சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"நொறுங்கிடுச்சே".. ஐஏஎஸ் அதிகாரி காலுக்கடியில்.. செருப்பை வைத்த பெண் ஊழியர்.. "தர்மசங்கடத்தில்" திமுக

ஐஏஎஸ் அதிகாரியின் செருப்பை, பெண் ஊழியர் சுமந்தது தொடர்பான சர்ச்சை எழுந்துள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: ஒரே நேரத்தில் 2 சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்து, திமுக அரசுக்கு தர்மசங்கடத்தை தந்து வருகின்றன.. இந்த விஷயத்தை எதிர்க்கட்சிகளும் கையில் எடுத்து தங்களுக்கான அரசியலையும் செய்ய துவங்கிவிட்டன.. என்ன நடந்தது?

திமுக இந்த முறை ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, எதிர்க்கட்சிகள் கண்ணில் விளக்கெண்ணெய்யை ஊற்றிக் கொண்டு, குறைகளை தேடி பிடித்து குற்றஞ்சாட்டி வருகிறார்கள்.

அதற்கேற்றவாறு திமுகவின் சில சீனியர்கள் முதல் அதிகாரிகள் வரை ஏதாவது ஒரு சர்ச்சைகளில் சிக்கி விடுவதும் நிகழ்ந்து வருகிறது.. இதற்கு காரணம், பொது இடங்களில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை இவர்கள் பல சமயங்களில் மறந்துவிடுவதுதான்.

ஸ்டாலினை நெகிழ வைத்த திமுகவின் கடைக்கோடி தொண்டன் கோவிந்தராசு! சுற்றுப்பயணத்தில் ஒரு சுவாரஸ்ய நிகழ்வுஸ்டாலினை நெகிழ வைத்த திமுகவின் கடைக்கோடி தொண்டன் கோவிந்தராசு! சுற்றுப்பயணத்தில் ஒரு சுவாரஸ்ய நிகழ்வு

தர்மசங்கடம்

தர்மசங்கடம்

இதில் பெரும்பாலும் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் படித்தவர்கள்.. கருணாநிதியிடம் அரசியல் பழகியவர்கள்.. தமிழகத்தில் எவ்விதமான அரசியல் சூழல் இருக்கிறது? திமுக அரசுக்கு பாஜக மூலம் வரப்போகும் நெருக்கடி என்ன? அதை வைத்து, நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதையெல்லாம் சில நேரங்களில் மறந்தும், கடந்தும் விடுவதுதான், திமுக அரசின் தர்மசங்கடங்களுக்கு காரணமாகிவிடுகின்றன. "கட்சியினர் மற்றும் அமைச்சர்களின் செயல்பாடுகள் என்னை தூங்கவிடாமல் செய்கின்றன" என்று முதல்வர் ஸ்டாலின் மனம் வருந்தி சொல்லும் அளவுக்கு திமுகவில் அப்படியான சூழல்கள் அமைந்து வருகின்றன.

 ஷூ மாட்டினார்

ஷூ மாட்டினார்

இப்போதும் அப்படியான சம்பவங்கள் நடந்துள்ளன.. கடந்த டிசம்பர் 14ம் தேதி, உதயநிதி அமைச்சராக சிறப்பாக செயல்பட வேண்டி சென்னை அண்ணாசாலையில் உள்ள தர்காவில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பிரார்த்தனை செய்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இந்த நிகழ்வின்போது, அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு அவரது உதவியாளர்கள் தங்களது கைகளால் ஷூ மாட்டி விட்டுள்ளனர். இது தொடர்பான போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் அன்றைய தினமே வெளியாகி வைரலாகி சர்ச்சையை கிளப்பியது.. அதற்குள் இன்னொரு சம்பவம் வெடித்து கிளம்பி உள்ளது.

 காலில் செருப்பு

காலில் செருப்பு

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் ஆணையராக இருக்கிறார் ஐஏஎஸ் குமரகுருபரன்.. இவர் திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோவிலுக்கு நேற்று சென்றிருக்கிறார். கோவில் விசிட்டை முடித்து விட்டு புறப்படுவதற்கு தயாரானார். இதற்காக காரை நோக்கி அவர் சென்றார். அப்போது கோவில் பெண் ஊழியர் ஒருவர், குமரகுருபரனின் செருப்பை எடுத்து வந்து குமரகுருபரனின் கால்களுக்கிடையே வைக்கிறார். இந்த சம்பவம் பற்றிய வீடியோ வைரலாகி வருகிறது. முதல்வர் ஸ்டாலின் மற்றும் அரசின் உயரதிகாரிகளுக்கும் இந்த வீடியோ சென்றிருக்கிறது. இதை பார்த்த முதல்வரும் அதிகாரிகளும் அதிர்ச்சியடைந்துள்ளனர். சம்பவம் குறித்து விசாரிக்கப்படுகிறது.

 செருப்பு செருப்பு

செருப்பு செருப்பு

கோவிலில் குமரகுருபரன் செல்லும் இடமெல்லாம் அவரது செருப்பை பெண் ஊழியர் சுமந்து சென்றார் என்று ஒரு தரப்பில் சொல்கிறார்கள்.. ஆனால், மற்றொரு தரப்பிலோ, "இல்லையில்லை... செருப்பை அணிவதற்காக குமரகுருபரன் வந்த போது அந்த பெண் ஊழியர் தான் அவசரம் அவசரமாக அவரே செருப்பை தூக்கிக்கொண்டு வந்து குமரகுருபரன் அருகில் வைத்தார், செருப்பை எடுத்து வரச்சொல்லி அந்த பெண் ஊழியருக்கு குமரகுருபரன் சொல்லவில்லை" என்று இன்னொரு சாரார் சொல்கிறார்கள்.

 சமூக நீதி அரசியல்

சமூக நீதி அரசியல்

இப்படி இருவேறு மாறுபட்ட கருத்துக்கள் வலம்வரும் நிலையில், செருப்பை எடுத்து வர சொன்னதே கீழ் நிலை அதிகாரிகள் தான் என்றும், அதனால்தான் தனது செருப்பை எடுத்து வந்த பெண் ஊழியரை குமரகுருபரன் கடிந்து கொள்ளவில்லை என்றும் , கோவில் ஊழியர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.. இது தொடர்பான வீடியோ, போட்டோக்களும் இணையத்தில் வெளியாகி உள்ளன.. இந்த சம்பவங்கள் மறுபடியும் திமுக தலைமைக்கு தலைவலியை உண்டுபண்ணி வருவதுடன், எதிர்க்கட்சிளும் இந்த விஷயத்தில் தங்களுக்கான அரசியலை துவங்கி உள்ளனர். "சமூகநீதி" பேசும் திமுகவில் இப்படியா? என்றும் வழக்கமான கேள்விகளை கேட்க ஆரம்பித்துள்ளனர்.

English summary
Did the IAS Kumaragurubaran insult sanitation Female worker and what happened in Triplicane temple
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X