இயக்குநர் ஷங்கர் சொத்து முடக்கப்பட்டதற்கு விதிக்கப்பட்ட தடை.. சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு!
சென்னை: இயக்குநர் ஷங்கருக்கு எதிரான வழக்கில், விளக்கம் அளிக்க அமலாக்கத்துறை கால அவகாசம் கேட்டுக் கொண்ட நிலையில், வழக்கு விசாரணையை ஜூன் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடித்த 'எந்திரன்' திரைப்படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்கி இருந்தார். இந்தப் படத்தின் கதை காப்புரிமை மீறல் புகார் தொடர்பான வழக்கில், ஷங்கருக்கு சொந்தமான ரூ.11.10 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.

இதனையடுத்து, சொத்து முடக்கத்தை எதிர்த்து இயக்குநர் ஷங்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தனி நபர் அளித்த புகாரில் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி இருக்கக் கூடாது என தெரிவித்து, சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்திருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சுரேந்தர் அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இயக்குநர் ஷங்கர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ் ராமன், அவருக்கு எதிரான வழக்குகளை புகார்தாரர் ஆரூர் தமிழ்நாடன் திரும்பப் பெற்றுள்ளதால் மூல வழக்கு ஏதுமில்லை என தெரிவித்தார்.
இதுகுறித்து விளக்கம் அளிக்க அமலாக்கத்துறை கால அவகாசம் கேட்டுக் கொண்டதையடுத்து, வழக்கு விசாரணையை ஜூன் 15 ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். மேலும் அதுவரை வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து உத்தரவிட்டனர்.
-
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications