நான்தான் சாரி கேட்கணும்.. ஏ ஆர் ரகுமான் மனைவி.. சாய்ரா பானு சொன்ன விஷயம்.. டிரெண்டாகும் ரீல்ஸ்
சென்னை: இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் அவரின் மனைவி சாய்ரா பானு விவாகரத்து செய்துள்ள நிலையில்.. அவர்கள் பேசிய ரீல்ஸ் ஒன்று இன்ஸ்டாகிராமில் டிரெண்டாகி வருகிறது. தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இருவரும் பேசிய காட்சிகள் ரீல்ஸாக இணையத்தில் வைரலாகி வருகின்றன.
30-ஆம் ஆண்டு திருமணப் பந்தத்தை எட்டுவோம் என நம்பி இருந்தோம்.. நாங்கள் நினைத்தது கைகூடவில்லை.. ஆனால், அனைத்தும் எதிர்பாராத முடிவுகளாகி விட்டது. சில விஷயங்களை மாற்ற முடியாது. சில விஷயங்களை சேர்க்க முடியாது.. உடைந்தவை மீண்டும் சேராது.. அப்படிதான் எங்கள் பந்தமும்.. இது உடைந்துவிட்டது சேராது என்று இருவரும் தங்கள் விவாகரத்து அறிவிப்பில் தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில் டிரெண்டாகும் ரீல்ஸ் காட்சியில்.. நான்தான் பொதுவாக மன்னிப்பு கேட்பேன். சண்டை வந்தால் மன்னிப்பு கேட்பேன் என்று ஏ ஆர் ரகுமான் மனைவி சாய்ராபானு தெரிவிக்கும் காட்சிகள் பதிவாகி உள்ளன. இதற்கு ஏ ஆர் ரகுமான் அவரின் மனைவி சாய்ரா பானுவிடம் எங்களுக்கு சண்டை எல்லாம் வந்தது இல்லை.. நமக்கு இடையே சண்டை வந்து இருக்கிறதா இதுவரை.. அப்படி சண்டையே வந்தது இல்லையே என்று கூறி உள்ளார். இந்த ரீல்ஸ்தான் இன்ஸ்டாகிராமில் தற்போது டிரெண்டாகிக்கொண்டு இருக்கிறது.
ஏ. ஆர் ரகுமான்: ஏஆர் ரஹ்மானிடம் இருந்து பிரிவதாக மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார். இதன்மூலம் 29 ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. இந்த தம்பதிக்கு கதிஜா, ரஹிமா என்ற மகள்கள் உள்ளனர். அதேபோல் அமீன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தான் ஏஆர் ரஹ்மானிடம் இருந்து பிரிவதாக மனைவி சாயிரா பானு அறிவித்துள்ளார்.
சாயிரா பானு தனது கணவர் ஏஆர் ரஹ்மானை பிரிவதாக அவரது வழக்கறிஞர் சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் திருமணமாகி பல வருடங்கள் கழித்து சாய்ரா பானு தனது கணவர் ஏஆர் ரஹ்மானை விட்டு பிரியும் கடினமான முடிவை எடுத்துள்ளார். சட்ட ரீதியாக இருவரும் விவாகரத்துக்கு விண்ணப்பம் செய்துள்ளனர்.
வாழ்வில் ஏற்பட்ட வேதனை மற்றும் வலியின் காரணமாக பிரிவு முடிவை எடுத்ததாக சாய்ரா விளக்கம் அளித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான், சாய்ரா பானு தம்பதியருக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ள நிலையில் விவாகரத்து.. இரண்டு தரப்பிற்கும் ஏற்பட்ட மனக்கஷ்டங்கள்.. பிரிவினைகள் காரணமாக இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
அடுத்தடுத்து விவாகரத்து: தமிழ் திரையுலகில் சமீபத்தில் இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் குமார் தனது மனைவி சைந்தவியை பிரிவதாக அறிவித்தார். இதில் ஜிவி பிரகாஷ் குமார் யார் என்றால் ஏஆர் ரஹ்மானின் உடன்பிறந்த சகோதரியின் மகன் ஆவார். அதேபோல் இசையமைப்பாளர் டி இமான் தனது மனைவியை விவாகரத்து செய்தார். இருவருக்கும் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக அவர்கள் விவாகரத்து செய்ததாக கூறப்பட்டது. சமீபத்தில் நடிகர் ஜெயம் ரவி இதேபோல் விவாகரத்து செய்தார். ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி ரவி காதலித்து திருமணம் செய்த நிலையிலும் சமீபத்தில் பிரிந்தனர்.
இது போக நடிகை சமந்தா - நாக சைத்தன்யா, நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் தமிழ் சினிமா உலகில் அடுத்தடுத்து விவாகரத்து செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications