NDA கூட்டணிக்கு தேமுதிக வருதா? தேதியைச் சொன்ன நயினார் நாகேந்திரன்.. என்ன மேட்டர்?
சென்னை: "என்.டி.ஏ கூட்டணியில் தேமுதிக இணையுமா? என்ற கேள்விக்கு "1 ஆம் தேதி பார்க்கலாம்" என நயினார் நாகேந்திரன் பதில் அளித்துள்ளார். மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கும் NDA பொதுக்கூட்டம் மார்ச் 1 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் நயினார் நாகேந்திரனின் இந்த பதில் அரசியல் களத்தில் பல்வேறு யூகங்களைக் கிளப்பிவிட்டுள்ளது.
தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற தேமுதிக, சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி முடிவை இன்னும் அறிவிக்கவில்லை. திமுகவுடன் தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிகிறது. இதனால் திமுக கூட்டணிக்கு செல்லுமா? இல்லை மீண்டும் அதிமுக கூட்டணியில் இடம்பெறுமா? என எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

தேமுதிகவை பொறுத்தவரை, இரட்டை இலக்கத்தில் சட்டசபை தொகுதிகள் மற்றும் ராஜ்யசபா இடம் உள்ளிட்டவற்றை பிரேமலதா விஜயகாந்த் எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது. மேலும், என்டிஏ கூட்டணியில் மத்திய அமைச்சர் பதவியையும் தேமுதிக கேட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கும் என அக்கட்சி தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
இந்நிலையில், மகா சிவராத்திரி விழா கோவை ஈஷா மையத்தில் நேற்று இரவு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனால் தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிக இடம் பெறலாம் என்ற யூகங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "திமுக கூட்டணி தான் வலுவாக இல்லை. எங்கள் அண்ணன் எடப்பாடி பழனிசாமி மற்றும் பல கூட்டணி கட்சிகளால் பாஜக பலமாக உள்ளது. இபிஎஸ் தலைமையில் நல்லாட்சி மலரும்" என்று உறுதியாகக் கூறியுள்ளார்.
என்.டி.ஏ கூட்டணியில் தேமுதிக இணையுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த நயினார் நாகேந்திரன், "மார்ச் 1 ஆம் தேதி பார்க்கலாம்" என்று பதில் அளித்துள்ளார். நயினார் நாகேந்திரனின் இந்த பதில் அரசியல் களத்தில் பல்வேறு யூகங்களைக் கிளப்பிவிட்டுள்ளது.
மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கும் என்.எடி.ஏ பொதுக்கூட்டம் வரும் மார்ச் 1ஆம் தேதி நடைபெறவுள்ளதால், அப்போது கூட்டணி தொடர்பான அறிவிப்பு வரலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பிரதமர் மோடி மார்ச் 1 ஆம் தேதி தமிழகம் வர உள்ள நிலையில், அப்போது மதுரையில் நடக்கும் கூட்டத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவையும் மேடை ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
-
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications