திண்டுக்கல் நிர்மல் குமார் மேல கை வெச்சதுமே.. தவெக செய்ததை பாருங்க.. குண்டுக்கட்டாக தூக்கிய போலீஸ்
சென்னை: கரூர் சம்பவம் பற்றி வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை என்று ஏற்கனவே போலீசார் எச்சரித்திருந்தனர்.. எனினும் தொடர்ந்து அவதூறு பரப்பியதாக சமூகவலைதள கணக்காளர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்., இவர்களை தவிர பிரபல யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்ட் உள்ளிட்டோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. தற்போதுகூட அரசையும், நீதிபதியையும் சிலர் விமர்சித்தபடியே உள்ளனர்.. அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்தபடியே உள்ளனர். தற்போது திண்டுக்கல்லில் ஒரு சம்பவம் நடந்துள்ளது பாருங்கள்.
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே பெத்தாம்பட்டியை சேர்ந்தவர் நிர்மல்குமார்.. இவருக்கு 35 வயதாகிறது..இவர் தமிழக வெற்றிக் கழகத்தின் திண்டுக்கல் தெற்கு மாவட்ட செயலாளராக உள்ளார்.

கரூரில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக நீதிபதிகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.
நீதிமன்றத்தில் கருத்து தெரிவித்த நீதிபதி குறித்து தமிழக வெற்றி கழகத்தின் திண்டுக்கல் தெற்கு மாவட்ட செயலாளர் நிர்மல்குமார், உடனே தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் அவதூறு கருத்துக்களை பதிவு செய்திருந்தார். மேலும் தமிழக முதல்வர் மீதும் அவதூறு கருத்துக்களை பதிவு செய்திருந்தார். இதையடுத்து சாணார்பட்டி போலீஸார் நிர்மல்குமாரை நேற்று கைது செய்தனர்.
திண்டுக்கல் சாணார்பட்டி
முதல்வரையும், நீதிபதியை 'அவதூறாக பதிவிட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட தமிழக வெற்றிக்கழக திண்டுக்கல் தெற்கு மாவட்ட செயலாளர் நிர்மல் குமார் என்பவர் விசாரணைக்காக சாணார்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்த விஷயத்தை கேள்விப்பட்டு திண்டுக்கல் வெகவினர் கடுமையான அதிர்ச்சியடைந்தனர். அப்போது மாவட்ட செயலாளர் நிர்மல் குமார் மீது புகார் அளித்த திமுக நிர்வாகிகள் நிர்மல் குமார் மற்றும் அவரது குடும்பத்தினரை அவதூறு பரப்பியதாக கூறி அவர்களையும் கைது செய்ய வேண்டும் என்று காவல் நிலையம் முன்பு போலீசார் உடன் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
குண்டுக்கட்டாக தூக்கினர்
அதற்குள் இந்த விஷயம் கேள்விப்பட்டு திண்டுக்கல் ரூரல் டிஎஸ்பி சங்கர் தமிழக வெற்றி கழக நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது திடீரென போலீசாருக்கும், தவெக நிர்வாகிகளுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.. இதைத்தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளை போலீசார் அடித்து குண்டு கட்டாக தூக்கிச் சென்று வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு வாகனத்தில் ஏற்றி அனுப்பிய பின்னர் திண்டுக்கல் தெற்கு மாவட்ட செயலாளர் நிர்மல் குமார் என்பவரை வாகனத்தில் ஏற்றி சிறைக்கு அனுப்பி வைத்தனர்.. போலீசாருக்கும் தவெக நிர்வாகிகளுக்கும் நடந்த இந்த வாக்குவாதம் வீடியோவாகவும் யாரோ எடுத்து இணையத்தில் தற்போது பதிவிட்டுள்ளனர்.. அது வைரலாகி கொண்டிருக்கிறது.
தேச தியாகிகள்
இந்த வீடியோவில் தவெகவினர் திரண்டு வந்து கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.. தவெகவை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாமல் திமுக அரசு இப்படி கைது நடவடிக்கைகள் மூலம் பழிவாங்கி கொண்டிருப்பதாக கடுமையான கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
உடனே திமுக தொண்டர்கள் திரண்டு வந்து பதிலடி தந்து கொண்டிருக்கிறார்கள்.. சட்டம் தன் கடமையை செய்யட்டும் ஒன்றும் தவறில்லை இவர்கள் ஒன்றும் பெரிய தேச தியாகிகள் அல்ல வருத்தப்படுவதற்கு என்றெல்லாம் கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.
-
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications