விஜயகாந்த் வீட்டுக்கு நள்ளிரவில் வந்து தொல்லை கொடுக்கும் நபர்கள்.. பாதுகாப்பு கேட்டு போலீசில் மனு!
சென்னை: மறைந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் வீட்டுக்கு பாதுகாப்பு கேட்டு போலீசில் தேமுதிக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டுக்கு இரவு நேரத்தில் வந்து சிலர் தொந்தரவு செய்வதாக அப்பகுதி தேமுதிக சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தேமுதிக தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகம் மற்றும் தீவுத் திடலில் விஜயகாந்த் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த மிகப்பெரிய அளவில் மக்கள் திரண்டனர்.

விஜயகாந்த் மறைவுக்கு கட்சியினரை காட்டிலும் அவருடைய அபிமானிகள், மற்ற கட்சியினர்தான் அதிகம் வந்தனர். அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பலரும் நெரிசலுக்கு மத்தியில் அஞ்சலி செலுத்திவிட்டுச் சென்றனர். விஜயகாந்த்தின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தேமுதிக தலைமை அலுவலகத்தில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த வர முடியாதவர்கள் கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஏராளமான பிரபலங்களும், பொதுமக்களும் விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்த்தின் வீட்டுக்கு பாதுகாப்பு கோரி காவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவில் வீட்டு வாசலில் வந்து சிலர் கூச்சலிடுவதாகவும், தொந்தரவு செய்வதாகவும் தேமுதிக விருகம்பாக்கம் பகுதி செயலாளர் லட்சுமணன் புகார் அளித்துள்ளார்.
மனநலம் பாதிக்கப்பட்ட நபர்கள் தினமும் வந்து 'விஜயகாந்த் எங்கே?' என்று கேட்டு பிரச்சனை செய்து வருவதாகவும், எனவே வீட்டில் இருப்பவர்கள் தொந்தரவுக்கு உள்ளாவதால் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என மனு அளிக்கப்பட்டுள்ளது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications