"அச்சாணியே" முறியுது... "அவரை" உள்ளே தூக்கி வையுங்க.. ஸ்டாலினே சொல்லிட்டாராமே..டக்குனு பார்த்த பாஜக
சென்னை: செந்தில் பாலாஜியிடம் விசாரணை முடிந்துள்ள நிலையில், அதுகுறித்து பிரத்யேகமான தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது. என்ன அது?
எம்பி தேர்தலுக்கு முன்பேயே, பலம்வாய்ந்த திமுகவை வீழ்த்த, பாஜக பக்காவாக காய்களை நகர்த்தி வருகிறது.. முக்கியமாக டேமேஜ் செய்வதன் மூலம், திமுக மீதான நன்மதிப்பை குறைக்கும் வியூகத்தையும் கடந்த 2 வருட காலமாகவே தமிழக பாஜக முன்னெடுத்து வருகிறது.

இந்த புள்ளியிலிருந்துதான், அதிமுகவுடன் முரண்பட்டு நின்றது பாஜக.. நிஜமான எதிர்க்கட்சி தாங்கள்தான் என்ற அஸ்திரத்தையும், திராவிட கட்சிகள் மீது வீச துவங்கியது.
சுணங்கிய அதிமுக: அந்த நேரத்தில், உட்கட்சி பிரச்சனையால், சற்று சுணங்கிப்போன அதிமுக, இந்த விஷயத்தில் அண்ணாமலையிடம் கோட்டைவிட்டது என்றே சொல்லலாம். அதிமுக Vs திமுக என்பதையும் முறியடித்து, திமுக Vs பாஜக என்ற கோணத்தை முன்னெடுத்தது பாஜக..
ஆனால், இது தமிழக அரசியலுக்கு சாத்தியமாகாது என்றாலும், அப்படி ஒரு பிம்பத்தை கட்டமைக்க, கமலாலயம் எடுத்துக்கொண்ட முயற்சிகளும், உழைப்பும் அதிகம் என்றே சொல்லலாம். அதில் பெற்ற வெற்றியையடுத்து, திமுக அமைச்சர்களின் மீதான வழக்குகளில் கவனத்தை திருப்பியது... திமுகவுக்கு செக் வைப்பதற்காகவே, மத்திய அரசின் ஏஜென்சிகள் செயலாற்றுவதாக உடன்பிறப்புகளின் குற்றச்சாட்டும் வலுப்பெற்றுள்ளது.
பொன்முடி: அடுத்தடுத்த கணைகள் அமைச்சர்கள் மீது பாய்ந்து வருகின்றன. பொன்முடி வழக்கின் தீர்ப்பு முடிந்த நிலையில், மீண்டும் பார்ட் 2- ஆரம்பமாகி உள்ளது. அடுத்து, அனிதா ராதாகிருஷ்ணன், தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், என லிஸ்ட் விரிவடைந்து வருகிறது.
செந்தில் பாலாஜி விஷயத்திலேயே திமுகவால் ஒரு அளவுக்கு மேல் சப்போர்ட் செய்து பேசமுடியாத சூழலில், அவரது தம்பி, மற்றும் அவரது தம்பி மனைவி விசாரணை வளையத்துக்குள் வந்துள்ளபட்சத்தில், "சைலண்ட்" மோடிலேயே திமுக இருக்க வேண்டிய நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
சிறை மருத்துவமனை: இப்படிப்பட்ட சூழலில், செந்தில் பாலாஜி விசாரணை குறித்த, முக்கிய தகவல் ஒன்று நமக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளது.. அதாவது, அமலாக்கத்துறையின் 5 நாள் கஸ்டடிக்கு பிறகு சிறையில் அடைக்கப்பட்டார் செந்தில்பாலாஜி... கிட்டத்தட்ட 2 வாரங்கள் ஆகியும் அவர், சிறை அறைக்குள் செல்லாமல் சிறை மருத்துவமனையிலேயே இருக்கிறாராம்.
இதைக் கேள்விப்பட்ட ஸ்டாலின், "தேவையில்லாத கான்ட்ராவெர்சியை உருவாக்க வேண்டாம். அவரது உடல் நலம் ஆரோக்கியமாக இருக்கும்பட்சத்தில், சிறையின் செல்லில் இருக்க வையுங்கள்" என்று காவல்துறை உயரதிகாரிக்கு அறிவுறுத்தியுள்ளாராம்..
வீடியோ: இது ஒருபுறமிருக்க, 5 நாள் கஸ்டடியில் இருக்கும் போது, செந்தில் பாலாஜியிடம் தினமும் நடத்திய விசாரணையின் தகவல்கள் வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டது. ஸ்க்ரிப்ட்டாகவும் எழுதப்பட்டது. இதனை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர் அமலாக்கத்துறையினர். செந்தில்பாலாஜி, அவரது தம்பி மற்றும் பினாமிகளை குறிவைத்து ரெய்டில் இறங்குவதற்கு முன்பே பல ஆதாரங்களை சேகரித்திருந்தனர். ரெய்டிலும் எதிர்பாராத ஆதார ஆவணங்கள் சிக்கின.
இவைகள் இரண்டையும், கஸ்டடி விசாரணையில் செந்தில் பாலாஜி கூறியவைகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும் பணிகள் டெல்லியில் நடந்து வருகின்றன. இதனை வைத்து ஒரு ரிப்போர்ட் தயாரிக்கப்படுமாம்.
வாதங்கள்: அந்த ரிப்போர்ட்டை வைத்து, கூடுதலாக இன்னொரு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் அமலாக்கத்துறையினர் திட்டமிடுவதாக தகவல் கிடைக்கிறது. மேலும், வழக்கு விசாரணையின்போது, இந்த ரிப்போர்ட்டின் அடிப்படையில், அமலாக்கத்துறை சார்பில் வாதங்கள் முன்வைக்கப்படும் என்றும் நமக்கு தகவல்கள் கிடைக்கின்றன.
அதாவது, செந்தில் பாலாஜி விஷயத்தில் தற்சமயம் திமுக அமைதி காக்கிறது.. அத்துடன் அரசு மீதான எந்தவகையான சர்ச்சைகளும் வந்துவிடக்கூடாது என்பதில் கூடுதல் கவனத்தை செலுத்தி வருகிறது. அதனால்தான், ஆளுநர் ரவி, இந்த விவகாரத்தை அன்று கிளப்பியபோதே, செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கிவிடலாமா? என்று திமுக மேலிடம் யோசித்ததாம்.. இதுகுறித்து தன்னுடைய குடும்பத்தினரிடமும் முதல்வர் ஸ்டாலின் அப்போது விவாதித்திருக்கிறார்..
சலசலப்புகள்: அதேபோலதான் இப்போதும், "செந்தில் பாலாஜி உடல் நலம் ஆரோக்கியமாக இருக்கும்பட்சத்தில், சிறையின் செல்லில் இருக்க வையுங்கள்" என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருக்கிறாராம்.
தேர்தல் நெருங்கும் நேரத்தில், இதன்மூலம் தேவையில்லாத சர்ச்சைகைளை தவிர்க்கலாம் என்பதே முதல்வர் தரப்பின் எண்ணமாக உள்ளது.. அடுத்து என்ன நடக்க போகிறதென்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications