தீபாவளி பண்டிகை: பெண்களே வங்கிக் கணக்கை செக் செய்தீர்களா! ரூ 1000 வந்துவிட்டதா? இன்னிக்கு பாருங்க!
சென்னை: தீபாவளி பண்டிகையை ஒட்டி முன்கூட்டியே கலைஞர் மகளிர் உரிமைத் தொகையான ரூ 1000 வரவு வைக்கப்பட்டது.
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கினார். இது திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

ஆட்சிக்கு வந்ததும் ரூ 1000 அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காலதாமதமாக இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் முதல் கட்டமாக 1.06 கோடி பேருக்கு ரூ 1000 திட்டம் வழங்கப்பட்டது.
இந்த மகளிர் உரிமை திட்டத்திற்கு அரசு சார்பில் சில விதிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த விதிகளுக்குள்படும் மகளிருக்கு மட்டுமே ரூ 1000 வழங்கப்படுகிறது. மொத்தம் விண்ணப்பித்தவர்களில் சுமார் 57 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சில தகவல்கள் கிடைத்துள்ளன. அதாவது ரூ 1000 உதவித் தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்களில் 3 லட்சம் பேர் அரசு பணியாளர்கள் என்பதால் அவை நிராகரிக்கப்பட்டுள்ளன.
அது போல் சொந்த கார், ஆண்டுக்கு 3600 யூனிட்களுக்கு மேல் மின்சரத்தை பயன்படுத்துவோர் இதில் விண்ணப்பித்தனர். அரசு ஊழியர்கள், மக்கள் பிரதிநிதிகள், கார், பைக் வைத்திருப்போர், சொந்த வீடு வைத்திருப்போருக்கும் ரூ 1000 கிடையாது. இந்த திட்டத்தில் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டது. அத்துடன், விடுபட்டவர்களும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
அந்த வகையில் இதுவரை 11.85 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து மேல்முறையீடு மற்றும் புதிதாக விண்ணப்பித்துள்ள 11.85 லட்சம் மகளிரின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டன. இந்த ரூ 1000 மாதந்தோறும் 15 அல்லது 16 தேதிகளில் வரவைக்கப்படுகிறது.
இந்த மாதம் தீபாவளி பண்டிகை வரும் 12 ஆம் தேதி கொண்டாடப்படுவதால் முன்கூட்டியே ரூ 1000 வரவு வைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் இன்றைய தினமே ரூ 1000 வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியாக ரூ 1000த்தை கூடுதலாக வைத்துக் கொண்டு தீபாவளியை சிறப்பாக கொண்டாட வழிவகுக்கும்.












Click it and Unblock the Notifications