Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு திடீர் நெஞ்சுவலி! சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதி!

Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழக முன்னாள் அமைச்சரும் அதிமுக பொருளாளராக எடப்பாடி பழனிச்சாமியால் நியமிக்கப்பட்டுள்ளவருமான திண்டுக்கல் சீனிவாசன் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவராக இருந்த திண்டுக்கல் சீனிவாசன் திண்டுக்கல் மாவட்டத்தில் அசைக்க முடியாத சக்தியாக வலம் வந்தார். எம்பியாக இருந்த அவருக்கு நாடாளுமன்றத்திலும் உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருந்தது.

Dindigul Srinivasan admitted to Chennai Apollo Hospital due to chest pain

மேலும் அதிமுகவின் அதிகாரமிக்க பதவியான பொதுச் செயலாளர் பதவிக்கு அடுத்து பொருளாளராகவும் நியமிக்கப்பட்டார். இதன் பிறகு சுமார் 15 ஆண்டு காலம் தீவிர அரசியலில் இருந்து ஒதுக்கப்பட்ட அவர் கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பின்னர் வனத்துறை அமைச்சராகவும் இருந்தார்.

முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிச்சாமி அணியில் இருந்த அவர் தற்போது வரை அங்கேயே தொடர்கிறார் கட்சியில் மிக மூத்தவரான அவருக்கு மாவட்ட செயலாளர் பதவி அமைப்புச் செயலாளர் பதவி கழக வழிகாட்டுதல் குழு உறுப்பினர் தற்போது பொருளாளர் பதவி உள்ளிட்ட பதவிகளை எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்.

இந்நிலையில் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. சென்னையில் தங்கியிருந்த அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.

ஏற்கனவே திண்டுக்கல் சீனிவாசனுக்கு உடல்நலக் கோளாறு இருந்த நிலையில் அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் வழக்கமான பரிசோதனைக்காகவே திண்டுக்கல் சீனிவாசன் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் திங்கட்கிழமை அவர் திண்டுக்கல்லில் இருப்பார் என அவரது ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+