"மிஸ் யூஸ்" பண்றீங்களா.. எந்த பிரதமராவது இப்படி ஆளுநர் மாளிகையில் செய்வாங்களா?.. விசிக கேட்ட கேள்வி

கவர்னர் மாளிகையில் பாஜகவினர் ஆலோசனை நடத்தலாமா என்று வன்னியரசு கேட்கிறார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆளுநர் மாளிகையில் பாஜகவினரோடு பிரதமர் ஆலோசனை நடத்தலாமா? என்று விசிக கேள்வி எழுப்பி உள்ளது.

நேற்றைய தினம், செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவை முடித்துக் கொண்ட பிரதமர், கிண்டி ஆளுநர் மாளிகை சென்றார்.

அங்கு பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துவதாகவும், இந்த ஆலோசனையில், பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மாநில தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர்கள் எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பார்கள் என்றும் முன்னமேயே தகவல்கள் பரபரத்தன.

விரைவில் எம்பி தேர்தல் வரஉள்ள நிலையில், தமிழகத்தில் பாஜகவின் பிரதிநிதித்துவம் பெறுவது குறித்தும் தமிழக அரசியலில் பாஜக மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப் போவதாகவும் சொன்னார்கள்..

 பொன்.ராதா

பொன்.ராதா

அதன்படியே விளையாட்டு விழாவை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி காரில் நேராக ஆளுநர் மாளிகைக்கு சென்றார்.. சிறிது நேரம் ஓய்வெடுத்தார்.. பிறகு, தமிழக பாஜக தலைவர்கள், மூத்த தலைவர்கள் பிரதமரை சந்திக்க சென்றனர்.. கிட்டத்தட்ட அரை மணி நேரத்துக்கு மேலாக இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது.. ஆனால், என்ன பேசினார்கள் என்று தெரியவில்லை.. எம்பி தேர்தல் குறித்த வரஉள்ள நிலையில், தமிழக பாஜகவுக்கு புதிய நிர்வாகிகளின் தேவைகள் பற்றி பேசியதாக தெரிகிறது..

 பிளான் என்ன

பிளான் என்ன

அதேபோல, அதிமுகவில் உள்ள பூசல்களை பற்றியும் தமிழக நிர்வாகிகளிடம் பிரதமர் கேட்டறிந்ததாகவும் கூறப்படுகிறது.. இந்த சந்திப்பில் அரசியல் எதுவும் பேசவில்லை என்று, மாநில தலைவர் அண்ணாமலை சொல்லி இருந்தாலும், நிச்சயம் பாஜக - அதிமுக - திமுக என 3 கட்சிகள் குறித்தும் பேசியிருப்பார்கள் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.. நேற்றும் - இன்றும் சென்னையில் பிரதமர் தங்கி உள்ள நிலையில், மிகப்பெரிய எதிர்பார்ப்பு தமிழக அரசியலில் ஏற்பட்டும் வருகிறது.

 மிஸ் யூஸ்

மிஸ் யூஸ்

இந்நிலையில், ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த ஆலோசனையை விசிக விமர்சித்துள்ளது.. இதுகுறித்து அக்கட்சியின் வன்னியரசு பதிவிட்டுள்ள ட்வீட்டில், "ஆளுநர் மாளிகையில் ஆளுநருடனோ அல்லது மாநில வளர்ச்சி குறித்து முதல்வருடனோ, ஆலோசனை நடத்தலாம். ஆனால், பாஜக கட்சியினரோடு ஆளுநர் மாளிகையில் ஆலோசனைக்கூட்டம் நடத்துவது அதிகாரமீறல் ஆகாதா? இதற்குமுன் எந்த பிரதமராவது தனது கட்சியினரோடு ஆளுநர் மாளிகையை மிஸ் யூஸ் செய்திருக்கிறார்களா?" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

 கேள்விக்கணைகள்

கேள்விக்கணைகள்

இதற்கு பாஜகவினர் திரண்டு வந்து பதிலடி தந்து கொண்டிருக்கிறார்கள்... "ஏன் தலைமைச் செயலகத்தில் முதல்வரை திமுகவினர் சந்தித்து பேசுவதில்லையா? ஆளுநர் மாளிகையில் நேரடியாக இதுவரை கட்சி தலைவரை வைத்துக்கொண்டு கூட்டம் போட்டது இல்லைதான்., ஆனால், இவர்கள் கட்சி தொடர்பான ஆலோசனையை தான் செய்தார்கள் என்று உறுதியாக சொல்ல முடியுமா? தமிழகத்தில் இருக்கும் சட்ட ஒழுங்கை பற்றி, பாரத பிரதமரிடம், அவரது கட்சியை சேர்ந்தவர்கள் புகார் தரவோ, மனு கொடுக்கவோ போகக்கூடாதா? என்றும் வன்னியரசுக்கு பதில் கேள்வி கேட்டு வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+