தீபாவளி நெருங்குதே.. சொந்த ஊர் செல்வோர் கவனத்திற்கு.. வெளியான சூப்பர் செய்தி.. இதை நோட் பண்ணுங்க
சென்னை: நமது நாட்டில் முக்கிய பண்டிகையான தீபாவளியன்று அனைவரும் தங்கள் சொந்த ஊருக்குச் சென்று தீபாவளியைக் கொண்டாடுவார்கள். அதற்கேற்ப தமிழக அரசு தீபாவளிக்கு மறுநாளான வெள்ளிக்கிழமை அரசு விடுமுறையாகவும் அறிவித்துள்ளது. இதற்கிடையே பண்டியையொட்டி பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப ஏதுவாக இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகை என்றால் அது தீபாவளி தான். இந்து பண்டிகையான தீபாவளியை பொதுவாக பல்வேறு மதத்தைச் சேர்ந்தவர்களும் கொண்டாடுவார்கள்.

தீபாவளி: இந்தாண்டு வரும் அக். 31ம் தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது. அக். 31ம் தேதி வியாழக்கிழமை வரும் நிலையில், அதற்கு மறுநாளான வெள்ளிக்கிழமையும் அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் அக். 31 தொடங்கி நான்கு நாள்கள் விடுமுறை வருகிறது. இதனால் பலரும் அக். 28 மாலை முதலே ஊருக்குச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறப்பு ரயில்கள்: தீபாவளி பண்டிகைக்கு மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல ஏதுவாக சிறப்பு ரயில்களை ரயில்வே நிர்வாகம் அறிவித்து வருகிறது. இதற்கிடையே சென்னை பெங்களூர் இடையே தீபாவளியை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அக்.30 மற்றும் நவம்பர் 3ம் தேதிகளில் சென்னை-பெங்களூரு இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
ரயில்வே கம்பளிகள் மாதம் ஒருமுறை மட்டுமே துவைக்கப்படுகின்றன! ஆர்டிஐ-ல் வெளியான ஷாக் தகவல்
இந்த இரு தேதிகளிலும் காலை 8.05 மணிக்கு இந்த ரயில் பெங்களூரில் இருந்து புறப்படும். இது பிற்பகல் 2.30 மணிக்கு எழும்பூர் வரும் நிலையில், மறுமார்க்கத்தில் பிற்பகல் 3.55 மணிக்கு எழும்பூரில் இருந்து ரயில் கிளம்பும். அது இரவு 10.50க்கு பெங்களூர் சென்றடையும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னை- பெங்களூர் இடையே எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் நிலையில், இந்த சிறப்பு ரயில் மக்களுக்கு மிகப் பெரியளவில் உதவியாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
சிறப்பு ரயில்கள்: முன்னதாக தீபாவளிக்கு முந்தைய நாள்களில் 7 சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே ஒப்புதல் அளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அதன்படி அக். 20ம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து நாகர்கோவிலுக்கு ரயில் இயக்கப்படும். தொடர்ந்து அக். 29 மற்றும் நவம்பர் 2 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து கோவைக்கும் ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர அக். 30ம் தேதி நெல்லைக்கும், சென்னை எழும்பூரில் இருந்து அக். 30 மற்றும் நவ. 2ம் தேதி செங்கோட்டைக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. மேலும், சில முக்கியமான ரூட்களிலும் சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications