என்னாது சக்தித் திருமகன் திருட்டுக் கதையா? பல வருட உழைப்பு! இயக்குநர் மறுப்பு
சென்னை: 'சக்தித் திருமகன்' கதை திருட்டு குறித்து சுபாஷ் சுந்தர் என்பவர் ஆதாரத்துடன் குற்றம்சாட்டியிருந்த நிலையில் அதை படத்தின் இயக்குநர் அருண் பிரபு மறுத்துள்ளார். மிகவும் தவறான அவதூறு என்றும் அருண் பிரபு விமர்சித்திருந்தார்.
விஜய் ஆண்டனி நடித்த 'சக்தித் திருமகன்' எனும் திரைப்படம் செப்டம்பர் 19ஆம் தேதி வெளியானது. இந்த நிலையில் அக்டோபர் 24 ஆம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடியிலும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படத்தை ஜென்டில்மேன் இயக்கிய ஷங்கர் பாராட்டியிருந்தார். இந்த நிலையில் இந்த கதை திருடப்பட்ட கதை என எழுத்தாளர் சுபாஷ் சுந்தர் விமர்சித்திருந்தார்.
இந்த கதை தான் எழுதி காப்பிரைட்ஸ் வாங்கி வைத்திருந்த 'தலைவன்' என்ற படத்தின் கதை என சுபாஷ் சுந்தர் குற்றம்சாட்டியிருந்தார். அவர் தனது சமூகவலைதள பதிவில் கூறியிருப்பதாவது: "சக்தித் திருமகன்"- திருட்டு கதை
எந்த பதவியிலும் இல்லாமல் இந்தியாவையே தன் கட்டுக்குள் வைத்திருக்கும் ஒரு வில்லன் கேரக்டரை உருவாக்கி அதில் மாதவனை உருவகம் செய்து நான் 3 வருடங்களுக்கு முன்னர் எழுதி வைத்திருந்த காப்பி ரைட்ஸ் வாங்கிய கதைதான் "தலைவன்".
அதன் SNAP shots-ஐ எடுத்துள்ளேன், படித்துப் பாருங்கள். மாதவன் ஒரு இந்துத்துவ பிடிப்புள்ள வில்லன், நாட்டை சர்வாதிகாரத்துக்கு கொண்டு வரத் துடிப்பவன்.
ஹிரோவின் குடும்பம் அழிய காரணமாய் இருப்பான், அவனிடம் கூடவே ஹிரோ இருப்பான், ஹிரோவுக்கு பயிற்சி அளித்து தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வான். பின் ஒரு கட்டத்தில் ஹிரோ அவனுக்கு எதிராக திரும்புவான்.
ஹீரோ தான் சேர்த்த பணத்தை பிட்காயினாக மாற்றி அதை சரியான நேரத்தில் பயன்படுத்தி வில்லனை எதிர்க்கிறான்.
ஹிரோ மீது நிதி மோசடி புகாரை உருவாக்குகிறான். ஹீரோவை தீவிரவாதியாக சித்தரிக்கிறான்.
ஹிரோ வில்லனுடைய நிறுவங்களை நஸ்டத்துக்கு உள்ளாகுவது.
ஹீரோவின் அம்மாவை விபச்சாரியாக சித்தரித்து சிறைக்கு அனுப்புவான் வில்லன் என் கதையில்.. இதிலும் அப்படி விபச்சாரியாக சித்தரித்திருப்பார்கள்..
என் கதையில் இறுதியில் வரும் வசனம் "உன்னுடைய மரணம் புரட்சியை விரும்பும் ஒவ்வொருவரையும் பயமுறுத்தும், மக்கள் கடுமையான கஸ்டம் அனுவவிப்பார்கள், குறைந்த கூலிக்கு வேலை செய்வார்கள், உரிமைகளைப் பேச யோசிப்பார்கள், மக்களை சந்தோசப்படுத்தி ஓட்டு வாங்க வேண்டியதில்லை சர்வாதிகாரியாக நான் இருப்பேன்" என்பான் மாதவன்.
ஹீரோ என் கதையிலும் சாக மாட்டான்..
இதில் போலவே வில்லனை கொன்றுவிட்டு தப்பிப்பான்.. வெளியில் ராணுவம் நிற்க..
என் கதையை Dream warriorskku அனுப்பிய சான்று இருக்கிறது, சக்தி திருமகனின் இயக்குநர் முதல் படம் அவர்களுக்குதான் செய்தார்.. கதை இலாகா என்கிற பெயரில் , புதியவர்களுக்கு உதவுகிறோம் என்று கதையை வாங்குகிறார்கள், அதன் பின் அது எங்கே யாருக்கு எந்த வடிவில் செல்கிறது என்பது யாருக்கு வெளிச்சம்?
சும்மா விடுவதாக இல்லை, சின்ன சின்ன மாற்றங்களை செய்துவிட்டுத் தப்பித்துவிடலாம் என்றால் எப்படி? கதையை copy rights of india-வில் register செய்து வைத்துள்ளேன்.
டாக்குமென்ட்ஸ் எல்லாம் என்னிடம் இருக்கிறது, வருடம் 2022. தொடர்பான படங்களை பதிவிட்டுளேன். கேஸ் போடுவதாகவும் உள்ளேன்.
அவர்களுக்கு அழுத்தம் கொடுக்க உதவுங்கள், ஒருவரைப் போல் ஒருவர் இவ்வளவு பொருத்தங்களுடன் சிந்திக்க முடியாது, அப்படியே இருந்தாலும் முதலில் சிந்தித்து பதிவு செய்பவருக்கே உரிமை.
ஒழுக்கத்தை, நேர்மையை போதிப்பதாக படம் இருப்பதைப் போல அதை எடுப்பவர்களும் இருந்தால் நன்று. இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார். இவரது இந்த பதிவு ஆதாரங்களுடன் வைரலான நிலையில் இதற்கு அந்த படத்தின் இயக்குநர் அருண்பிரபு புருஷோத்தமன் மறுத்துள்ளார்.
அவர் கூறுகையில் மிகவும் தவறான அவதூறு, சொந்த உழைப்பில் பல ஆண்டுகள் உழைத்து எழுதியது. நன்றி வணக்கம் என பதிவிட்டுள்ளார். இவரது விளக்கத்திற்கு சுபாஷ் என்ன சொல்ல போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications