பழைய பாசம் போல.. வக்பு மசோதா மீதான வாக்கெடுப்பில் திமுக கூட்டணி கட்சி எம்பி மட்டும் 'ஆப்சென்ட்'?
சென்னை: நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் சர்ச்சைக்குரிய வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா மீதான வாக்கெடுப்பில் தமிழ்நாட்டின் 39 எம்.பிக்களும் எதிர்த்து வாக்களித்ததாகவே கூறப்பட்டு வருகிறது. ஆனால் டெல்லி தகவல்களோ, திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கூட்டணி கட்சியின் எம்பி ஒருவர், வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டுவிட்டு வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை என்கின்றன.
நாடாளுமன்றத்தில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை திமுக தொடக்கம் முதலே மிக கடுமையாக எதிர்த்து வருகிறது. நாடாளுமன்ற கூட்டுக் குழுவிலும் திமுக ஆணித்தரமான எதிர்ப்பை பதிவு செய்தது.

லோக்சபாவில் வக்பு வாரிய மசோதா தாக்கல் செய்த போதும் திமுக எம்பிக்கள் மிக கடுமையான குரலில் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். லோக்சபாவில் வக்பு மசோதா நிறைவேறிய பின்னர் தமிழ்நாடு சட்டசபைக்கு கறுப்பு பேட்ஜ் அணிந்து வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள், மத்திய அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். தமிழக சட்டசபை வளாகத்திலும் திமுக எம்.எல்.ஏக்கள் போராட்டம் நடத்தினர்.
பின்னர் ராஜ்யசபாவிலும் திமுக கடுமையாக எதிர்த்தது. இந்த எதிர்ப்புக்கு இடையே ராஜ்யசபாவில் வக்பு வாரிய மசோதா நிறைவேறி உள்ளது. வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து திமுக, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடருவதாகவும் அறிவித்துள்ளது.
இந்த நிலையில்தான், திமுக கூட்டணியில் உள்ள ஒரு கட்சியின் எம்பி மட்டும், வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா மீதான வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை என்கின்றன டெல்லி தகவல்கள். வக்பு வாரிய மசோதா தாக்கல் செய்யப்பட்ட நாளில் வருகைப் பதிவேட்டில் மட்டும் கையெழுத்திட்ட அந்த எம்பி, வாக்கெடுப்பில் ஓட்டுப் போடவில்லையாம்.
அதேபோல, வக்பு சட்ட திருத்த மசோதா நிறைவேறியதற்கு எதிராக, அனைத்து திமுக கூட்டணி எம்பிக்களும் கறுப்பு உடை அணிந்து நாடாளுமன்றம் சென்றனர்; ஆனால் அந்த கூட்டணி எம்பி மட்டும் கறுப்பு உடை அணிய மறுத்தாராம்.
திமுக கூட்டணியில் தற்போது உள்ள அந்த கட்சி, ஏற்கனவே பாஜக கூட்டணியில் இருந்ததாம். இதனால் பழைய பாசத்தில் அல்லது மீண்டும் அதே கூட்டணிக்கு திரும்பும் முடிவில்தான் இந்த நிலைப்பாட்டை அந்த கூட்டணி கட்சி எடுத்திருக்கலாம் என்கின்றன டெல்லி தகவல்கள்.
-
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
Delimitation: கழன்றுக்கொண்ட திமுக.. காணாமல் போகும் இந்தியா கூட்டணி? பாஜக போடும் பலே பிளான்! -
சொந்த கட்சிக்கு எதிராக சீறிய சென்னை மாநகராட்சி கவுனசிலர் மணிகண்டன்.. பின்னணியில் தவெக? -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
"தூண்" ஸ்டாலின் இல்லாத இந்தியா கூட்டணி பலமா? அக்ரசிவ் அரசியலுக்கு மாறும் திமுக.. முழுசா மாறிய காங். -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
“ஆதவ் அர்ஜுனாவுக்கு தொடர்பா? தைரியம் இருந்தா சட்டரீதியாக திமுக நிரூபிக்கட்டும்”.. தவெக பதிலடி! -
ரூ.258 கோடி போதைப்பொருள் வழக்கு பரபரப்பு: விஜய் அரசுக்கு எதிராக திமுக அதிரடி குற்றச்சாட்டு -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
திமுக தோல்வி.. "எல்லார் மீதும் தவறு இருந்தால் யார் மீது நடவடிக்கை எடுப்பது?" வைரமுத்து சொன்ன காரணம்!











Click it and Unblock the Notifications