எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை?.. வண்ணங்களின் அடிப்படையில் கொரோனா மேப் வெளியிட்ட அரசு
சென்னை: தமிழகத்திலேயே சென்னையில் அதிகபட்சமாக 43 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,821 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துவிட்டது.
தமிழகத்தில் 50 சதவீதம் பேர் குணமாகி வீடு திரும்பிவிட்டதாக சுகாதாரத் துறை கூறுகிறது. இந்த நிலையில் இன்று கொரோனா பாதித்த 66 பேரில் 43 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவர்.

விருதுநகரில் 2 பேர்
செங்கல்பட்டில் ஒருவருக்கும் சென்னையில் 43 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 7 பேருக்கும், மதுரையில் 4 பேருக்கும், பெரம்பலூரில் 2 பேருக்கும், தென்காசியில் 5 பேருக்கும், திருவண்ணாமலையில் ஒருவருக்கும் விழுப்புரத்தில் ஒருவருக்கும் விருதுநகரில் 2 பேருக்கும் இன்று கொரோனா பாதித்துள்ளது.

பச்சை
தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் 30 மாவட்டங்களில் சிகப்பு மண்டலங்களாகவும் 7 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலமாகவும் ஒரே ஒரு மாவட்டம் மட்டும் பச்சை மண்டலமாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. 15க்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு இருந்தால் அவை சிகப்பு மண்டலமாகவும் அதைவிட குறைவாக இருந்தால் ஆரஞ்சு மண்டலமாகவும் கடந்த 28 நாட்களாக புதிய பாதிப்புகள் இல்லாதது பச்சை மண்டலமாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

61 பெண்கள்
பிறந்த குழந்தை முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் ஆண் குழந்தைகள் 55 பேரும், பெண் குழந்தைகள் 49 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அது போல் 13 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்களில் 1032 ஆண்களும், 471 பெண்களும், 60 வயதிற்கு மேற்பட்டவர்களில் 153 ஆண்களும் 61 பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிப்பு எண்ணிக்கை
மாவட்ட வாரியாக மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை:
அரியலூரில் 6 பேர், செங்கல்பட்டில் 58 பேர், சென்னையில் 495 பேர், கோவையில் 141 பேர், கடலூரில் 26 பேர், தருமபுரியில் ஒருவர், திண்டுக்கல்லில் 80 பேர், ஈரோட்டில் 70 பேர், கள்ளக்குறிச்சியில் 5 பேர், காஞ்சிபுரத்தில் 19 பேர், குமரியில் 16 பேர், கரூரில் 42 பேர், மதுரையில் 60 பேர் , நாகப்பட்டினத்தில் 44 பேர், நாமக்கலில் 55 பேர், நீலகரியில் 9 பேர், பெரம்பலூரில் 7 பேர், புதுக்கோட்டையில் ஒருவர், ராமநாதபுரத்தில் 14 பேர், ராணிப்பேட்டையில் 39 பேர், சேலத்தில் 30 பேர், சிவகங்கையில் 12 பேர், தென்காசியில் 38 பேர், தஞ்சையில் 55 பேர், தேனியில் 43 பேர், நெல்லையில் 63 பேர், திருப்பத்தூரில் 18 பேர், திருப்பூரில் 110 பேர், திருவள்ளூரில் 52 பேர், திருவண்ணாமலையில் 15 பேர் , திருவாரூரில் 29 பேர், திருச்சியில் 51 பேர், தூத்துக்குடியில் 27 பேர், வேலூரில் 22 பேர், விழுப்புரத்தில் 43 பேர், விருதுநகரில் 25 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications