சத்தமே இன்றி உதயநிதி சம்பவம்.. திமுக டாப் தலைகளே வியந்து பார்க்க.. குஷியில் "புதியவர்".. என்னாச்சு
சென்னை: அமைச்சர் பொன்முடி வசம் இருந்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொறுப்பு கூடுதலாக பிறப்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு வழங்கப்பட்டு உள்ளது. இதற்கு பின் நடந்த அரசியல் தொடர்பாக முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
3 நாட்களுக்கு முன் பொன்முடி சொத்துகுவிப்பு வழக்கில் குற்றவாளி என்று கூறி.. அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை கொடுக்கப்பட்டது. இதையடுத்து பொன்முடியும் மனைவி விசாலாட்சி, இருவரின் வயது மற்றும் மருத்துவ காரணங்களை சுட்டிக்காட்டி குறைந்த தண்டனை விதிக்க வேண்டும் என்று கை கூப்பி கோரிக்கை விடுத்தார்.

அதற்கு தங்களுக்கு மேல் உள்ள நீதிமன்றமான உச்ச நீதிமன்றத்தில் நிவாரணம் கோரலாம் என நீதிபதி தெரிவித்தார். தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அமைச்சர் பொன்முடி மற்றும் அவர் மனைவி விசாலாட்சி ஆகியோர் சிறை செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும் அமைச்சர் பொன்முடி எம்எல்ஏவாக பதவி வைக்கும் தகுதியை இழந்துவிட்டார்.
அதோடு 30 நாட்கள் அவகாசம் அவருக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. அதுவரை உயர் நீதிமன்ற தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
அமைச்சரவை மாற்றம்: இதையடுத்து அமைச்சர் பொன்முடி வசம் இருந்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொறுப்பு கூடுதலாக பிறப்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு வழங்கப்பட்டு உள்ளது. இதற்கு பின் நடந்த அரசியல் தொடர்பாக முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
ராஜகண்ணப்பன்: இதற்கு முன் ராஜகண்ணப்பன் ஏற்கனவே சிலமுறை சர்ச்சையில் சிக்கியவர்தான். ஜாதி ரீதியிலான புகாரில் சிக்கி இருந்த அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது கடந்த சில மாதங்களுக்கு முன் முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுத்தார். முதுகுளத்தூரில் ஒன்றிய நிர்வாகியாக இருந்தவர் ராஜேந்திரன். இவரை "எஸ்சி" என்று கூறி ஜாதி ரீதியாக திட்டியதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது புகார் வைக்கப்பட்டது.
இதையடுத்து ராஜகண்ணப்பன் அமைச்சரவை இலாக்கா மாற்றப்பட்டது. போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் பிறப்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். பிறப்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எஸ்எஸ் சிவசங்கர் போக்குவரத்து துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
பின்னணி: இந்த விவகாரத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு எதிராக பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வந்தன. ஆனால் ராஜகண்ணப்பன் தரப்போ.. அந்த ராஜேந்திரன் அதிமுக விற்கு நெருக்கமானவர். வேண்டும் என்றே எனக்கு எதிராக சர்ச்சையை கிளப்ப வேண்டும் என்று இப்படி செய்கிறார்கள் என்று கூறினார். நான் தலித் மக்களுக்கு எதிராக செயல்படுவதாக தவறான பிம்பம் கட்டமைக்கப்படுகிறது. நான் அமைதியாக இருந்தால் கூட என்னை வைத்து சர்ச்சையை உருவாக்குகிறார்கள், என்று குறிப்பிட்டு இருந்தார்.
பிறப்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மட்டும் இருந்த ராஜகண்ணப்பன் கடந்த சில நாட்களாக மிகவும் அமைதியாக இருந்தார். மூத்த அமைச்சராக இருந்தும் இவருக்கு ஒரு துறை மட்டும், அதிலும் பெரிதும் அதிகாரம் இல்லாத துறை மட்டுமே கொடுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில்தான் ராஜகண்ணப்பனுக்கு கதர் மற்றும் கிராம தொழில் வாரியம் துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது கொஞ்சம் ஹை பட்ஜெட் துறை ஆகும். ராணிப்பேட்டை காந்தி அமைச்சரிடம் இருந்து அந்த துறை வாங்கப்பட்டு இவருக்கு கொடுக்கப்பட்டது.
உதயநிதி: இந்த நிலையில் தற்போது உயர் கல்வித்துறை பொறுப்பு கூடுதலாக இவருக்கு வழங்கப்பட்டதற்கு காரணம் உதயநிதி ஸ்டாலின் என்று கூறப்படுகிறது. இந்த உயர் கல்வித்துறையை பெற திமுகவின் டாப் தலைகள் பலர் முயன்று உள்ளனர்.
அப்போது உதயநிதி சத்தமே இன்று இதை ராஜகண்ணப்பன் பெற உதவி செய்துள்ளாராம். உதயநிதியுடன் ராஜகண்ணப்பன் நெருக்கமாக இருந்ததே அவருக்கு இந்த பதவி கிடைக்க முக்கிய காரணம் என்கிறார்கள். உதயநிதி குட் புக்கில் ராஜகண்ணப்பன் வந்ததால் அவருக்கு இந்த பதவியும் தேடி வந்தது என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications