சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"நல்லக்கண்ணு", சசிகலாவிடம் கூட்டணி பேசினாரே.. ஜெயலலிதா என்ன குழந்தையா.. அந்த சாராய அதிபர்: மணி பளிச்

சசிகலா + ஜெயலலிதா இருவரின் நட்பு குறித்து பத்திரிகையாளர் மணி நமக்கு பேட்டி தந்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: ஜெயலலிதா ஒன்றும் குழந்தை கிடையாது.. முதல்வராகும்போது 43 வயதை கடந்தவர்.. நல்லது கெட்டது அவர் நேரில் பார்த்தவர்.. தன்னுடன் யாரை வைத்திருந்தால் எது நடக்கும் என்று இவருக்கு தெரியாதா? எல்லாவற்றிற்கும் சசிகலாவையே குற்றஞ்சாட்ட முடியாது என்று மூத்த பத்திரிகையாளர் மணி கருத்து தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவோடு இணைந்து சசிகலா ஆடம்பர வாழ்க்கையை மட்டுமில்லாமல் நெருக்கடி காலத்தையும் சேர்ந்து ஒன்றாக கழித்தவர்.. ஜெயலலிதாவுடன் சசிகலாவும் கைதானவர்.

வளர்ப்பு மகன் தத்தெடுத்தது துவங்கி, சசிகலா குடும்பத்தினர் ஆதிக்கம் செலுத்தியது வரை எல்லாம் சசிகலாவால்தான் என சொல்லப்பட... அதுவே மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. சசிகலாவுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ஜெயலலிதா அறிவித்தார்,

எங்களை வைத்து வழக்கை முடிச்சிட்டாங்க! காரணமான ஸ்டாலின்.. திறவுகோலாக ஜெயலலிதா! உருகிய ரவிச்சந்திரன்! எங்களை வைத்து வழக்கை முடிச்சிட்டாங்க! காரணமான ஸ்டாலின்.. திறவுகோலாக ஜெயலலிதா! உருகிய ரவிச்சந்திரன்!

 ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

ஆனால் அடுத்த சில நாளிலேயே, எனது உடன்பிறவா சகோதாரி சசிகலா என்றார்.. "சசிகலா எப்பவுமே என்னோடுதான் இருப்பார். அவரைப்பற்றிய எந்த கேள்வியும் அவசியமற்றது என்று வெளிப்படையாகவே சொல்லியவர் ஜெயலலிதா.. கிட்டத்தட்ட 32 ஆண்டுகால நட்பின் அடிப்படையில் இவர்கள் இணைபிரியாமல் இருந்தனர். இந்நிலையில், ஜெயலலிதாவுடன் சசிகலாவின் உறவு எந்த அளவுக்கு வலுப்பெற்று இருந்தது என்பது குறித்து மூத்த பத்திரிகையாளர் மணி நம்மிடம் பகிர்ந்து கொண்டார். ஒன் இந்தியா தமிழுக்கு மணி அளித்த ஸ்பெஷல் பேட்டிதான் இது:

பொதுப்புத்தி

பொதுப்புத்தி

"பொதுபுத்தியில் உள்ள கருத்து என்னவென்றால், ஜெயலலிதா நல்லவர், சசிகலா கெட்டவர்... இப்படித்தான் பாமர மக்களின் புரிதலாக உள்ளது.. ஜெயலலிதா ஒன்றும் குழந்தை கிடையாது.. முதல்வராகும்போது 43 வயதை கடந்தவர்.. நல்லது கெட்டது அவர் நேரில் பார்த்தவர்.. தன்னுடன் யாரை வைத்திருந்தால் எது நடக்கும் என்று இவருக்கு தெரியாதா? ஒருவேளை அப்படியும் தவறுகள் நடந்திருந்தால், அதற்கு ஜெயலலிதாதான் பொறுப்பு, சசிகலா கிடையாது.. ஜெயலலிதா நல்லவர் என்றால், சசிகலாவும் நல்லவர்தான்.. ஜெயலலிதா கெட்டவர் என்றால் சசிகலாவும் கெட்டவர்தான்..

 ஐயா நல்லக்கணணு

ஐயா நல்லக்கணணு

சசிகலா என்ற ஆளுமை சர்ச்சைக்குரிய ஆளுமை என்பதில் சந்தேகமில்லை.. ஆனால், தவறுகளுக்கு ஜெயலலிதாவும்தான் பொறுப்பு.. காரணம் இவர்தான் முதல்வர்.. இவரது உதவியாளரால் தவறு நடக்கிறதென்றால், ஜெயலலிதாதான் அதற்கு பொறுப்பேற்க வேண்டும்.. போயஸ் கார்டனைவிட்டு வெளியே அனுப்பிவிட்டு மறுபடியும் சேர்த்து கொண்டு கடைசிவரை கூடவே இருந்தார்.. 2014 மற்றும் 2014 தேர்தல்களில் வேட்பாளர்களை தேர்வு செய்தது சசிகலாதான்.. 1991-ல் கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து பேசியது ஜெயலலிதா என்றாலும், 2001 முதல் நடந்த 5 சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில், கூட்டணி கட்சிகளும் பேச்சுவார்த்தை நடத்தியதே சசிகலாதான்..

 நல்லக்கண்ணு

நல்லக்கண்ணு

அந்த கூட்டணிகளை உறுதிபடுத்தியதே சசிகலாதான்.. ஜெயலலிதா கையெழுத்து மட்டும் போட்டுவிட்டு, சசியிடம் பேசிக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு போய்விடுவார்.. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நல்லகண்ணு, சிபிஎம் வரதராஜன், ராமகிருஷ்ணன் இவங்க எல்லாருமே அன்னைக்கு சசிகலாவிடம்தான் கூட்டணி பேசினார்கள்.. நல்லகண்ணு ஐயா சசிகலாவிடம்தான் கூட்டணி உறுதி செய்ததும், பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்.. காங்கிரசும் மூப்பனார் இருக்கும்போது கூட்டணி அவரிடம்தான் பேசியது..

அபத்தம்

அபத்தம்

2014, 2016-களில் வேண்டுமானால் இவர்கள் தனியாக நின்று தேர்தலை சந்தித்திருக்கலாம்.. ஆனால், 2001, 2004, 2006, 2009, 2011 தேர்தலிகளில் முழுக்க முழுக்க கூட்டணி பேச்சுவார்த்தை, இன்னாருக்கு இவ்வளவு சீட் என்று பேசி முடித்ததே சசிகலாதான்.. ஜெயலலிதா அத்தகைய பொறுப்பை அவருக்கு தந்திருக்கிறார் என்பதே அனைவருக்கும் அப்போது தெரியும்.. அப்படி இருக்கும்போது சசிகலா மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் எல்லாம் அபத்தமானவை.. என்னைக் கேட்டால் சிறையில் இருந்து சசிகலா வந்ததுமே, அரசியலில் இருந்து கண்ணியமாக ஒதுங்கி சென்றிருக்க வேண்டும்.. போகாததன் விளைவுதான் தன்னை பெயரை தானே கெடுத்து கொண்டிருக்கிறார்.. ஜெயலலிதாவின் வரலாறு எழுதப்படுமானால், சசிகலாவின் வரலாறும் அதில் சேர்ந்தேதான் எழுதப்படும்..

 சாராய அதிபர்

சாராய அதிபர்

2 பேரும் சேர்ந்துதான் ஊரையே கொள்ளையடிச்சாங்க... அப்படி பல சொத்துக்களை வாங்கியபோதுதான் கொடநாடு பங்களாவையும் வாங்கியிருக்காங்க.. தீர்ப்பிலும் அது இருந்தது.. சசிகலா எக்கச்சக்கமா காசு பார்த்தாங்க. ஜெயலலிதா குறைவாக காசு பார்த்தாங்க..
தமிழகத்தில் முக்கிய தொழிலதிபர், எம்ஜிஆருக்கு நெருக்கமானவர், மருத்துவ கல்லூரியை நடத்துவர், சாராய அதிபர், கல்வித்தந்தை என்பார்கள்.. அவர்தான், வெள்ளைக்காரன் ஒருத்தன்கிட்ட இருந்து கொடநாடு எஸ்டேட்டை வாங்கி, அதை ஜெயலலிதா பினாமி பெயரில் எழுதுகிறார்

 கல்வித்தந்தை

கல்வித்தந்தை

குணா தீர்ப்பில், இந்த கொடநாடு எஸ்டேட் கொள்ளையடித்த சொத்து, பினாமி பெயரில் உள்ளது என்று 2014 செப்டம்பரில் எழுதப்பட்டுள்ளது.. 2015, மே மாதம் குமாரசாமி தீர்ப்பில் விடுதலையாகிறது, 2017 பிப்வரியில், கணிதமேதை தீரப்பை மாற்றிவிட்டு, குணா தீர்பபுதான் செல்லுபடியாகும் என்கிறது.. உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி, கொடநாடு எஸ்டேட் என்பது அரசு கையகப்படுத்த வேண்டும் எனதுதான் எடப்பாடியும் பறிமுதல் செய்யவில்லை, ஸ்டாலினும் அதை முடக்கவில்லை.. தமிழக அரசு அதை கையகப்படுத்தி, பொதுமக்கள் சொத்தாக மாற்ற வேண்டும்" என்றார்.

English summary
Did Nallakannu hold alliance talks with VK Sasikala, says Sr Journalist Mani : Exclusive
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X