விஜய் ஆண்டனி படத்தில் ஒரு கூட்டுக் கிளியாக பாடல்! இளையராஜா எதிர்பார்த்தது என்ன? லியோனி மருமகன் தகவல்
சென்னை: ஒரு கூட்டுக் கிளியாக பாடலை விஜய் ஆண்டனி படத்தில் பயன்படுத்த இளையராஜாவை அணுகிய போது என்ன நடந்தது என்பது குறித்து ரத்தம் படத்தின் இயக்குநர் சி.எஸ்.அமுதன் தெரிவித்துள்ளார்.
குட் பேட் அக்லி படத்திற்கு இளையராஜா எழுப்பிய காப்பிரைட் விவகாரம் குறித்து இயக்குநர் சி.எஸ்.அமுதன் விளக்கமளித்துள்ளார். இவர் தமிழ் சினிமாவில் வசனகர்த்தாவாகவும் பாடலாசிரியராகவும் இருக்கிறார். இவர் திண்டுக்கல் ஐ லியோனியின் மருமகனாவார். அவருடைய மகள் அகல்யாவை கரம் பிடித்துள்ளார்.

மின்னலே படத்தில் இடம்பெற்ற மேடி மேடி என்ற பாடலை இவர்தான் எழுதினார். அது போல் தமிழ் படம் 2 வில் இடம்பெற்ற எவடா உன்ன பெத்தான் பெத்தான் என்ற பாடலையும் இவர் எழுதியிருந்தார். இந்த நிலையில் ரத்தம் என்ற படத்தின் டீசரில் இளையராஜா இசையமைத்த ஒரு கூட்டுக் கிளியாக பாடல் இடம் பெற்றிருந்தது.
வெங்கட் பிரபு
இந்த படத்தில் வெற்றிமாறன், வெங்கட் பிரபு, பா.ரஞ்சித் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தனர். விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படம் 2022 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் இடம் பெற்ற ஒரு கூட்டு கிளி குறித்து அமுதன் சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.
இளையராஜாவிடம் அனுமதி
அவர் தனது சமூகவலைதள பதிவில் கூறியிருப்பதாவது: ஒரு கூட்டுக் கிளியாக பாடலை எங்களது ரத்தம் படத்தில் பயன்படுத்த இளையராஜாவின் குழுவினரை தொடர்பு கொண்டோம். படத்தின் தயாரிப்பு நிறுவனமோ அந்த பாடலுக்காக இளையராஜாவுக்கு அதிக பணத்தை கொடுக்கவும் தயாராக இருந்தது.
பணம் தர தயார்
ஆனால் இளையராஜா பணத்தை எதிர்பார்க்கவில்லை என்றும் பயன்படுத்திக் கொள்ளுமாறும் தெரிவித்ததாக அவரது குழுவினர் தெரிவித்தனர். இதைத்தான் இளையராஜா விரும்புகிறார். அதாவது தன்னிடம் கேட்டு தனது பாடலை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
சினிமா துறை
சினிமா துறையில் இருக்கும் நாமே அவருக்கு துணையாக இருக்காவிட்டால் வேறு யார் நிற்பார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார். இந்த பதிவிற்கு ஏராளமானோர் கமென்ட் போட்டுள்ளனர். அதில் ஒருவர் இந்த படத்தில் தனது அண்ணன் மகன் வெங்கட் பிரபு நடித்திருக்கிறார். அதனால் பணம் வாங்காமல் இளையராஜா விட்டுவிட்டார் என்கிறார்கள்.
எதிர்பார்ப்பு இதுதான்
ஆனால் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த தனது சொந்த மகன்களாக இருந்தாலும் அனுமதி கேட்க வேண்டும் என ஏற்கெனவே கார்த்திக் ராஜா தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித் நடிப்பில் குட் பேட் அக்லி எனும் படம் கடந்த 10 ஆம் தேதி திரைக்கு வந்தது. இந்த படத்தில் இளையராஜா இசையமைத்த 3 பாடல்கள் மறுஉருவாக்கம் செய்து பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் இந்த படத்தில் தனது பாடல்களை தனது அனுமதியில்லாமல் பயன்படுத்தியதாக குட் பேட் அக்லி படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
When we contacted Raja’s team for permission to use this song our producers were more than willing to pay.
— CS Amudhan (@csamudhan) April 15, 2025
We were told by them that no payment was needed & that we could go ahead.
The man just wants to be acknowledged.
It’s the least we can do.
If we don’t stand with him… https://t.co/jEkrUQFfiD
ரூ 5 கோடி நஷ்ட ஈடு
அதில் தனது பாடல்களை பயன்படுத்தியமைக்காக ரூ 5 கோடி நஷ்டஈடு கேட்டுள்ளார். மேலும் தனது பாடல்களை படத்திலிருந்து நீக்க வேண்டும். இன்னும் ஒரு வாரத்திற்குள் தனது நோட்டீஸிற்கு பதிலளிக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
குட் பேட் அக்லி
இந்த நிலையில்தான் குட் பேட் அக்லி தயாரிப்பு நிறுவனம் மைத்ரி மூவி மேக்கர்ஸின் ரவிசங்கர் பதில் கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: குட் பேட் அக்லி படத்தில் இளையராஜா பாடல்களைப் பயன்படுத்துவதில் எந்தத் தவறும் செய்யவில்லை. விதிகளின்படி அனுமதி பெற்றுள்ளோம். இந்த படத்தில் பயன்படுத்தப்பட்ட பாடல்களை தேவையான அனைத்து அனுமதிகளையும் பெற்றுள்ளோம்.
தயாரிப்பு நிறுவனம் பதிலடி
அந்த உரிமைகள் அனைத்தும் இசை லேபிள்களுக்கே உரியது. எனவே நாங்கள் விதிகளின்படிதான் செயல்பட்டுள்ளோம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications