வைகோவா? கூட்டத்தை பிளந்து கொண்டு வந்த நபர்.. என்னாது வாரணாசியா? கிறுகிறுத்த புதுக்கோட்டை.. அதுக்காக?
சென்னை: மதிமுகவின் பிரச்சாரங்கள் தமிழகமெங்கும் வேகம் எடுத்து வருகிறது. அதேபோல, மதிமுகவுக்காக, கூட்டணி கட்சிகளும் ஆதரவை திரட்டி வருகின்றன
சில நாட்களுக்கு முன்பு, நம்முடைய "ஒன் இந்தியா" தமிழில் ஒரு பிரத்யேகமான செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தோம்.. அதாவது, மதிமுக வேட்பாளர் அறிமுகக்கூட்டத்தில், "செத்தாலும் இனி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடமாட்டேன்" என ஆவேசப்பட்டு பேசியிருந்தார் துரைவைகோ.. உணர்ச்சி வேகத்தில் அவர் அவ்வாறு பேசியிருந்தாலும், இதனை உடன்பிறப்புகள் ரசிக்கவில்லையாம்.

அதுமட்டுமல்ல, துரையின் இந்த பேச்சு ஸ்டாலினுக்கும் வைகோவுக்கும் தெரியப்படுத்தப்பட்டது. துரையின் பேச்சை ஸ்டாலினும் ரசிக்கவில்லையாம். வைகோவோ, தன்னுடைய மகனை தொடர்புகொண்டு செம டோஸ் கொடுத்திருக்கிறார்.
சின்னப்பையன்: இந்த நிலையில், ஸ்டாலினை தொடர்பு கொண்ட வைகோ, 'சின்னப்பையன், ஏதோ தெரியாமல் பேசிவிட்டான். மன்னியுங்கள் தளபதி. நீங்கள் தான் பெரிய மனசு வெச்சு துரையை ஜெயிக்க வைக்க வேண்டும். அவன் ஜெயிக்கலைன்னா எனக்கு நிம்மதி இருக்காது" என்று மனம் கலங்கி பேசியிருக்கிறார் வைகோ.
அதற்கு ஸ்டாலின், "துரைக்கு அட்வைஸ் செய்யுங்கள்" என்று வைகோவிடம் தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்த நினைத்திருந்த நிலையில், மனம் கலங்கி வைகோ பேசியதில், ஸ்டாலினின் மனம் இளகிவிட்டதாம். உடனே வைகோவை ஆறுதல்படுத்திய ஸ்டாலின், "நீங்க நிம்மதியா இருங்க . துரையை ஜெயிக்க வைப்பது என் பொறுப்பு" என தெம்பூட்டினாராம். பிறகு, துரை எப்படியாவது ஜெயித்தாக வேண்டும் என்று நேருவிடமும் மகேஷிடமும் அழுத்தமாகவும் சொன்னாராம் ஸ்டாலின்.
ஆனால், இப்போது, வைகோவின் தடுமாற்ற பேச்சுக்கள், பிரச்சாரங்களில் சலசலப்பை உண்டுபண்ணி வருகிறதாம். இது தொடர்பான வீடியோக்களை எதிர்க்கட்சிகள் இணையத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.
அரியலூர்: அரியலூர் தொகுதியில் விசிக திருமாவளவனை ஆதரித்து வைகோ பேசும்போது, "இந்த தேர்தல், ஜனநாயகத்துக்கும் சர்வாதிகாரத்துக்கும், இடையே நடக்கும் தேர்தலாகும்.. பாசிசத்துக்கும் - குடியரசு கட்சிக்கும் இடையே நடைபெறுகின்ற போட்டியாகும் என்றதுமே, அங்கிருந்த கூட்டம் திகைத்து விட்டதாம்.
அதுமட்டுமல்ல, அரியலூர் மாணவி அனிதா, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு, நெருப்பையும் வைத்து கொண்டு மறைந்தே போனார்.. அனிதாவின் தியாகத்திற்கு வீரவணக்கம் செலுத்துகிறேன்" என்றும் கூறினார்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பிரச்சாரத்தில் பேசியபோதும், பாஜக மறுபடியும் ஆட்சிக்கு வந்தால் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் அடியோடு மாற்றப்படும். தலைநகர் சென்னையில் இருந்து திருச்சிக்கு மாற்றப்படும்.. இல்லை... இல்லை... வாரணாசிக்கு மாற்றப்படும்" என்றார்.
வைகோ: அதுபோலவே, பிரச்சாரத்தில் வைகோ பேசிக்கொண்டிருந்தபோது, கூட்டத்தில் இருந்த ஒருவர் வைகோவை பார்த்து குடிபோதையில் கத்தினார். உடனே தன்னுடைய பேச்சை நிறுத்திய வைகோ, மதுவை ஒழிக்க வேண்டும் என்பதற்காகத்தான் என்னுடைய அம்மா உயிரை விட்டார். முதல்ல அந்தாள வெளியில் தூக்கி போடுங்க" என்று கோபமாக சொன்னார்..
அந்த நபர் ஏதோ பதிலுக்கு சொல்ல, "கட்சிக்காரர் என்றால் குடிக்க வேண்டுமா? நான் அடிவயிறு வலிக்க பேசிக் கொண்டிருக்கிறேன்" என்று தன்னுடைய பேச்சை தொடர்ந்தார் வைகோ.
குழப்பம்: வைகோவின் இந்த தடுமாற்றமான பேச்சு, பொதுமக்களை சில சமயம் குழப்பத்தில் ஆழ்த்திவிடுகிறது. எதிர்க்கட்சிகளோ, இதை வீடியோவாக்கி ட்ரோல் செய்ய துவங்கி உள்ளனர்.
ஆனால், வைகோவின் கர்ஜனை பேச்சுக்களை இந்த தமிழகம் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது.. தமிழகத்தின் மிகச்சிறந்த பேச்சாளராக மறைந்த தா.பாண்டியனுக்கு அடுத்து வைகோ உருவானார்.. திமுக பொதுக்கூட்டங்களில் வைகோ பேசினால், அக்கட்சி தொண்டர்களுக்கு ஒருவித சிலிர்ப்பு ஏற்பட்டுவிடும்.. உலக வரலாற்றை கரைத்து குடித்தவர்..
வீடியோ: தமிழருக்கு ஒரு பிரச்சனை என்றால் அங்கு முதல் ஆளாக வைகோதான் நிற்பார்.. தமிழ் வளத்துக்கு ஒரு களங்கம் என்றால், அங்கேயும் வைகோதான் கெத்தாக நிற்பார்.. இதற்காக அவர் செய்த போராட்டங்கள் ஏராளம்.. இவர்மீது தொடுக்கப்பட்ட வழக்குகள் ஏராளம்.. ஆனால், இதையெல்லாம் மறந்து, மூத்த தலைவர் என்பதையும் மறந்து, வயோதிகம், உடல்நிலை காரணங்களையும் மறந்து, வாய்தவறி பேசும் வார்த்தைகளையெல்லாம் பிடித்துகொண்டு, எதிர்க்கட்சிகள் ட்ரோல் செய்வதெல்லாம் ரொம்ப ஓவர்...!!!












Click it and Unblock the Notifications