ராமதாஸ் - அன்புமணி இடையில் மனக்கசப்பு ஏன்? காரணத்தை அடுக்கிய இயக்குநர் தங்கர் பச்சான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையில் ஏற்பட்டுள்ள மனக்கசப்பு தொடர்பான அக்கட்சியின் நிர்வாகியும், இயக்குநருமான தங்கர் பச்சான் விளக்கம் அளித்துள்ளார். ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையில் ஏற்பட்டுள்ள மனக்கசப்பு பாமகவை வலுப்படுத்துவதற்காக தான் என்று கூறியுள்ள தங்கர் பச்சான், பாமக தன்னை புதுப்பித்து கொண்டு வருவதாக கூறியுள்ளார்.

பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையிலான மோதல் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது. 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு பின்னரே பாமக தலைவர் பதவியை அன்புமணியிடம் கொடுப்பேன் என்று கூறி வந்த ராமதாஸ், சில நாட்களுக்கு முன்பாக கடைசி மூச்சு இருக்கும் வரை அன்புமணிக்கு தலைவர் பதவியை கொடுக்க மாட்டேன் என்று அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார்.

Director Thangar Bachan Clarifies PMK Rift Between Ramadoss and Anbumani

ராமதாஸ் பேட்டி

இதனைத் தொடர்ந்து அன்புமணி நேரடியாகவே பொதுக்குழு கூட்டத்தில் மன்னிப்பு கேட்டார். இருந்தாலும் பாமகவின் மூத்த நிர்வாகிகளான ஜிகே மணி, அருள் உள்ளிட்டோரை அன்புமணி கிண்டல் செய்தது விமர்சனத்திற்கு உள்ளானது. இதையடுத்து அன்புமணி பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பான கேள்விக்கு, அன்புமணி அவரின் பணியை செய்கிறார் என்று ராமதாஸ் தெரிவித்தார்.

பாமகவுக்கு பின்னடைவு

அடுத்த மாதம் அன்புமணி உரிமை மீட்பு பயணம் புறப்பட உள்ள நிலையில், ராமதாஸ் - அன்புமணி இடையிலான மோதல் பாமகவுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தி இருப்பதாக பார்க்கப்படுகிறது. இதனிடையே சட்டமன்றத் தேர்தலும் நெருங்கி வருவதால், ராமதாஸ் - அன்புமணியை சமாதானம் செய்யும் நோக்கில் பாமகவின் முக்கிய தலைவர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

தங்கர் பச்சான் விளக்கம்

இந்த நிலையில் பாமக நிர்வாகியும், இயக்குநருமான தங்கர் பச்சான் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ராமதாஸ் - அன்புமணி ஏற்பட்டுள்ள மனக்கசப்பு என்பது கட்சியை வலுப்படுத்துவதற்கானது. ஏற்கனவே கொள்கை அளவில் உருவாக்கப்பட்ட பாமக கட்சி. மக்கள் இயக்கமாக உருவான கட்சி அது. யாரும் கட்சியை உருவாக்கி கையில் கொடுத்துவிட்டு செல்லவில்லை.

பாமக பலம்பெறுகிறது

அது அனைத்து மக்களுக்கும் போராடக் கூடிய கட்சி. அதற்கு பின்னடைவுகள் ஏற்படுத்தாதவாறு அடுத்து வர தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதற்காக தான் இது. வன்னியர் சங்க மாநாட்டிலேயே பார்த்து இருப்பீர்கள். மாநாட்டிற்கு வந்தவர்கள் தான் வாக்கு அளிக்க போகிறவர்கள். தொண்டர்களும், மக்களும் மாறவில்லை. பாமகவின் வாக்குகள் முன்பைவிட பலமானதாக மாறி வருகிறது.

சிக்கல் முடிவுக்கு வரும்

இந்த பிரச்சனை பாமகவுக்கு தேர்தலில் எந்த பின்னடைவையும் ஏற்படுத்தாது. நான் அவர்களுடன் இருக்கிறேன். என்ன நடக்கிறது என்பது நன்றாகவே தெரியும். பாமக தன்னை புதுப்பித்து கொள்கிறது. பாமக மிக முக்கியமான கட்சியாக, அதன் வீரியத்தை இனி பார்ப்பீர்கள். நிர்வாகிகள் 10 பேர் கூட இருப்பார்கள். ஆனால் அந்த கட்சிக்கான வாக்காளர்கள் சிதறமாட்டார்கள். சிக்கல்கள் வெகு விரைவில் முடிவுக்கு வரும். தேர்தல் வரும் போது பாருங்கள். அதிமுகவில் மனக்கசப்பு இல்லையா.. என்று தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+