வில்லிவாக்கத்தில் சொன்னதை நெப்போலியன் செய்தாரா? சென்னையில் விஜய் தந்த ரணம்.. திமுக அழுத்தம் காரணமா?
சென்னை: விஜய் என்ன சாதித்துவிட்டார் என்று ஒய் பிரிவு பாதுகாப்பு? இத்தனை வருடங்களாக தனி விமானத்தில்தான் பயணம் செய்துட்டு இருந்தாரா? மனைவியையும் கிட்ட சேர்த்துக்கல, தாய், தகப்பனையும் கிட்ட சேர்த்துக்கல.. மகனையும் சேர்த்துக்கல. சொந்த குடும்பத்தையே கவனிக்காதவர், நம்மளை எப்படி கவனிப்பார் என்று மக்களுக்கு கேள்வி வரத்தானே செய்யும்? என்று யூடியூப் சேனல் ஒன்றுக்கு நடிகர் நெப்போலியன் பேட்டி ஒன்றை தந்துள்ளார்... இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.
Cheyyaru Balu Official என்ற யூடியூப் சேனலில் பேசியிருக்கும் மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு, "நடிகர் நெப்போலியன் பயங்கர ஆக்ரோஷமான பேட்டியை தந்துள்ளார்.. அதில் கடுமையாக விஜய்யை தனிப்பட்ட முறையில் தாக்கி பேசியிருக்கிறார்..

நெப்போலியன் தன்னுடைய பேட்டியில், "சினிமா நடிகர்கள் என்பவர்கள் நட்சத்திரம் போன்றவர்கள்.. குறிப்பிட்ட நேரத்தில் மட்டும்தான் நட்சத்திரங்கள் தெரியும்.. அதனால்தான் நட்சத்திரங்களுக்கு கிரேஸ் அதிகம். அதனால்தான் அந்த நட்சத்திரத்தை பார்க்க மக்கள் இந்தளவுக்கு கூடுகிறார்கள்..
நெப்போலியன் ஏன் இப்போது பேசணும்
ஒன்று நடிகராகவே இருந்துவிடுங்கள், அல்லது அரசியல்வாதியாக இருந்துவிடுங்கள்.. மதில்மேல்பூனை போல இருக்க வேண்டும். அரசியல்வாதியாகத்தான் வருவேன் என்றால், மக்களோடு மக்களாக மாறிவிடுங்கள்.
அதைவிட்டுவிட்டு, கேரவனை விட்டு இறங்காமல் அரசியல் செய்வது, லைட் போட்டு அணைப்பது, இதெல்லாம் சரியல்ல. எளிய மக்களுக்கான தலைவன் என்று சொல்லி கொள்ளும் விஜய், கன்னியாகுமரியிலிருந்து நடைபயணத்தை ஆரம்பித்திருக்க வேண்டியதுதானே? அப்படி கூட்டம் கூடினால், அந்த கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு தவெக நிர்வாகிகளுக்கு உள்ளது..
வில்லிவாக்கம் தொகுதி
தன்னுடைய அப்பா, அம்மாவை கிட்ட சேர்க்கல, மனைவி, பிள்ளைகளையும் வீட்டில் சேர்க்கல. அப்படியிருக்கும்போது நீங்கள் எப்படி மக்களுக்கு நன்மை செய்ய போறீங்க" என்றெல்லாம் நெப்போலியன் பேசியிருக்கிறார்.
2001-ல் வில்லிவாக்கம் தொகுதியில் திமுக தரப்பில் சீட் தரப்பட்டது. இந்தியாவிலேயே பெரிய தொகுதியான அதில் வெற்றி பெற்ற நெப்போலியன் பேட்டி ஒன்றை அந்த நேரத்தில் தந்திருந்தார்.. அதில், நான் அரசியலிலிருந்து சினிமாவுக்கு வந்தவன். இனிமேல் மக்கள் பணிக்காக நான் தமிழ்நாட்டில் வில்லிவாக்கம் தொகுதியில்தான் இருப்பேன்" என்று கூறியிருந்தார்.
திமுகவின் அழுத்தம்
அப்படி சொன்னவர் இன்று அமெரிக்காவில் உள்ளார்.. அங்கே உட்கார்ந்து கொண்டு விஜய்யை விமர்சிக்க காரணம், இப்போதும் நெப்போலியன் திமுகவின் அழுத்தத்தில் உள்ளார்.. திமுகவின் விசுவாசிதான் அவர். திமுகவின் அபிமானிதான்.
அன்று போக்கிரி பட ஷூட்டிங்கின்போது, நெப்போலியனின் அமெரிக்க நண்பர்கள் வந்துவிட்டார்கள்.. எப்படியாவது விஜய்யுடன் ஒரு போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் ஆசைப்பட்டார்கள். உடனே அவர்களை விஜய் தங்கியிருந்த கேரவனுக்கு நெப்போலியன் அழைத்து சென்றார். ஆனால், கேரவன் வாயிலில் நின்றிருந்த செக்யூரிட்டி நெப்போலியனை உள்ளே அனுமதிக்கவில்லை.
கேரவன் சம்பவம்
உடனே நெப்போலியன் கேரவன் கதவை திறக்க முயன்றபோது, அந்த செக்யூரிட்டி நெப்போலியனின் கையை தட்டிவிட்டார்..
இதனால் ஏற்பட்ட சலசலப்பால், சத்தம் கேட்டு, கேரவன் உள்ளிருந்து கதவை திறந்து வெளியே வந்த விஜய் நெப்போலியனிடம், "உங்களுக்கு அறிவு இருக்கா? நீங்களும் ஒரு நடிகர்தானே? நான் உள்ளே ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கிற நேரத்துல, ஏதோ நாயை திறந்து விட்டது மாதிரி, கதவை திறந்து வருவீங்களா? மேனர்ஸ்னா என்னன்னு தெரியாதா? என்று கன்னாபின்னாவென்று விஜய் பேசிவிட்டார்.
ஆறாத ரணம்
உடனே நெப்போலியனுக்கு உச்சக்கட்ட அவமானமாகி விட்டது.. அதுவும் வெளிநாட்டிலிருந்து வந்த அவரால் அடுத்த சீனை நடிக்கவே முடியவில்லை..
அந்த கேரவன் சம்பவத்தை நெப்போலியன் இன்னும் மறக்கவில்லை.. அந்த ரணத்தை தான் இப்போதும் தன்னுடைய காரசார பேட்டி மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார். நெப்போலியன் நடிகனாக இருந்தபோதுகூட இவ்வளவு ஆக்ரோஷமாக பேட்டியை தந்ததில்லை..
விஜய் மீதான கோபத்தை அதில் வெளிப்படுத்தியிருக்கிறார் நெப்போலியன்.. பழைய விஜய் இப்போதும் அப்படியேதான் இருப்பார் என்று சொல்ல முடியாது.. ஆனால், இப்போது ஏன் இதை நெப்போலியன் பேச வேண்டும்?" என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications