மறுபடியும் அவங்க கிட்ட போக முடியாது.. முக்கியமான இடத்தில் லாக்கான தேமுதிக.. பின்னணியில் திமுக புள்ளி
சென்னை: அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறுவதாக அறிவித்து இருப்பது பல வகைகளில் அந்த கட்சிக்கே எதிராக திரும்பும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. முக்கியமாக தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன் தேமுதிக இப்படி செய்து இருப்பது அந்த கட்சியின் அஸ்திரவாரத்தையே ஆட்டம் காண வைக்கும் முடிவாக பார்க்கப்படுகிறது!
2021 சட்டசபை தேர்தல் வருவதை முன்னிட்டு அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக தேமுதிக அறிவித்துள்ளது. அதிமுக கூட்டணியில் கேட்ட இடங்கள் கிடைக்கவில்லை என்பதால் தேமுதிக இந்த முடிவை எடுத்துள்ளது.
தேமுதிக முன்பே இந்த முடிவை எடுத்து இருந்தால் கூட மற்ற கூட்டணியில் சேர்வதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டு இருக்கும். ஆனால் இப்போதோ அதற்கான வாய்ப்பும் தேமுதிகவுக்கு குறைந்துள்ளது. இந்த சட்டசபை தேமுதிக இனி என்ன செய்யும் என்பதே அந்த கட்சியின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்.

முடியாது
தேமுதிக கண்டிப்பாக மீண்டும் அதிமுகவிடம் பேச முடியாது. கூட்டணியை விட்டு வெளியே வந்த அடுத்த நிமிடமே அதிமுக குறித்தும் முதல்வர் பழனிசாமி குறித்தும் தேமுதிக மோசமாக பேச தொடங்கிவிட்டது. சுதீஷ், விஜய் பிரபாகரன் என்று தேமுதிக தலைகள் நேரடியாக அதிமுகவை சீண்ட தொடங்கி உள்ளனர். அதிலும் முதல்வர் பழனிசாமியை கடுமையாக விமர்சிக்க தொடங்கி உள்ளனர்.

விமர்சனம்
இதனால் மீண்டும் அதிமுகவுடன் சமாதானம் செய்து, கூட்டணி என்ற சம்பவம் எல்லாம் நடக்கவே வாய்ப்பு இல்லை. அதிமுகவின் கதவு தேமுதிகவுக்கு "க்ளோஸ்" ஆகிவிட்டது என்றுதான் கூற வேண்டும். இது போக இன்னொரு பக்கம் திமுக பக்கமும் தேமுதிக செல்ல முடியாது. முதலில் தேமுதிகவுக்கு சீட் ஒதுக்கும் எண்ணம் எல்லாம் திமுகவிற்கு இல்லை.

கூட்டணி
கூட்டணியில் இருக்கும் கட்சிக்கே திமுக சீட் ஒதுக்க யோசிக்கிறது. அப்படி இருக்கும் போது தேமுதிகவை சேர்த்துக்கொள்ளவெல்லாம் வாய்ப்பே இல்லை. அதோடு திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகனுடன் தேமுதிக நல்ல உறவை பேணவில்லை. லோக்சபா தேர்தல் நேரத்திலேயே கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து துரைமுருகன் ஒன்று சொல்ல.. பிரேமலதா வேறு ஒன்று சொல்ல அது பெரிய சண்டையில் முடிந்தது .

சண்டை
அப்போதில் இருந்தே திமுக - தேமுதிகவுக்கு ஆகாமல் போய்விட்டது. துரைமுருகனுடன் உள்ள மோதலால் முக்கியமான இடத்தில் தேமுதிக லாக் ஆகியுள்ளது. அதிமுக க்ளோஸ்.. திமுக நோ.. என்று இரண்டு முக்கிய கட்சியின் கூட்டணியிலும் தேமுதிக இந்த தேர்தலில் இணைய முடியாது. இனி மீதம் இருப்பது மக்கள் நீதி மய்யம் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மட்டுமே.

வாய்ப்பு
இது இரண்டிலும் தேமுதிக இணைய வாய்ப்புகள் உள்ளன. தனியாகவும் நிற்கலாம். ஆனால் இந்த மூன்று முடிவில் எந்த ஒரு முடிவை எடுத்தாலும் அது தேமுதிகவின் எதிர்காலத்திற்கு உதவ போவது இல்லை.. தேர்தல் வெற்றியிலும் பெரிதாக உதவாது. எதிர்காலம், வாக்கு வங்கி ரீதியாக தேமுதிக தற்போது எடுத்து இருக்கும் முடிவு அந்த கட்சிக்கே எதிராக செல்ல போகிறது என்று அரசியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர்!












Click it and Unblock the Notifications