தீபாவளி.. ரயில்களில் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கு நல்ல செய்தி.. சென்னை மக்களே பாருங்க
சென்னை: சென்னையில் தான் கோடிக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள். தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 40 நாட்களே உள்ளன. தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் சென்னையில் வசிக்கிறார்கள்.இவர்கள் தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல ஆயத்தமாகி வருகிறார்கள். ரயில்களில் சில நிமிடங்களிலேயே டிக்கெட் முடிந்துவிட்டது.இந்நிலையில் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கு நல்ல செய்தியை தெற்கு ரயில்வே கூறியுள்ளது.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 40 நாட்களே உள்ள நிலையில், பலரும் ரயில்கள், பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆர்வமாக உள்ளார்கள்.ஆனால் ரயில்களில் டிக்கெட் இல்லை.. காத்திருப்பு பட்டியலும் முடிந்துவிடும். சிறப்பு ரயில்கள் எப்போது அறிவிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிமாக உள்ளது.

சிறப்பு ரயில்கள்
பொதுவாக தீபாவளி பண்டிகையின் போது, தாம்பரத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கும், டெல்டா மாவட்டங்களுக்கும், கன்னியாகுமரி, நாகர்கோவில், கொல்லம், பாலக்காடு, மதுரை, திருச்சி என பல்வேறு ஊர்களுக்கும் ரயில்கள் இயக்கப்படும். அதேபோல் தீபாவளியின் போது முன்பதிவு இல்லாத ரயில்களையும் தெற்கு ரயில்வே இயக்குவது வழக்கம்.அது கடைசி நாளில் தான் அறிவிக்கப்படும். அதேநேரம் முன்பதிவு செய்த பயணிகளின் வசதிக்காக சில வசதிகளை ரயில்வே இந்த முறை செய்யப்போகிறது.
ரயில்வே திட்டம்
அதன்படி தீபாவளி பண்டிகையை ஒட்டி, விரைவு ரயில்களில் ஓரிரு கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்க நடவடிக்கை எடுத்து வருகிறது தெற்கு ரயில்வே. , பயணிகள் நெரிசலை குறைக்க, சிறப்பு ரயில்களை இயக்க பரிந்துரை செய்யும் தெற்கு ரயில்வே அதிகாரிகள், தீபாவளி பண்டிகையை ஒட்டி, விரைவு ரயில்களில் ஓரிரு கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்க திட்டமிட்டுள்ளார்கள்.
கூடுதல் பெட்டிகள்
இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறும் போது, இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகைகால ரயில்களில் டிக்கெட் முன்பதிவு சில நிமிடங்களில் முடிந்துவிட்டதால், சிறப்பு ரயில்கள் குறித்து எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. எனவே, பயணிகள் தேவை மிக்க வழித்தடங்களில், தீபாவளி சிறப்பு ரயில்கள் இயக்க உள்ளோம். அதேபோல் விரைவு ரயில்களில் அதிகபட்சமாக 24 பெட்டிகள் வரை இணைத்து இயக்க முடியும்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications