அந்த இளைஞர்களை அரசியல்படுத்த தவறிவிட்டோம்... விஜய் மாநாட்டை விமர்சித்த டைரக்டர் வசந்தபாலன்
சென்னை: வெயில், அங்காடித் தெரு பட இயக்குனர் வசந்தபாலன் விஜய்யின் மாநாட்டை பெயர் குறிப்பிடாமல் விமர்சித்து பேசியுள்ளார். சமீபத்தில் ஒரு அரசியல் மாநாட்டை பார்த்ததாகவும், அங்கு இளைஞர்கள் அரசியல்படுத்தப்படாமல் இருக்கிறார்கள் என்றும், காலையிலிருந்து வெயிலில் நின்று கருகி சாவுகிறாங்க... மேடையில் இருந்து தூக்கி வீசப்படுகிறாங்க... இதைப் பார்த்தப்போது ரொம்ப கவலையாக இருந்ததாக பூக்கி படத்தின் பூஜை விழாவில் வசந்தபாலன் பேசினார்.
வெயில் திரைப்படத்தை இயக்கி பிரபலமானவர் வசந்தபாலன். இவர் அங்காடித் தெரு, காவியத்தலைவன், அரவான், அநீதி ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். இயக்குநர் சங்கரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் ஆவார். இந்த நிலையில் இன்று நடந்த பூக்கி படத்தின் பூஜை விழாவில் இயக்குநர் வசந்தபாலன் கலந்து கொண்டார்.

இயக்குநர் வசந்தபாலன் பேச்சு
அப்போது பேசிய அவர், ஒரு கட்சி மாநாடு பார்த்தேன்... அங்கு இளைஞர்கள் அரசியல்படுத்தப்படாமல், வெயிலில் கருகி, மேடையில் இருந்து தூக்கி வீசப்படுவதை பார்ப்பதற்கு கவலையாக இருந்ததாக கூறியுள்ளார். அங்கு திரண்டிருந்தவர்களை அரசியல்படுத்த தவறவிட்டோம் என்று தோன்றியதாக கூறியுள்ளார். வசந்தபாலன் பேச்சு விஜய் மாநாட்டை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் அமைந்துள்ளது. விழாவில் வசந்தபாலன் பேசியதாவது:-
வெயிலில் நின்று கருகி சாவுகிறாங்க..
"சமீபத்தில் ஒரு அரசியல் கட்சியின் மாநாட்டை பார்த்தேன். அந்த மாநாட்டை பார்க்கின்றபோது இளைஞர்கள் எல்லாம் அரசியல்படுத்தப்படாமல் இருக்கிறார்கள்... காலையிலிருந்து வெயிலில் நின்று கருகி சாவுகிறாங்க... மேடையில் இருந்து தூக்கி வீசப்படுகிறார்கள். அப்படின்னு பார்க்கின்றபோது ரொம்ப கவலையாக இருந்துச்சு..."
"எதோ ஒரு விதத்தில் அந்த இளைஞர்களை எதோ ஒரு விதத்தில் கவர தவறிவிட்டோம்... அவர்களை அரசியல்படுத்த தவறிவிட்டோம்... அவர்களின் குரலை பேச தவறிவிட்டோம்... அப்படின்னு அங்கு திரண்டு இருந்த இளைஞர்களைப் பார்த்ததும் தோன்றிச்சு... அவங்க குரல் தொடர்ந்து சினிமாவுல பதிவாகவே இல்லை... அவங்க குரலைத் தாண்டி வேறுவேறு குரலில் நிறைய படங்கள் பேன் இந்தியா படங்களாக வெளியானன..."
விஜய் மாநாட்டை மறைமுகமாக விமர்சித்தாரா?
"ஆனால் இளைஞர்கள் குரல்... இளைஞர்களின் மொழி... இளைஞர்களின் உலகம் என மொத்தமாகவே இன்னும் பதிவாகாமல் இருந்து கொண்டிருப்பதால்தான் இன்னும் அந்த குரல் வேறொரு திசையை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது என்பதை அந்த கூட்டத்தை பார்த்துத் தோனுச்சு...
அந்த குரல் பேசப்பட வேண்டும் என்று கவலைப்பட்டேன்... அந்த இளைஞர்களின் குரல் என்ன? அவங்க மனசு என்ன? அவங்களுடைய உலகம் என்ன என்பதையெல்லாம் பேசப்பட வேண்டும் என எனக்கு தோனுச்சு..." இவ்வாறு அவர் பேசினார். வசந்தபாலன் பேச்சு, விஜய் மாநாட்டை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் அமைந்துள்ளது.
-
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சென்னையில் 20 லட்சம் கொடுத்து ஆசை ஆசையாக லீசுக்கு குடியேறிய வீடு.. இப்படியும் ஏமாறலாம் மக்களே -
தலைமை செயலகத்திற்கு திடீர் விசிட் வந்த செங்கோட்டையன்.. தேர்தல் அதிகாரியிடம் மனு -
விஜய்க்கு பெண் இனத்தில் மன்னிப்பே கிடையாது.. பெற்றோர், மனைவிக்கு இப்படியா செய்வாங்க? நிர்மலா பெரியசாமி ஆதங்கம் -
டிஜிபி அலுவலகத்துக்கு நேரில் போன விஜய்.. பொன்ராஜ் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு! -
உங்க விஜய் நான் வறேன்.. களத்தில் இறங்கிட்டாரு விஜய்! ஒரே நாளில் 5 இடத்தில் பரப்புரை! எங்கே? எப்போது? -
வடக்கில் தொடங்கும் விஜய்.. பெரம்பூரில் மாஸ் காட்ட பலே ப்ளான்! 2026ல் கைகொடுக்குமா? திடீர் கோரிக்கை! -
பெரம்பூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது விஜய்க்கு சாதகமா? கள நிலவரம் என்ன? டேட்டாவை பாருங்க -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
காங்கிரஸில் இருந்து சஸ்பெண்ட்! அடுத்த நாளே விஜய்யை சந்தித்த பிடி செல்வம்! தவெகவில் ஐக்கியம் -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு












Click it and Unblock the Notifications