சென்னையில் கிடுகிடு உயர்வு.. 29 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு.... முழு விவரம்
சென்னை: தமிழகத்தில் இன்று 29 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலையில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரத்தை பார்ப்போம்
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1974 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக 1415 பேருக்கு சென்னையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31,896 ஆக உயர்ந்துள்ளது.

எங்கு பாதிப்பு
சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டி 178 பேருக்கும், திருவள்ளூரில் 81 பேருக்கும், திருவண்ணாமலையில் 31 பேருக்கும், திருநெல்வேலியில் 19 பேருக்கும், விழுப்புரத்தில் 15 பேருக்கும், மதுரையில் 16 பெருக்கும், ராமநாதபுரத்தில் 23 பேருக்கும், சேலத்தில் 10 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவகங்கையில் 14 பேருக்கும், தென்காசியில் 16 பேருக்கும், தேனியில் 8 பேருக்கும், திருச்சி மற்றும் வேலூரில் தலா 9 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

விருதுநகரில் 6 பேர்
கோவையில் 3 பேருக்கும், தருமபுரி, ஈரோடு, கரூர் , பெரம்பலூரில் தலா ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூரில் 4 பேருக்கும், திருவாரூரில் 8 பேருக்கும், திருப்பூரில் ஒருவருக்கும், விருதுநகரில் 6 பேருக்கும், ராணிப்பேட்டையில் 6 பேருக்கும், நாகப்பட்டினத்தில் 7 பேருக்கும், திருப்பத்தூரில் 2 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா நிலவரம்
தமிழகத்தில் 28 மாவட்டங்களில் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் கொரானாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44,661 ஆக உயர்ந்துள்ளது. இதில் 19676 பேர் மருத்துவமனைகளில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 435 பேர் உயிரிழந்துவிட்டனர். 24547 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சென்னையில் அதிகம்
தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் 14667 பேரும், செங்கல்பட்டில் 1602 பேரும், திருவள்ளூரில் 988 பேரும், காஞ்சிபுரத்தில் 291 பேரும், திருவண்ணாமலையில் 248 பேரும் கொரோனா பாதிப்புடன் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தென் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. மதுரையில் 145 பேரும், தூத்துக்குடியில் 101 பேரும், திருநெல்வேலியில் 89 பேரும் மருத்துவமனையில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுகிறார்கள். கள்ளக்குறிச்சியில் நோய் தொற்றுடன் 97 பேரும், ராணிப்பேட்டையில் 89 பேரும், வேலூரில் 99 பேரும் சிகிச்சை பெறுகிறார்கள்.
தமிழகத்தில் 44661 பேருக்கு கொரோனா தொற்று ஜுன் 14 ம் தேதி நிலவரப்படி உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரானா தொற்று என்பதை இப்போது பார்ப்போம்.
- அரியலூர் 392
- செங்கல்பட்டு 2882
- சென்னை 31896
- கோவை 176
- கடலூர் 533
- தர்மபுரி 27
- திண்டுக்கல் 218
- ஈரோடு 73
- கள்ளக்குறிச்சி 344
- காஞ்சிபுரம் 709
- கன்னியாகுமரி 122
- கரூர் 94
- கிருஷ்ணகிரி 39
- மதுரை 426
- நாகப்பட்டினம் 113
- நாமக்கல் 92
- நீலகிரி 14
- பெரம்பலூர் 146
- புதுக்கோட்டை 51
- ராமநாதபுரம் 158
- ராணிப்பேட்டை 197
- சேலம் 229
- சிவகங்கை 90
- தென்காசி 134
- தஞ்சாவூர் 155
- தேனி 146
- திருப்பத்தூர் 47
- திருவள்ளூர் 1865
- திருவண்ணாமலை 671
- திருவாரூர் 128
- தூத்துக்குடி 398
- திருநெல்வேலி 464
- திருப்பூர் 116
- திருச்சி 163
- வேலூர் 152
- விழுப்புரம் 437
- விருதுநகர் 170
- விமான நிலைய கண்காணிப்பில்: 200
(வெளிநாடு)
- விமான நிலைய கண்காணிப்பில் 85
(உள்நாடு)
- ரயில் நிலைய கண்காணிப்பில்: 309
-
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
இப்போ தெரிஞ்சு போயிரும்.. இன்னொரு எலக்சனுக்கு தயாராகும் தமிழகம்! சுறுசுறுப்பாய் தொடங்கிய ஏற்பாடுகள்! -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்!












Click it and Unblock the Notifications