வெட்டப்பட்ட குழந்தைகள் தலை? ஏமாந்து விழித்த அதிபர் பிடன்.. திடுக்கிட்ட வெள்ளை மாளிகை! இஸ்ரேலில் திக்
நியூயார்க்: இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதல் "படுபயங்கரமான தீய செயல்" என்று அமெரிக்க அதிபர் ஜோ பிடன் தெரிவித்துள்ளார். அதோடு "பயங்கரவாதிகள் குழந்தைகளின் தலையை துண்டிக்கும் படங்களை" நான் பார்ப்பேன் என்று உண்மையில் நினைத்து கூட பார்க்கவில்லை என்று அதிபர் ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் - பாலஸ்தீன போர் உச்சத்தில் உள்ளது. இந்த போர் தொடர்பாக உலக நாடுகள் கடுமையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றன. ஈரான், ஈராக், சவுதி அரேபியா, ரஷ்யா, சீனா என்று பல்வேறு நாடுகள், நாட்டு தலைவர்கள் இந்த போரில் கருத்து தெரிவித்து விட்டனர். இந்த போரில் தற்போது அமெரிக்காவும் நேரடியாக தலையிட்டு உள்ளது. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் படைகளை அனுப்பி உள்ளது.
அமெரிக்கா பாதுகாப்பு படையின் ராட்சசன் என்று அழைக்கப்படும் யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர். ஃபோர்டு போர் கப்பல் மத்திய கிழக்கில் கால் பதித்து உள்ளது. இஸ்ரேலுக்கு உதவ உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கி கப்பலும் சில சிறந்த அமெரிக்க போர் விமானங்களும் இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டுள்ளன. தற்போது மத்திய கிழக்கு நாடுகளின் கடல் பகுதிக்குள் இந்த கப்பல் நுழைந்து உள்ளது. ஏற்கனவே இந்த போர் கப்பல் லெபனான் கடல் பகுதிக்கு அருகில் சென்று உள்ளது.

போரில் அமெரிக்கா: இந்த போரில் மற்ற நாடுகள் பங்கேற்பதை தவிர்க்கும் விதமாக.. வேறு நாடுகள் இதில் தலையிட்டால் அவர்களை ஒடுக்கும் விதமாக இந்த போர் கப்பலை அமெரிக்கா களமிறக்கி உள்ளது. இந்த நிலையில்தான் அமெரிக்க அதிபர் பிடன் இதில் ஷாக்கிங் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
அதன்படி, இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதல் "படுபயங்கரமான தீய செயல்" என்று அமெரிக்க அதிபர் ஜோ பிடன் தெரிவித்துள்ளார். அதோடு "பயங்கரவாதிகள் குழந்தைகளின் தலையை துண்டிக்கும் படங்களை" நான் பார்ப்பேன் என்று உண்மையில் நினைத்து கூட பார்க்கவில்லை என்று அதிபர் ஜோ பிடன் தெரிவித்துள்ளார். அதாவது இஸ்ரேலில் பாலஸ்தீனர்கள் மூலம் தலை துண்டாக்கப்பட்ட குழந்தைகளின் புகைப்படத்தை போனில் பார்த்ததாக அவர் கூறியுள்ளார்.
( எதிர் துருவங்கள் இணைகிறது! சவுதி சல்மானுக்கு போனை போட்ட ஈரான் சுப்ரீம் லீடர்.. ஸ்டன் ஆகி போன இஸ்ரேல்)
வெள்ளை மாளிகை விளக்கம்: பின்னர், ஒரு வெள்ளை மாளிகை அதிகாரி இந்த செய்தி தொடர்பாக ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தினார். அதில், பிடன் உண்மையில் அத்தகைய படங்களை பார்க்கவில்லை, ஆனால் "இஸ்ரேலில் இருந்து வந்த தகவல்களை " அடிப்படையாக் வைத்து அவர் பேசுகிறார். அவர் உண்மையில் எந்த புகைப்படத்தையும் பார்க்கவில்லை என்று விளக்கம் அளித்துள்ளனர்.
இஸ்ரேலில் ஹமாஸ் படைகள் மூலம் குழந்தைகள் தலைகள் துண்டாக்கப்பட்டதாக பொய்யான செய்திகள் சுற்றின. இந்த பொய்யான செய்திகளை பார்த்துதான் பிடன் ஏமாந்து உள்ளார். அமெரிக்க அதிபரே பொய்யான செய்திகளுக்கு ஏமாந்தது பெரிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.,

போர் உச்சம்: ஏற்கனவே அமெரிக்க கப்பல் அங்கு சென்றுள்ளதால், இந்த போர் தற்போது அமெரிக்கா vs பாலஸ்தீனம், ஈரான் உட்பட இஸ்லாமிய நாடுகளுக்கு இடையிலான போராக உருவெடுக்கும் என்கிறார்கள்.
அமெரிக்க கடற்படை விமானம் தாங்கி போர்க்கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர். ஃபோர்டு (சிவிஎன்-78), டிகோண்டெரோகா ஏவுகணை கப்பல் யுஎஸ்எஸ் நார்மண்டி (சிஜி 60), அத்துடன் ஆர்லீ-பர்க் கிளாஸ் ஏவுகணை, யுஎஸ்எஸ் தாமஸ் ஹட்னர் (டிடிஜி 116), யுஎஸ்எஸ் ராமேஜ் (டிடிஜி 61), யுஎஸ்எஸ் கார்னி (டிடிஜி 64), மற்றும் யுஎஸ்எஸ் ரூஸ்வெல்ட் (டிடிஜி 80) ஆகிய போர் கப்பல்கள், போர் விமானங்கள் களமிறக்கப்பட்டு உள்ளன.












Click it and Unblock the Notifications