தமிழக சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம்.. முக்கிய மசோதாக்கள் தாக்கலாகிறதா?
சென்னை: தமிழக சட்டசபையில் தாக்கலான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது.
2024 ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் கடந்த 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது.

கடந்த 15 ஆம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதல்வர் ஸ்டாலின் பதில் உரை ஆற்றினார். இதையடுத்து தமிழக நிதிநிலை அறிக்கை தடைகளைத் தாண்டி என்ற தலைப்பில் கடந்த 19 ஆம் தேதி நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தமிழகத்தின் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்திருந்தார்.
இதையடுத்து வரவு செலவு குறித்த விவரங்களையும் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் நேற்றைய தினம் வேளாண் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்ய சட்டசபை கூட்டம் நேற்று காலை 10 மணிக்கு கூடியது. இந்த வேளாண் பட்ஜெட்டை உழவர் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தாக்கல் செய்திருந்தார்.
முன் பண மானிய கோரிக்கைகள் மீது விவாதமின்றி வாக்கெடுப்பு நடத்தப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் சட்டசபையில் தாக்கலான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீது இன்றைய தினம் காலை, மாலை இரு வேளைகளும் விவாதம் நடத்தப்படுகிறது.
இன்றைய தினம் முக்கிய மசோதாக்கள் தாக்கலாகுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. மேலும் பட்ஜெட்டில் வார்த்தை ஜாலங்கள் மட்டுமே உள்ளதாக குற்றம்சாட்டிய அதிமுகவும் பாஜகவும் சட்டசபையை புறக்கணித்து வெளிநடப்பு செய்யவும் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்று நடந்த பட்ஜெட் மீதான விவாதத்திற்கு நாளை (பிப்ரவரி 22 ஆம் தேதி) துறை அமைச்சர்கள் தங்கம் தென்னரசுவும் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வமும் பதில் அளிப்பார்கள்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications