Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"மாதவிடாய்".. புதருக்குள்ளே அலறிய இளம்பெண்.. 4 காம வெறியர்களின் கொடூரம்.. கதிகலங்கிய கும்பகோணம்

வங்கி பெண் ஊழியர் கூட்டு பலாத்கார வழக்கில் முக்கிய தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாதவிடாய் என்றும் பாராமல், மனசாட்சியும் இல்லாமல் இளம்பெண்ணை சீரழித்த 4 காமுகர்களுக்கு ஆயுள் தண்டனை உறுதியாகி உள்ளது... சாகும் வரை சிறை தண்டனை பெற்ற கைதியின் ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2018-ல் நடந்த சம்பவம் இது:

அந்த இளம் பெண் டெல்லியை சேர்ந்தவர்.. இவருக்கு திடீரென கும்பகோணத்தில் உள்ள தனியார் வங்கியில் வேலை கிடைத்தது... இதற்காக அவர் ஒருநாள் டெல்லியில் இருந்து ரெயில் ஏறி கும்பகோணம் வந்தார்.

அப்போது நள்ளிரவு 11 மணிக்கு மேல் ஆகிவிட்டது.. எங்காவது தங்கும் ஹோட்டல் கிடைத்தால், அங்கு இரவை கழித்துவிட்டு மறுநாள் வேலை விஷயமாக செல்லலாம் என்று முடிவு செய்தார்..

அட்ரஸ்

அட்ரஸ்

அந்த பெண்ணுக்கு தமிழ் தெரியாது என்பதால், ஆங்கிலத்தில் அங்கு இருந்த ஒரு ஆட்டோ டிரைவரை அழைத்து தான் செல்ல வேண்டிய அட்ரஸ்ஸை காண்பித்து அங்கு தன்னை கொண்டு சென்று விடுமாறு கேட்டுள்ளார்... ஆனால் அந்த ஆட்டோ டிரைவர், அந்த பெண் குறிப்பிட்ட இடத்துக்கு செல்லாமல் செட்டிமண்டபம் பைபாஸ் சாலை பகுதிக்கு அழைத்து சென்றார். அப்போது ஏதோ விபரீதம் நடப்பதாக எண்ணிய அந்த பெண், ஆட்டோவில் இருந்தபடியே ஆங்கிலத்திலேயே கூச்சலிட்டுள்ளார்.. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆட்டோ டிரைவர் பயந்துபோய் அந்த பெண்ணை பாதியிலேயே பைபாஸ் சாலையில் இறக்கி விட்டு விட்டு சென்று விட்டார்.

ஹோட்டல்

ஹோட்டல்

நள்ளிரவில், மொழியும் தெரியும், பாதி வழியில் எங்கு போவது என்றும் தெரியாமல் அந்த பெண் தவித்துள்ளார்.. அப்போது அந்த வழியாக பைக்கில் ஒரு இளைஞர் வந்தார்.. அவரிடம் தான் செல்ல வேண்டிய இடத்தில் கொண்டு சென்று விடுமாறு கேட்டுள்ளார்... ஆனால் அந்த இளைஞர் அந்த பெண்ணை அழைத்து செல்வதாக கூறி, அந்த பகுதியில் உள்ள ஒரு மறைவான இடத்துக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்துள்ளார்.. பிறகு தன்னுடைய நண்பர்கள் 3 பேருக்கும் போனை போட்டு அவர்களையும் வரவழைத்துள்ளார்..

 மாதவிடாய்

மாதவிடாய்

4 பேருமே போதையில் இருந்திருக்கிறார்கள்.. ஏற்கனவே மாதவிடாய் வலியால் துடித்த அந்த பெண்ணை, மனசாட்சியே இல்லாமல் 2 மணி நேரம் பலாத்காரம் செய்துள்ளனர்.. இது தொடர்பாக வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டிவிட்டும் சென்றுள்ளனர்.. இதற்கு பிறகு, அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோ, அந்த பெண்ணின் நிலைமையை கண்டு பதறிப்போய், கும்பகோணத்தில் வந்து இறக்கிவிட்டு போனது.. பிறகு, தனக்கு நடந்த பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அந்த பெண், தன்னுடைய வங்கிக்கு சென்று நடந்த சம்பவங்களை கூறி கதறி அழுதுள்ளார். இது குறித்து வங்கி நிர்வாகத்தின் உதவியோடு அந்த பெண் கும்பகோணம் மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில்தான் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

 4 பேர் கைது

4 பேர் கைது

இந்த சம்பவம் பெருத்த அதிர்ச்சியை நாடு முழுவதும் ஏற்படுத்தி இருந்தது.. இதுகுறித்து வங்கி அதிகாரிகள் கும்பகோணம் மேற்கு போலீசில் புகார் செய்தனர்... அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து, புருஷோத்தமன் உள்பட 4 பேரை கைது செய்தனர். இந்த வழக்கை தஞ்சாவூர் மாவட்ட மகளிர் கோர்ட்டும் விசாரித்தது... இதன் தீர்ப்பும் வந்தது.. குற்றவாளிகளான தினேஷ், புருஷோத்தமன், வசந்தகுமார், அன்பரசன் ஆகிய 4 பேருக்கும் சாகும் வரை சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது. அவர்கள் 4 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தண்டனையை எதிர்த்து அவர்கள் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்..

 கோர்ட் அதிரடி

கோர்ட் அதிரடி

மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் உள்ளதால் தண்டனையை நிறுத்திவைத்து தனக்கு ஜாமீன் கேட்டு புருஷோத்தமன், மற்றொரு மனு தாக்கல் செய்திருந்தார்.. இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆனந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு நேற்றைய தினம் வந்தது.. அப்போது நீதிபதிகள், மனுதாரருக்கு ஜாமீன் தர மறுத்து விட்டனர். பிறகு இந்த மனுவை வாபஸ் பெறுவதாக தெரிவித்ததால், இந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+