Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

20 பாயிண்ட்! 1020 நாட்கள்! திமுக அனுப்பிய பயங்கர லிஸ்ட்.. ஆளுநர் ரவி பற்றிய அந்த "பைல்".. என்னாச்சு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் இணைந்து ஆளுநர் ஆர். என் ரவியை நீக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவரிடம் மனு அளித்து உள்ளது. இந்த மனுவில் முக்கியமான கோப்பு ஒன்றும் இணைக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில ஆளுநராக ஆர். என் ரவி பதவி ஏற்றதில் இருந்தே சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். முக்கியமாக இந்து மதம் குறித்தும், சனாதனம் குறித்தும் ஆளுநர் ரவி தொடர்ந்து பேசி வருவது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.

நியமன பதவியில் இருந்து கொண்டு, ஆளுநர் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பேசுவதாக திமுக குற்றச்சாட்டுகளை வைத்து உள்ளது. இந்த மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில்தான் விவகாரம் தற்போது டெல்லிக்கு சென்றுள்ளது.

நீக்கம்

நீக்கம்


அதன்படி திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் இணைந்து ஆளுநர் ஆர். என் ரவியை நீக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவரிடம் மனு அளித்து உள்ளது. இந்த மனுவில் முக்கியமான கோப்பு ஒன்றும் இணைக்கப்பட்டு உள்ளது. ஆளுநரை திரும்பப்பெறும் குறிப்பாணையில் கையொப்பமிட திமுக கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுத்து 40 எம்பிக்களின் கையெழுத்தை திமுக பெற்றுள்ளது. இதில் கிட்டத்தட்ட லோக்சபா, ராஜ்ய சபா எம்பிக்கள், கட்சி தலைவர்கள் சேர்த்து 40க்கும் அதிகமானோர் கையெழுத்து போட்டுள்ளனர்.

ஒருமித்த குரல்

ஒருமித்த குரல்

திமுக, காங்கிரஸ், மதிமுக, மமக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், தவாக, கொமதேக, திக கட்சிகள் எல்லாம் இதில் ஒருமித்த குரல் கொடுத்து உள்ளன. இந்த கட்சிகளில் இருக்கும் எம்பிக்கள் மட்டும் தற்போது ஆளுநருக்கு எதிரான இந்த மனுவில் கையெழுத்து போட்டுள்ளனர். ஆனால் வெறுமனே இவர்கள் கடிதம் மட்டும் அனுப்பவில்லை. அதோடு சேர்த்து முக்கியமான கோப்பு ஒன்றையும் அனுப்பி உள்ளனர். அந்த கோப்பில் ஆளுநர் தொடர்பான முக்கியமான லிஸ்ட் ஒன்று இடம்பெற்று உள்ளது.

லிஸ்ட்

லிஸ்ட்

அந்த லிஸ்டில், ஆளுநர் கிடப்பில் போட்டு இருக்கும் 20 மசோதாக்கள் பட்டியல்கள் இடம்பெற்று உள்ளன. மீன்வள பல்கலைக்கழகம் தொடர்பான மசோதா தொடங்கி விலங்குகள் பல்கலைக்கழகம், சட்டத்துறை பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு பல்கலைக்கழக மசோதாக்கள் உள்ளன. இதில் 10 மசோதாக்கள் பல்கலைக்கழக நியமன மசோதாக்கள்தான். அதாவது துணை வேந்தரை ஆளுநர் அல்லாமல் முதல்வர் நியமிக்கும் மசோதாக்கள். இந்த 10 மசோதாக்களும் கிடப்பில் உள்ளன. அதிலும் மீன்வள பல்கலைக்கழகம் தொடர்பான மசோதா 1020 நாட்களாக கிடப்பில் உள்ளது.

ஆளுநர்

ஆளுநர்

அதாவது முந்தைய ஆளுநரிடம் இருந்தே அந்த மசோதா கிடப்பில் உள்ளது. இது போக ஆன்லைன் சூதாட்ட மசோதாவும் கிடப்பில் உள்ளது. மீண்டும் மீண்டும் திருத்தங்கள் செய்து அனுப்பப்பட்ட சட்ட பல்கலைக்கழக மசோதாவும் இதேபோல்தான் கிடப்பில் இருக்கின்றது. இது அனைத்தையும் மொத்தமாக லிஸ்ட் போட்டு திமுக கூட்டணி தங்கள் மனுவில் டெல்லிக்கு அனுப்பி உள்ளது. இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட தேதி அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. பொதுவாக மசோதாவை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப கால அவகாசம் இல்லை. ஆனால் முடிந்தளவு வேகமாக அனுப்ப வேண்டும் என்று சட்டம் சொல்கிறது இதை அவர் மீறிவிட்டதை சுட்டிக்காட்டும் விதமாக இந்த மனுவை தமிழ்நாடு திமுக கூட்டணி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+