Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜனநாயகன் படத்திற்கு அநீதி! படைப்புச் சுதந்திரத்தின் மீது பேரச்சம்! மாரி செல்வராஜ் கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜனநாயகன் திரைப்படத்தின் மீது தணிக்கைத் துறை நிகழ்த்தியிருப்பது அப்பட்டமான அநீதி என இயக்குநர் மாரி செல்வராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார். படைப்பு சுதந்திரத்தின் மீது வேகமாக பரவும் பேரச்சத்தை துடைத்தெறிவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஜனநாயகன் திரைப்படத்தின் மீது நம் தணிக்கைத்துறை நிகழ்த்தியிருப்பது அப்பட்டமான அநீதி தான். ஒரு படைப்பாளி என்கிற முறையில் இந்த அநீதியை எதிர்ப்பதன் மூலம் நம் ஜனநாயகத்தின் மீதும் நம் படைப்பு சுதந்திரத்தின் மீதும் வேகமாக படரும் பேரச்சத்தை துடைத்தெறிய பெருங்குரலெழுப்புவோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

jana nayagan mari selvaraj

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜன நாயகன்' திரைப்படத்திற்கு 'யூ/ஏ' சான்றிதழ் வழங்கக் கோரி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு தற்காலிகத் தடை விதித்துள்ளது. இதனால், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவிருந்த இந்தப் படத்தின் வெளியீடு தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.

மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்திற்கு (CBFC) உடனடியாக 'யூ/ஏ' சான்றிதழ் வழங்க உயர் நீதிமன்ற தனி நீதிபதி நேற்று காலை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, வாரியம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தலைமை நீதிபதி அமர்வு நேற்று பிற்பகல் இந்த மேல்முறையீட்டை விசாரித்து, தனி நீதிபதியின் உத்தரவை இடைநிறுத்தியது. மேலும், வழக்கு விசாரணை ஜனவரி 21ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய், அரசியல் கட்சித் தலைவராக உருவெடுத்துள்ள நிலையில், 'ஜன நாயகன்' தனது கடைசிப் படமாக இருக்கும் என்று அறிவித்திருந்தார். இப்படம் முதலில் 2025 தீபாவளி வெளியீடாக இருக்கும் என அறிவிக்கப்பட்டு, பின்னர் பொங்கல் வெளியீடாக மாற்றப்பட்டது. ஜனவரி 9ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, சில இடங்களில் முன்பதிவுகளும் தொடங்கியிருந்தன.

படத்திற்கு மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்திடம் இருந்து சான்றிதழ் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால், தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. தனி நீதிபதி, சான்றிதழை உடனடியாக வழங்க உத்தரவிட்டதையடுத்து, மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் தலைமை நீதிபதி அமர்வில் மேல்முறையீடு செய்தது.

மேல்முறையீட்டு மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, இவ்வளவு அவசரமாக மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டதற்கான காரணத்தை கேள்வி எழுப்பியது. இதற்கு பதிலளித்த கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், வழக்கு தொடர்பான நிகழ்வுகளின் தொகுப்பை விளக்கினார். அதன்படி, மனு ஜனவரி 5ஆம் தேதியன்று தாக்கல் செய்யப்பட்டதாகவும், ஜனவரி 6ஆம் தேதியன்று விசாரணைக்கு வந்ததாகவும், நீதிமன்ற அறிவுறுத்தலின்படி தேவையான கடிதம் ஜனவரி 7ஆம் தேதியன்று சமர்ப்பிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், ஜனவரி 6-ஆம் தேதியன்று எழுதப்பட்ட கடிதம் சட்ட வரம்புக்கு அப்பாற்பட்டது என்று தனி நீதிபதி தீர்ப்பளித்ததாகவும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கூறினார். ஆனால், அந்தக் கடிதம் ஒருபோதும் நீதிமன்றத்தில் சவால் செய்யப்படவில்லை என்றும், "தணிக்கை வாரியம் தனது நிலைப்பாட்டைப் பாதுகாக்க பதில் மனு தாக்கல் செய்ய போதுமான வாய்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும்" என்றும் அவர் வாதிட்டார்.

தனி நீதிபதியின் உத்தரவை ஆய்வு செய்த தலைமை நீதிபதி அமர்வு, "மனுதாரரின் கோரிக்கைக்கு பதிலளிக்குமாறு எதிர் தரப்பான தணிக்கை வாரியத்திடம் கேட்கப்பட்டு, இரண்டு நாட்களுக்குள் இந்த விவகாரம் தீர்க்கப்பட வேண்டிய அவசரம் என்ன?" என்று கேள்வி எழுப்பியது. மேலும், "போலியான அவசர சூழல் உருவாக்கப்பட்டு நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும்" நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

தொடர்ந்து பேசிய தலைமை நீதிபதி அமர்வு, "சான்றிதழ் பெறாமல் வெளியீட்டுத் தேதியை எவ்வாறு தீர்மானிக்க முடியும்? ஒருமுறை வெளியீட்டுத் தேதியை முடிவு செய்துவிட்டால், அதை காரணம் காட்டி நீதித்துறை அமைப்புக்கு அழுத்தம் கொடுக்கக்கூடாது" என்று கடுமையாகக் கருத்து தெரிவித்தது. இருப்பினும், படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில், "எந்த அழுத்தமும் கொடுக்கப்படவில்லை" என்றும், "அனைத்து விவரங்களும் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுவிட்டன, ஆனால் சான்றிதழ் மட்டும் வழங்கப்படவில்லை" என்றும் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி அமர்வு, 'ஜன நாயகன்' திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதித்து, வழக்கை ஜனவரி 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இதற்கிடையே, ஜன நாயகன் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் ஜனவரி 7ஆம் தேதி இரவு அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்தது. அந்த அறிக்கையில், உற்பத்தி நிறுவனம் ரசிகர்களுக்கு வருத்தத்துடன் செய்தியைத் தெரிவித்தது.

"கனத்த இதயத்துடன் இந்த தகவலை எங்கள் பங்குதாரர்கள் மற்றும் பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம், ஜனவரி 9ஆம் தேதி ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட 'ஜன நாயகன்' திரைப்பட வெளியீடு, எங்கள் கட்டுப்பாட்டை மீறிய தவிர்க்க முடியாத காரணங்களால் ஒத்திவைக்கப்படுகிறது" என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. "இந்த திரைப்படத்தைச் சுற்றிய எதிர்பார்ப்பு, ஆர்வம் மற்றும் உணர்வுகளை நாங்கள் ஆழமாக புரிந்துகொள்கிறோம். இந்த முடிவு நம் யாருக்குமே எளிதான ஒன்று அல்ல. புதிய வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும்" என கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் தெரிவித்தது.

மேலும், "அதுவரை உங்களுடைய பொறுமையையும், நீடித்த அன்பையும் கோருகிறோம். உங்களின் ஆதரவு தான் எங்களுக்கும், ஒட்டுமொத்த 'ஜன நாயகன்' படக்குழுவுக்கும் மிகப்பெரிய பலம்" என்றும் அந்த அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+