திடுதிப்பென ‘மயான அமைதி’யில் தமிழ்நாடு பாஜக- 'மூச்’விட மறுக்கும் அதிமுக- மீண்டும் முதலில் இருந்தா?
சென்னை: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிமுக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனாலும் அதிமுக, பாஜக தலைவர்கள் இருதரப்பும் கனத்த மவுனமாக இருப்பதால் 'கூட்டணி முறிவு' என்பது அரசியல் நாடகமா? என்கிற கேள்வியை அரசியல் விமர்சகர்கள் முன்வைக்கின்றனர்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் கடுமையாக விமர்சனங்களால் அதிமுக தலைவர்கள் கொந்தளித்தனர். முதலில் ஜெயலலிதா, பின்னர் பேரறிஞர் அண்ணாவை விமர்சித்தார் அண்ணாமலை. இதற்கு அதிமுக தரப்பில் பதிலடி தரப்பட்டது.

அதிமுக விலகல் அறிவிப்பு:இருப்பினும் அண்ணாமலைக்கும் அதிமுகவுக்கும் இடையேயான மோதல் தொடர்ந்தது. இந்நிலையில் செப்டம்பர் 18-ந் தேதி, அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என முதல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன் பிறகு சமாதானமாக சில கருத்துகள் முன்வைக்கப்பட்டன. அதன் பிறகும் அண்ணாமலை தரப்பு உக்கிரமாக இருந்தது. இதனால் மீண்டும் அதிமுக- பாஜக கூட்டணி இல்லை என அறிவிக்கப்பட்டது. சென்னையில் நேற்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கூட்டப்பட்டு அதிகாரப்பூர்வமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக அறிவித்தது.
கொண்டாட்டமும் மவுனமும்: இதனை அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். அதேபோல மதுரை உள்ளிட்ட இடங்களில் பாஜகவினரும் பட்டாசு வெடித்து கொண்டாடினர். அதேநேரத்தில் இருதரப்பு தலைவர்களும் கூட்டணி முறிந்த பின்னர் கூட காரசாரமான கருத்துகளை தெரிவிக்காமல் அமைதி காத்து வருகின்றனர்.
பாஜக பேச மறுப்பு: தமிழ்நாட்டில் ஒரு பிரதான கட்சி, கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்த நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூட எந்த கருத்தும் தெரிவிக்க முடியாது; தேசிய தலைமை முடிவெடுக்கும் என்றார்.தமிழ்நாடு பாஜகவின் அமர்பிரசாத் ரெட்டி, அதிமுகவுக்கு எதிராக பதிவிட்டிருந்த எக்ஸ் தள பதிவை கூட நீக்கிவிட்டார். டெல்லி பாஜக தலைவர்களும் கூட பட்டும் படாமலுமே பதில் சொல்லி வருகின்றனர்.
பெரும் அமைதி: அதேபோல சென்னை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்குப் பின்னர் அதிமுக தரப்பிலும் பாஜகவை கடுமையாக விமர்சித்து எந்த தலைவரும் பேசவில்லை. இது தொடர்பாக பேசவும் மறுத்து வருகின்றனர்.
தோல்வி அச்சத்தால் நாடகமா?: இதனால் அதிமுக -பாஜக கூட்டணி முறிவு என்பது அப்பட்டமான ஒரு நாடகமாக இருக்கலாமோ? என்கிற கேள்வியை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி உள்ளிட்டோர் எழுப்பி வருகின்றனர். தமிழ்நாட்டில் பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் நிச்சயம் அதிமுகவுக்கு தோல்விதான் என்பதை உணர்ந்து கொண்டு இப்போது கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார்களோ என்கிற கேள்வியையும் சில தலைவர்கள் எழுப்பி உள்ளனர்.
திமுக கூட்டணியை சிதைக்கும் முயற்சி?: இன்னொரு பக்கம், பாஜகவுடனான கூட்டணியை முறித்து கொண்டதால் திமுக தலைமையிலான வலிமையான கூட்டணியை உடைத்து அதன் வெற்றி வாய்ப்பை சிதைக்கக் கூடிய வாய்ப்பு அதிமுகவுக்கு கிடைத்திருக்கிறது. இதுவே பாஜகவின் மறைமுகமான திட்டமாகவும் இருக்கலாம் என்கிற சந்தேகத்தையும் சிலர் எழுப்பி வருகின்றனர்.
மீண்டும் கூட்டணியா?: தற்போதைய சூழ்நிலையில் தமிழ்நாடு பாஜக மற்றும் அதிமுக தலைவர்கள் பெரும் அமைதியில் இருப்பது ஏன் என்பதுதான் முக்கியமான கேள்வியாக உருவெடுத்திருக்கிறது. ஒருவேளை டெல்லி மேலிடம் மீண்டும் தலையிட்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுகவை இணைத்துக் கொள்ளக் கூடிய சாத்தியங்கள் உருவாகலாம்; அதையும் மறுப்பதற்கில்லை என்கின்றனர் சீனியர் பத்திரிகையாளர்கள்.. ஆக மறுபடியும் முதலில் இருந்தா?
-
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
பெரிய புள்ளியாச்சே அவரு! துரோகி பட்டம்.. எடப்பாடியால் வேதனையில் வேலுமணி! அண்ணாமலையுடன் ஐக்கியம்? -
ஆபரேஷன் இரட்டை இலை.. மாவட்ட வாரியாக அதிமுக தொண்டர்களை இழுக்கும் தவெக.. பனையூர் வியூகம்! -
இழுத்து பிடித்த எடப்பாடி பழனிசாமி.. விட்டு விலகும் நிர்வாகிகள்! மதுராந்தகத்தில் சம்பவம் செய்யும் தவெக! -
“எந்த ரீல்ஸ் மூலம் தவெக வென்றதோ அதன் மூலமே நாமும் வெற்றி பெறுவோம்”.. அதிமுகவினருக்கு எடப்பாடி ஆர்டர் -
மிதுன் பழனிசாமியை அரசியலுக்கு அழைத்து வர எடப்பாடி பழனிசாமி டிராமா ஆடுகிறார்.. சிவி சண்முகம்! -
கருகுது இரட்டை இலை.. விஜய் வைத்த டார்கெட்! வலைவிரித்துக் காத்திருக்கும் தவெக! சிக்கும் திமிங்கலம்? -
பனையூர் பக்கம் திரும்பும் ரராக்கள்.. காலியாகும் அதிமுக கூடாரம்? எடப்பாடி பழனிசாமி முக்கிய மீட்டிங்! -
தீர்ந்து போன சக்தியிடம் திருடிய காஞ்சு போன சக்தி.. விமர்சித்த ஸ்டாலின்.. தவெக கொடுத்த பதிலடி -
கருகுது இரட்டை இலை.. திமுகவுக்கு தாவும் சி.விஜயபாஸ்கர்? பெரிய பொறுப்புடன் வரவேற்கும் மு.க.ஸ்டாலின்! -
பனையூரில் மெகா சம்பவம் ரெடி.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் தவெகவில் இணையும் மாஜி அமைச்சர்கள்! -
திமுகவின் கோட்டையை சிதறடித்த தவெக.. சென்னை அதிமுக நிர்வாகிகளை தூக்கும் அறிவாலயம்.. பின்னணி!












Click it and Unblock the Notifications