பிரிந்து கிடக்கும் அதிமுக ஒன்றிணைய வேண்டும்.. எம்ஜிஆர் பிறந்தநாளில் தூதுவிட்ட ஓபிஎஸ்
சென்னை: உலகத்திலேயே பிரிந்தவர்கள் இணையக் கூடாது என்று சொல்லும் ஒரே நபர் எடப்பாடி பழனிசாமி தான் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். பிரிந்து கிடக்கும் அதிமுக ஒன்றுபட வேண்டும் என்பதே அனைவரின் எண்ணம் என்று கூறிய ஓபிஎஸ், வரும் தேர்தலில் அனைவரும் இணைந்து போட்டியிட்டால் நம்மை யாராலும் வெல்ல முடியாது என்று கூறியுள்ளார்.
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 108வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி அதிமுகவினர் எம்ஜிஆர் மாளிகையில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து ஓபிஎஸ் பேசுகையில், சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி மக்களின் பிரச்சனைகளை வலுவாக எடுத்து வைப்பதில்லை. அவரின் உடல்மொழியை பார்க்கும் போது, உலகிலேயே எங்குமில்லாத கூட்டணியாக ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் இருக்கிறது. அதுதான் மக்களின் பேச்சாக இருக்கிறது.
ஒரு முதலமைச்சர் எதிர்க்கட்சித் தலைவரை பார்த்து ஹலோ, ஹலோ சுகமா என்று கேட்கிறார். அதற்கு அவரும், ஆமாம்.. நீங்களும் நலமா என்று அவரும் சொல்கிறார். இப்படிதான் சட்டமன்றம் நடக்கிறது. அதேபோல் நாங்கள் தொடர்ந்து இணைப்புக்கான முயற்சியை மேற்கொண்டு வருகிறோம். உலகத்திலேயே பிரிந்த சக்திகள் இணையக் கூடாது என்று சொல்கிற ஒரே நபர் எடப்பாடி பழனிசாமி தான்.
இதனை நாட்டு மக்களும் நன்றாக புரிந்து வைத்துள்ளனர். நாங்கள் இணைய வேண்டும் என்று தான் கூக்குரல் கொடுத்து கொண்டு இருக்கிறோம். அவர் இணைய முடியாது என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார். கூடிய விரைவில் மக்கள் என்ன நினைக்கிறார்களோ, அந்த முடிவுக்கு வருவோம். பிரிந்து கிடக்கும் அதிமுக ஒன்றுபட வேண்டும் என்பதே அனைவரின் எண்ணம்.
வரும் தேர்தலில் அனைவரும் இணைந்து போட்டியிட்டால் நம்மை யாராலும் வெல்ல முடியாது என்று தெரிவித்துள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 14 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அதிமுக ஒன்றுபடுமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. ஏனென்றால் நாடாளுமன்றத் தேர்தலிலேயே தென் மாவட்டங்களில் அதிமுக பல்வேறு தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டது.
-
பனையூரில் மெகா சம்பவம் ரெடி.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் தவெகவில் இணையும் மாஜி அமைச்சர்கள்! -
களத்தில் இறங்கிய எடப்பாடி.. தவெக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அதிமுக உடன் இணைகிறதா அமமுக? காட்டுத்தீயாகப் பரவும் தகவலுக்கு டிடிவி தினகரன் விளக்கம்! -
ராமதாஸின் விஸ்வாசிக்கு வலைவீசும் விஜய்.. தவெகவில் இணையும் அதிமுக மாஜி அமைச்சர் செல்லப்பாண்டியன்? -
திமுகவின் கோட்டையை சிதறடித்த தவெக.. சென்னை அதிமுக நிர்வாகிகளை தூக்கும் அறிவாலயம்.. பின்னணி! -
கருகுது இரட்டை இலை.. திமுகவுக்கு தாவும் சி.விஜயபாஸ்கர்? பெரிய பொறுப்புடன் வரவேற்கும் மு.க.ஸ்டாலின்! -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
“தீயசக்தி, தீர்ந்துபோன சக்தி.. கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும்” - திமுக, அதிமுகவுக்கு தவெக பதிலடி! -
அதிகரித்த மின்வெட்டு! அவதியான மக்கள்! வேடிக்கை பார்க்கும் பொய்க்கால் குதிரை அரசு! விளாசிய எடப்பாடி -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி












Click it and Unblock the Notifications