DMDK: விருப்பமனு வாங்க ஆள் இல்லாமல் தேமுதிக அலுவலகம் வெறிச்! பிரேமலதா விஜயகாந்த் எடுத்த அதிரடி முடிவு
சென்னை: சட்டசபை தேர்தலுக்காக விருப்ப மனுக்களை வழங்குவதற்கான காலஅவகாசம் மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பதாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். அதன்படி வரும் 15 ஆம் தேதி வரை விருப்பமனுக்களை பூர்த்தி செய்து கொடுக்கலாம்.

தமிழக சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. இம்முறை தமிழகத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி (தவெக) மற்றும் நாம் தமிழர் கட்சி என ஒரு நான்கு முனைப் போட்டி களம்காண உள்ளது.
தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களிடமிருந்து விருப்ப மனுக்களைப் பெறுதல், நேர்காணல் நடத்துதல் உள்ளிட்ட பணிகளில் அனைத்துக் கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, தேமுதிக கடந்த 6ஆம் தேதி , மாநிலம் தழுவிய 234 சட்டசபைத் தொகுதிகளுக்கு விருப்ப மனு விநியோகத்தைத் தொடங்கியது.
பொதுத் தொகுதிகளுக்கு ரூ.15,000, தனித் தொகுதிகளுக்கு ரூ.10,000 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கட்சியினர் இந்த மனுக்களை ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இவ்விருப்ப மனுக்கள் குறித்து ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, போட்டியிட விரும்பும் கட்சியினர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் பிப்ரவரி 12 ஆம் தேதிக்குள் தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் கடந்த திங்கள்கிழமை தேமுதிக தலைமை அலுவலகத்தில் விருப்பமனு வாங்க ஆள் இல்லாமல் வெறிச்சோடி கிடந்தது. இது பெரும் விவாதத்திற்குள்ளானது. இது தொடர்பாக வீடியோ, புகைப்படங்கள் வெளியான நிலையில் அன்றைய தினம் அஷ்டமி என்பதால் யாரும் விருப்பமனு பெற வரவில்லை என கட்சித் தலைமை சப்பைக் கட்டு கட்டியது.
இந்த நிலையில் அடுத்த நாள் நவமி திதி என்பதால் அன்றைய தினமும் கட்சி அலுவலகத்தில் காற்று வாங்கியது. இந்த நிலையில் இன்றைய தினம் கடைசி நாள் என்பதால் பிரேமலதா விஜயகாந்த் விருப்பமனுவை கொடுத்திருந்தார்.
இதைத் தொடர்ந்து விருப்பமனுவை வழங்குவதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடையவிருந்த நிலையில் மேலும் 3 நாட்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டார் பிரேமலதா. இதனால் வரும் 15 ஆம் தேதி மாலை 4 மணிக்குள்ளாக பூர்த்தி செய்யப்பட்ட விருப்பமனுக்களை கொடுக்குமாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
நல்ல நேரத்திற்காக அரை மணி நேரம் காத்திருந்த விஜய்.. திருச்சி கிழக்கில் வேட்பு மனு தாக்கல் செய்தார் -
திருமாவளவனுக்கு தெரியும்.. சீட் கொடுக்காதது பற்றி உடைத்து பேசிய ஆளூர் ஷாநவாஸ்! -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
176 தொகுதிகளில் உதயசூரியன்! சீர்காழி தொகுதியிலும் தனிச் சின்னம் வேண்டாம்.. வைகோ எடுத்த அதிரடி முடிவு -
லீமா ரோஸ் எனும் விஷ விதை.. பாஜக கண்ணை காட்டுனா போதும்! அதிமுக அவர் கையில்.. குண்டை போட்ட அதிமுக மாஜி -
பொருளாக தராமல் ரூ.8,000 கூப்பன் கொடுப்பது ஏன்? மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் சொன்ன விளக்கம்! -
ஓஎஸ் மணியன் ஏமாற்றிவிட்டார்.. சீட் தராததால் அதிமுக சீர்காழி முன்னாள் எம்.எல்.ஏ கட்சி பதவி ராஜினாமா! -
பெண்களின் திருமண வயது 21 ஆகும்.. மகளிர் அனைவருக்கு மாதம் ரூ.2000! ஆஃபர்களை அள்ளி வீசிய அன்புமணி! -
‘கேமரா'வில் போட்டி.. வீரப்பன் மனைவிக்கு வாய்ப்பு..100 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த தவாக -
அதிமுகவுக்கு ஆப்பு வைக்கப் போறாரு விஜய்! இப்பவே உஷாராவது நல்லது! அடித்துச் சொல்லும் ஜெ.வின் நிழல்! -
மார்க்சிஸ்ட் அரசியல் வரலாற்றில் முதன்முறை! மதுரையில் போட்டியிடாத சிகப்பு சட்டை தோழர்கள்! என்னாச்சு? -
தன்னையும், மக்களையும் நம்பாதவர்தான்.. 2 தொகுதியில் போட்டியிடுவார்! அட்டாக் மோடில் சீமான்












Click it and Unblock the Notifications