உயிரிழந்தவர்களின் குடும்பத்தை கூட வரவைச்சுத்தான் ஆறுதல் சொல்வீங்களா விஜய்! சேரன் கேள்வி
சென்னை: உயிர் இழந்தவர்கள் குடும்பங்களை கூட வரவைச்சுத்தான் ஆறுதல் சொல்வீங்களா விஜய் சார். இது ரொம்ப தவறா இருக்கு. நேர்ல ஒவ்வொருத்தர் வீடுகளுக்கும் சென்று இரங்கல் தெரிவிப்பதுதானே மரியாதை என இயக்குநர் சேரன் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து இயக்குநர் சேரன் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: உயிர் இழந்தவர்கள் குடும்பங்களை கூட வரவைச்சுத்தான் ஆறுதல் சொல்லுவிங்களா சார்... ரொம்ப தவறா இருக்கு @actorvijay. நேர்ல ஒவ்வொருவர் வீட்டுக்கு போறதுதான் மரியாதை.. அப்போதான் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் களங்கம் விலகும். அது முடியாதுன்னா எதுக்குமே உங்களால மக்களோட நிக்கமுடியாது என குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு நெட்டிசன் பதிலில் இது முற்றிலும் முதிர்ச்சியின்மை. நடைமுறையில் சாத்தியப்படாத ஆலோசனையாகும். விஜய் ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்றால் நிச்சயம் கூட்டம் சேரும், பிரச்சினை நிகழும் என தெரிவித்திருந்தார்.
இதற்கு சேரன் பதிலளிக்கையில் ஒரு தலைவன் எப்பவும் என் பக்கத்துல வந்து எனக்காக நிப்பான்ற நம்பிக்கை உருவாக்கனும்.. முடியலைன்னா அத வளர்த்துக்கனும்.. ரசிகர் மன்றம் இருக்கவரை யாரும் கேட்கலை. எங்களை எப்போ ஆளனும்னு வர்றிங்களோ அப்போத்தான் இந்த கேள்வி. நல்லது சொல்ல கூட இருங்க .. தவறா சொல்லி ஏத்திவிட வேண்டாம் இவ்வாறு சேரன் தெரிவித்துள்ளார்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களை விஜய் இதுவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவில்லை. இதற்கு அவர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதையடுத்து விஜய் கடந்த சில தினங்களாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேசி வருகிறார்.
எனினும் கரூர் மக்களை நேரில் சந்திக்க வேண்டும் என்ற தவிப்பில் விஜய் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்காக விஜய் கரூர் செல்ல காவல் நிலையத்தில் அனுமதி கேட்டுள்ளாராம். அதற்கு கரூர் மாவட்ட காவல் நிலைய போலீஸார், விஜய் எப்போது எங்கே எப்படி வர போகிறார், அவருடன் யாரெல்லாம் வருவார்கள், அவர் இந்த மக்களை எங்கு வைத்து சந்திக்க போகிறார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இந்த நிலையில் விஜய் வரும் 17ஆம் தேதி கரூர் செல்ல இருப்பதாக சொல்லப்படுகிறது. அங்கு அவர் ஒவ்வொருவர் வீடுகளுக்கும் செல்வதை விட ஒரு மண்டபத்தில் வைத்து அந்த 41பேரின் குடும்பத்தினரை சந்திக்க போவதாக சொல்லப்படுகிறது. இதற்கு விஜய் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications