Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுகவும் மக்கள் நீதி மய்யமும் தற்போது ஒன்று தான்..கமலை வம்புக்கு இழுக்கும் சீரியல் நடிகை ஜெயலட்சுமி

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுகவும் மக்கள் நீதி மய்யமும் தற்போது ஒன்று தான். திமுக அதிக பணம் கொடுத்து தொடர்ந்து தங்களது நிறுவனத்தில் கமலஹாசனை நடிக்க வைத்துக் கொண்டு இருக்கிறது என்று கூறியுள்ளார் டிவி சீரியல் நடிகையும் பாஜக பிரமுகருமான ஜெயலட்சுமி.

திரைப்பட பாடலாசிரியரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அனைவராலும் அறியப்பட்ட சினேகன், சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி மீது மோசடி புகார் ஒன்றினை அளித்தார். காவல் ஆணையரகத்தில் புகார் அளித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சினேகன், "கடந்த 2015 ஆம் ஆண்டு சினேகம் ஃபவுண்டேஷன் என்ற அறக்கட்டளையை தொடங்கி நடத்தி வருகிறேன். அதன்மூலம் பலருக்கும் உதவிகள் செய்து வருகிறேன். அண்மையில் எனது நண்பர்கள் சிலர் அதிர்ச்சி தரும் விஷயத்தைச் சொன்னார்கள்.

நடிகை ஜெயலட்சுமி எனது அறக்கட்டளையின் பெயரில் சமூக வலைதளப் பக்கம், இணையதளப் பக்கம் தொடங்கி அதன் மூலம் நன்கொடை வசூலிப்பதாகக் கூறினார்கள். நான் அதிர்ச்சியடைந்தேன்.

சினேகன் புகார்

சினேகன் புகார்

அடுத்த சில நாட்களிலேயே வருமான வரித் துறையினர் என்னிடம் விசாரணை செய்தனர். எனது அறக்கட்டளை வரவு செலவுகளைக் கேட்டனர். அப்போது தான் ஜெயலட்சுமியின் அத்தனை மோசடியும் அம்பலமானது. இதனையடுத்து ஜெயலட்சுமியிடம் இரண்டு முறை விளக்கம் கேட்டும் எந்தப் பதிலும் வரவில்லை. எனவே இந்த விவகாரம் குறித்து சென்னை காவல்துறை உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி புகார் கொடுத்துள்ளேன் என்றார்.

 ஜெயலட்சுமி விளக்கம்

ஜெயலட்சுமி விளக்கம்

இந்த புகார் குறித்து செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்த சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி, நான் நடத்திவரும் அறக்கட்டளைக்கு பதிவு எண், நீதிமன்ற அங்கீகாரம் என அனைத்து பதிவுப் பத்திரங்களும் எங்களிடத்தில் சரியாக உள்ளது. அப்படி இருக்கையில் நாங்கள் ஏன் மோசடி செய்ய வேண்டும் என்று கேட்டார். நாங்கள் எங்கள் அறக்கட்டளை சார்பில் செய்து வரும் அனைத்து நற்பணிகளையும் சமூக வலைதளத்தில் பதுவிட்டு வருகிறோம்.

களங்கம் சுமத்தும் சினேகன்

களங்கம் சுமத்தும் சினேகன்

சினேகன் எங்கள் மீது வேண்டுமென்றே எங்களின் நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் நோக்கில் புகார் அளித்துள்ளார். நான் தனிமையில் அமர்ந்து பேசி அறக்கட்டளைக்கு நன்கொடை வசூலிப்பதாக கூறியிருக்கிறார். அவரும் ஒரு அறக்கட்டளை நடத்துகிறார் அவரும் அப்படி தன் வீட்டுப் பெண்களை தனிமையில் அமரவைத்து பேசி தான் நன்கொடை வசூலிக்கிறாரா என்றும் ஜெயலட்சுமி கேள்வி எழுப்பினார்.

திமுக பின்னணி

திமுக பின்னணி

சினேகனின் இந்த செயலுக்கு பின்னால் திமுக இருப்பதாக கூறியுள்ள ஜெயலட்சுமி, கமலஹாசனை திமுக விலைக்கு வாங்கிவிட்டது, திமுகவும் மக்கள் நீதி மய்யமும் தற்போது ஒன்று தான் என்று கூறினார். திமுக அதிக பணம் கொடுத்து தொடர்ந்து தங்களது நிறுவனத்தில் கமலஹாசனை நடிக்க வைத்துக் கொண்டு இருக்கிறது எனவும் ஜெயலட்சுமி குற்றம் சாட்டியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+