பெரியாரை இழிவுபடுத்துவதா? வெறிநாய், பைத்தியத்துக்கு பதில் சொல்வது இல்லை- சீமான் மீது வீரமணி தாக்கு!
சென்னை: தந்தை பெரியாரை இழிவுபடுத்தி பேசி வரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெயரைக் குறிப்பிடாமல், பைத்தியக்காரர்களுக்கு நாங்கள் எப்போதும் பதில் சொல்வதில்லை.
மனிதர்களுக்கும், பகுத்தறிவாளர்களுக்கு மட்டுமே பதில் சொல்லி பழக்கப்பட்ட நாங்கள், இத்தகைய வெறிபிடித்தவர்களுக்குப் பதில் சொல்லி, கீழிறங்க விரும்பவில்லை என்று கூறியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.
சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கி.வீரமணி கூறியதாவது: 1962 ஆம் ஆண்டு அண்ணா அவர்கள் ராஜ்யசபாவில்- ''திராவிடப் பாரம்பரியத்திலிருந்து வந்திருக்கின்ற நாங்கள்'' என்று தொடங்கி, ''மாநில உரிமைகளையும், திராவிட சமுதாயத்தினுடைய கலை, பண்பாடு, நாகரிகம் ஆகியவை காப்பாற்றப்பட வேண்டும்; போற்றப்படவேண்டும்; பாதுகாக்கப்படவேண்டும்'' என்று சொன்னார்களே, அதே நிலை இன்றைக்கும் தொடர்கிறது!

இன்னும் கேட்டால், முன்பு இருந்ததைவிட, அதிகமான அளவிற்கு ஜனநாயகத்திற்கும், சமூகநீதி, மதச்சார்பின்மைக்கும் அறைகூவல்களும், அரசமைப்புச் சட்டத்தை முழுக்க முழுக்க ஒன்றுமில்லாமல் ஆக்கப்படக்கூடிய சூழலும் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இந்தக் காலகட்டத்தில் அறிஞர் அண்ணாவின் முன்னோட்டம் என்பது இன்றைக்கும் எவ்வளவு சரியானது என்பதைக் காட்டுகிறது.
தந்தை பெரியார் அவர்களால் ஆளாக்கப்பட்டு, மிகப்பெரிய அளவிற்கு அடித்தளத்தை 'திராவிட மாடல்' ஆட்சிக்கு அமைத்தவர் பேரறிஞர் அண்ணா. அதற்குப் பிறகு, இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று அது தொடர்ச்சியாக வருகிறது என்று சொன்னால், ஆட்சிகள் காட்சிகளுக்கு அல்ல; மீட்சிகளுக்கு, இனத்தின் மீட்சிகளுக்கு என்பதை விளக்க ஒவ்வொரு நாளும் நிகழ்வுகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
ஆகவே, அப்படிப்பட்ட ஓர் அருமையான சூழலை, இன்றைக்கு மீண்டும் உருவாக்கி, யாரிடமிருந்து நம்மினத்தைப் பாதுகாக்கப்பட வேண்டுமோ, அந்த ஆரிய மாயையை மக்களிடம் எடுத்துச் சொல்லி, அவர்களுக்குப் புரிய வைக்கவேண்டும். 'ஆரிய மாயை' என்பது ''கூலி"களை ஏவுவார்கள்; புதிய புதிய வித்தைகளை காட்டுவார்கள். எனவே, அவற்றையெல்லாம் எதிர்கொண்டு முறியடிக்க வேண்டும்'' என்று அண்ணா அவர்கள், தந்தை பெரியாரிடத்தில் கற்ற பாசறை பாடத்தைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.
''அண்ணா மறைந்தார்; அண்ணா வாழ்கிறார்!'' என்பதுதான் தந்தை பெரியார் அன்றைக்கு எழுதிய ஒரு செய்தி! அதற்கு என்ன பொருள் என்றால், ''அண்ணா என்ற தனி மனிதருக்கு வேண்டுமானால் மறைவு இருக்கலாம். நான் உருவாக்கிய கொள்கைகள், அதனை அண்ணா செயல்படுத்திய முறைகள் எல்லாம் என்றைக்கும் தொடரும்'' என்பதுதான். அதுதான் இன்றைக்கும் தேவைப்படுகிறது. எனவே, அண்ணா சிலை அல்ல, சீலம்! படம் அல்ல, பாடம்!
இன்று தந்தை பெரியாரை சிலர் விமர்சிக்கின்றனர். பைத்தியக்காரர்களுக்கு நாங்கள் எப்போதும் பதில் சொல்வதில்லை. மனிதர்களுக்கும், பகுத்தறிவாளர்களுக்கு மட்டுமே பதில் சொல்லி பழக்கப்பட்ட நாங்கள், இத்தகைய வெறிபிடித்தவர்களுக்குப் பதில் சொல்லி, கீழிறங்க விரும்பவில்லை. இவ்வாறு கி.வீரமணி தெரிவித்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications