ஆவின் ஸ்வீட் எடு..தீபாவளி கொண்டாடு.. 3200 டன் இனிப்பு..ரூ.250 கோடி விற்பனை இலக்கு
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவினில் 3200 டன் இனிப்பு தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் நாசர் கூறியுள்ளார். ரூ. 250 கோடி விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் நாசர் கூறியுள்ளார்.
தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசும் பலகாரமும்தான். அதுவும் தரமான பலகாரங்களை சாப்பிட வேண்டும் என்றுதான் பலரும் விரும்புவார்கள். பல இனிப்பு கடைகள் பலகார சீட்டுகளை பிடித்து மக்களுக்கு இனிப்பு, காரங்களை வழங்குவார்கள்.
கடந்த ஆண்டு தீபாவளியின் போது இந்த இனிப்பு வகைகள் ரூ. 85 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு ஏற்கனவே உள்ள 275 பால், இனிப்பு வகை பொருட்களுடன், நெய் பாதுஷா, கருப்பட்டி அல்வா, நட்ஸ் அல்வா, காஜு கட்லி உள்ளிட்டவற்றுடன் புதிதாக 9 இனிப்பு வகைகள் அறிமுகப்படுத்தபட்டுள்ளது.

தீபாவளிக்கு தயாராகும் ஆவின்
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே உள்ளது. இதைத் தொடர்ந்து, ஆவின் நிறுவனம் சார்பில், இந்த தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு மற்றும் கார வகைகளை விற்பனை செய்வதற்கான பணிகள் கடந்த சில நாட்களாக அம்பத்தூர் பால் பண்ணையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அம்பத்தூர் பால்பண்ணையில் நேற்றிரவு அமைச்சர் சா.மு.நாசர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

3200 டன் இனிப்புகள்
செய்தியாளர்களிடம் பேசிய பால்வளத்துறை அமைச்சர் நாசர், கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு ரூ.85 கோடிக்கு ஆவின் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு தீபாவளிக்கு, புதிதாக 11 வகை இனிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து, ரூ. 250 கோடி இலக்கு வைத்து, சுமார் 3200 டன் இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ஆர்டர்கள் அதிகரிப்பு
ஆவின் இனிப்பு மற்றும் கார வகைக்கு ஆர்டர் அதிகரிக்கும். தற்போது போக்குவரத்து துறையில் இருந்து 70 டன் இனிப்புக்கு ஆர்டர் வந்துள்ளது. மற்ற அரசு துறைகளில் இருந்து ஆர்டர்கள் வரும் என எதிர்பார்க்கிறோம். சுத்தமான நெய் கொண்டு, எவ்வித கலப்படமும் இல்லாமல் ஆவின் இனிப்புகள் தயாரிக்கப்படுகின்றன.

மக்கள் விரும்பும் இனிப்புகள்
இதனால் எந்தவொரு விளம்பரமும் இல்லாமல் மக்கள் விரும்பும் உணவாக ஆவின் மாறியுள்ளது. கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், செம்பரம்பாக்கம் ஏரி திறப்பின்போது ஆவின் பால் ரூ.80க்கு விற்கப்பட்டது. தற்போது எந்தவொரு பேரிடர் வந்தாலும், ஆவின் பால் பொருட்கள் தங்குதடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்று அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்தார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications