4 தலைவர்களின் வாரிசுகள் ரகசிய சந்திப்பு.. CCTV ஆதாரம் இருக்கு.. குறிவைத்து அடித்த கேசி பழனிசாமி!
சென்னை: எஸ்.பி.வேலுமணி மகன் மற்றும் தங்கமணி மகன் இருவரும் எடப்பாடி பழனிசாமி மகனை அழைத்துக் கொண்டு உதயநிதி உதயநிதி ஸ்டாலினை சந்தித்து திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சி அமைக்க வேண்டும் என்று பேசியதாகவும் அது குறித்த CCTV Footageகள் உள்ளதாகவும், அதிமுக முன்னாள் எம்.பி கேசி பழனிசாமி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேசி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "வேலுமணி அவர்களே.. எடப்பாடி பழனிசாமி திமுகவோடு அணி சேர்ந்து ஆட்சி அமைக்க முயற்சித்த காரணத்தால் தான் நீங்கள் அதிமுகவில் ஒரு பிளவை உண்டாக்கி உள்ளதாக நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் சொன்னீர்கள்.

கேசி பழனிசாமி ட்வீட்
ஆனால் நீங்கள் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த வேண்டும், உங்களது மகன் மற்றும் தங்கமணி அவர்களது மகன் இருவரும் எடப்பாடி பழனிசாமி அவர்களின் மகனை அழைத்துக் கொண்டு உதயநிதி உதயநிதி ஸ்டாலின் அவர்களை சந்தித்து திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சி அமைக்க வேண்டும் என்று பேசினார்களா இல்லையா? அது குறித்த CCTV Footageகள் உள்ளன.
நீங்கள் அப்படி ஒரு முயற்சியை எடுத்துவிட்டு அதில் உங்களுக்கு அமைச்சர் பதவி ஏதும் கிடைக்கவில்லை என்று தற்பொழுது அமைச்சர் பதவிக்காக யாசகம் வேண்டி தவெக பக்கம் நகர்கிறீர்கள் இது சரியா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
திரு வேலுமணி அவர்களே எடப்பாடி பழனிசாமி அவர்கள் திமுகவோடு அணி சேர்ந்து ஆட்சி அமைக்க முயற்சித்த காரணத்தால் தான் நீங்கள் அதிமுகவில் ஒரு பிளவை உண்டாக்கி உள்ளதாக நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் சொன்னீர்கள்.
— K C Palanisamy (@KCPalanisamy1) May 13, 2026
ஆனால் நீங்கள் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த வேண்டும், உங்களது மகன் மற்றும்… pic.twitter.com/JD7iPRUEd9
சட்டசபையில் இன்று
தவெக கொண்டுவந்த நம்பிக்கை தீர்மானத்தை அதிமுக எதிர்க்கிறது என்று அக்கட்சியின் பொதுச்ச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சட்டசபையில் கூறியதை தொடர்ந்து சபாநாயகர் எஸ்.பி.வேலுமணியை பேச அழைத்தால் சலசலப்பு ஏற்பட்டது.
இதற்கு பதில் அளித்த சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், ஒரு உறுப்பினரை பேசுவதற்கு அனுமதி அளிக்க எனக்கு உரிமை உள்ளது, எனது முடிவே இறுதியானது என கூறினார். அதைத்தொடர்ந்து எஸ்.பி.வேலுமணியை பேசுமாறு சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் கூறினார். ஆனால், எடப்பாடி பழனிசாமி தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து குரல் எழுப்பிக் கொண்டே இருந்தனர். இதனால் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தனது இருக்கையில் இருந்து எழுந்து அனைவரையும் அமர வைத்தார்.
எஸ்பி வேலுமணி
அதன்பின்னர் பேசிய எஸ்பி வேலுமணி, "தவெக அரசுக்கு நாங்கள் ஆதரவு அளிக்கிறோம். நாங்கள் பதவிக்கு ஒரு போதும் ஆசைப்பட்டவர்கள் இல்லை. திமுகவை எதிர்த்து தான் அதிமுக தொடங்கப்பட்டது. மக்கள் தீர்ப்புக்கு மதிப்பு அளித்து நாங்கள் அரசு தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்கிறோம்" என்றார்.
இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி தரப்பு எம்எல்ஏக்கள் 22 பேர் அரசை எதிர்த்தும், எஸ்.பி.வேலுமணி தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் 25 பேர் ஆதரித்தும் வாக்களித்தனர். இதன் மூலம் அதிமுக இரண்டாக உடைந்தது என்பது நிரூபணமானது.
எடப்பாடி திமுகவுடன் கூட்டணி?
முன்னதாக நேற்று எஸ்பி வேலுமணி செய்தியாளர்களிடம் பேசும்போது, ""தேர்தல் முடிவடைந்த பிறகு அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி சில முன்மொழிவுகளை வைத்தார். நாங்கள் எதிர்த்த திமுக ஆதரவோடு பழனிசாமி முதல்வராக தேர்வு செய்யப்படவுள்ளதாகக் கூறினார். திமுகவை எதிர்த்து 50 ஆண்டுகளுக்கும்மேல் அரசியல் செய்து வருகிறோம். திமுகவுடன் இணைந்தால் அதிமுக இல்லாமல் போய்விடும் என்று நாங்கள் கூறினோம்.
அதிமுக எப்போதும் உடையாது, அதற்கு நாங்கள் காரணமாக இருக்க மாட்டோம், கட்சி தொடங்கிய காலத்தில் இருந்து இருக்கிறோம். அதிமுக காப்பற்றப்பட வேண்டும். ஆகையால், எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுக்குழுவை விரைந்து கூட்டி ஆலோசிக்க வேண்டும். அதிமுக ஏன் தோற்றது என்பதை ஆராய்ந்து நல்ல முடிவை எடுக்க வேண்டும்." எனப் பேசியிருந்தார்.












Click it and Unblock the Notifications