். 2019 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேமுதிக தேர்தலைச் சந்தித்தபோது கள்ளக்கறிச்சியில் தோற்றார் சுதீஷ். இந்நிலையில் தான் அவர் மீண்டும் கள்ளக்குறிச்சி தொகுதியை குறி வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
பாஜக - தேமுதிக இடையே ஏற்பட்டுள்ள கூட்டணி தொகுதி உடன்பாடு, ஐஜேகே தலைவர் பாரிவேந்தருக்கு அதிருப்தி கொடுத்துள்ளது. காரணம், கள்ளக்குறிச்சி தொகுதி பங்கு போடப்படுவது தான். கள்ளக்குறிச்சி தொகுதி சீட் தனக்கு உறுதி என்ற நம்பிக்கையில் இருந்தவருக்கு சுதீஷின் எண்ட்ரி அதிர்ச்சி கொடுத்துள்ளதாம். கள்ளக்குறிச்சி ஃபைட்டில் முந்தப்போவது யார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications