அரசு கூடவா? இயக்குநர் பா.ரஞ்சித் பரபரப்பு புகார்.. அரங்குகளில் நீலத்தை அனுமதிக்க மறுப்பதாக வேதனை
சென்னை: மார்கழியில் மக்கள் இசை நிகழ்ச்சியை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசின் சபாக்களின் கூட அனுமதி மறுக்கப்படுவதாகவும், நீலம் பண்பாட்டு மையம் என்றாலே அனுமதி கிடைப்பது இல்லை எனவும் இயக்குநர் பா.ரஞ்சித் பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார். கலைவாணர் அரங்கில் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி நடத்த பல முறை முயன்றும் எதுவும் நடக்கவில்லை என அவர் தெரிவித்து இருக்கிறார்.
இயக்குநர் பா.ரஞ்சித் அட்டக்கத்தி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானர், அதன் வெற்றியை தொடர்ந்து நடிகர் கார்த்தியை வைத்து மெட்ராஸ் படத்தை இயக்கினர்.
சமூக ஏற்றத்தாழ்வு, சென்னையின் உழைக்கும் மக்களின் வாழ்வியலையும் பேசும் இந்த திரைப்படங்கள் பிரமாண்ட வெற்றியை பெற்றனர். இதனால் ரஜினியை வைத்து காலா, கபாலி ஆகிய படங்களை இயக்கும் வாய்ப்பை பெற்றார்.

இயக்குநர் பா.ரஞ்சித்
அதிலும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும் தலைவராக நடிகர் ரஜினியின் கதாபாத்திரங்களை வடிவமைத்து வெற்றி கண்டார். அதன்பின்னர் ஆர்யாவை வைத்து அவர் இயக்கிய சார்பட்டா திரைப்படம் ஓடிடியில் கடந்த ஆண்டு வெளியாகி பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. இதனை அடுத்த நட்சத்திரம் நகர்கிறது படத்தை இயக்கிய பா.ரஞ்சித், தற்போது விக்ரமனை வைத்து தங்கலான் படத்தை இயக்கி வருகிறார்.

தயாரிப்பாளர் ரஞ்சித்
இயக்குநராக மட்டுமின்றி நீலம் புரொடக்சன்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி சமூக அக்கறை கொண்ட படங்களையும் பா.ரஞ்சித் தயாரித்து வருகிறார். பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, ரைட்டர் போன்ற வெற்றிப் படங்களை அவர நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது.

நீலம் பண்பாட்டு மையம்
சினிமா மட்டுமின்றி நீலம் பண்பாட்டு மையம் என்ற அமைப்பை தொடங்கி மார்கழியின் மக்களிசை, கேஸ்ட்லஸ் கலெக்டிவ், கூகை பயிலகம், போன்றவற்றையும் அவர் நடத்தி வருகிறார். சமூக, அரசியல் பிரச்சனைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். குறிப்பாக பட்டியலின மக்களுக்கு எதிரான சாதிய ஒடுக்குமுறைகள் குறித்து தொடர்ந்து பேசியும் ட்விட்டரில் எழுதியும் வருகிறார் அவர்.

மார்கழியில் மக்கள் இசை
கடந்த ஏப்ரல் மாதம் முழுவதும் அவரது நீலம் பண்பாட்டு மையம் சார்பில் தலித் வரலாற்று மாத நிகழ்வாக பி.கே.ரோசி திரைப்பட விழா, புத்தக கண்காட்சி, மேடை நாடகங்கள் என பல்வேறு நிகழ்வுகளை பா.ரஞ்சித் நடத்தினார். இந்த நிலையில் தற்போது சென்னை சேத்துப்பட்டுவில் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஜிவி பிரகாஷ் குமார் பங்கேற்பு
பொதுவாகவே மார்கழி மாதத்தில் ஏராளாமான சபாக்களில் ஆன்மீக இசை கச்சேரிகள் நடத்தப்படுவது வழக்கம். அதேபோல் மார்கழியில் நீலம் சார்பில் மக்களிசையை ஒலிக்க செய்வதற்கான இந்த நிகழ்ச்சியை கடந்த சில ஆண்டுகளாக பா.ரஞ்சித் நடத்தி வருகிறார். மூன்று நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் பா.ரஞ்சித், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர்.

அரசு அனுமதி மறுப்பு
அப்போது தனியார் தொலைக்காட்சிக்கு பா.ரஞ்சித் அளித்த பேட்டியில், "நீலம் பண்பாட்டு மையத்தின் நிகழ்வுகளுக்கு சபாக்களில் அனுமதி மறுக்கிறார்கள். நிகழ்ச்சியை நடத்தக்கூடாது என அழுத்தம் தரப்படுகிறது. தனியார் சபாக்கள் மட்டுமின்றி அரசு அதிகாரிகள் இப்படிதான் நடக்கிறார்கள். இந்த மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியை கலைவாணர் அரங்கில் நடத்த விரும்பினோம்.

அனுமதி கிடைக்கவில்லை
அதற்காக எவ்வளவோ முயற்சி செய்தும், அது முன்பதிவு செய்யப்படுவதற்கு முன்பே பதில் கிடைக்காமல் இருந்தது. அரசு அரங்கங்களை முன்பதிவு செய்யும் அனுமதியும் வழங்கப்படவில்லை. முறையான பதிலும் இல்லை. பல நாட்கள் இழுத்தடிக்கப்பட்டன. இதனால் வேறு அரங்குகளில் நிகழ்ச்சியை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது." என்றார்.












Click it and Unblock the Notifications