2021ல் போட்டியிட்டிருந்தால் 100% ஆட்சியை பிடித்திருப்பேன்! விஜய் வெற்றிக்கு பின் மவுனம் கலைத்த ரஜினி
சென்னை: தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் வெளியானதில் இருந்தே ரஜினியின் மவுனம் குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வந்தன. இதற்கிடையே இன்று செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த் பல முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். மேலும், 2021 தேர்தலில் தான் போட்டியிட்டிருந்தால் வென்று இருப்பேன் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
தமிழ்நாடு தேர்தலில் இரு பெரும் திராவிடக் கட்சிகளை வீழ்த்தி விஜய் ஆட்சியைப் பிடித்தார். அவர் இப்போது கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு முதல்வராக இருக்கிறார். இதற்கிடையே ரஜினியை முதல்வர் விஜய் சந்திக்க இருந்ததாகவும் இருப்பினும், ரஜினி சந்திக்க மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் பரவியது. மேலும், ரஜினி- விஜய் தொடர்பாகச் சமூக வலைத்தளங்களில் பல்வேறு தகவல்கள் உலா வந்தன.

இந்தச் சூழலில் தான் போயஸ் தோட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் ரஜினி! தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஸ்டாலினை ரஜினி சந்தித்ததால் வதந்தி குறித்து விளக்கமளித்தார். கொளத்தூரில் ஸ்டாலினின் தோல்வி தனக்கு நெருடலை ஏற்படுத்தியதாகவும் இதன் காரணமாகவே ஸ்டாலினை சந்தித்தாக தெரிவித்தார். மேலும், ஸ்டாலினுக்கும் தனக்கும் மிக நீண்ட நட்பு இருப்பதாகத் தெரிவித்தார்.
மேலும், விஜய் மீது தனக்குப் பொறாமை இல்லை எனக் கூறிய அவர், விஜய் தனியாக வென்றதில் ஆச்சரியம் கலந்த உண்மை என்று தெரிவித்தார். விஜய் அனைத்து எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வார் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். விஜய் ரசிகர்களும் தொண்டர்களும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் அது விஜய்யையே பாதிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
அப்போது செய்தியாளர் ஒருவர் மக்கள் மாற்றத்திற்காக வாக்களித்துள்ளார்கள். அப்போது நீங்கள் 2021ல் போட்டியிட்டிருந்தால் வென்று இருப்பீர்களா எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு ரஜினி, "100% உறுதி.. அந்த தேர்தலில் நான் போட்டியிட்டு இருந்தால் நிச்சயம் வென்றிருப்பேன்" என்றார்.
-
காத்திருந்து காத்திருந்து..பனையூரில் பாழாய்ப் போன கனவுகள்! பதவி இல்லாமல் பரிதவிக்கும் ’தாவல்’ தலைகள்! -
ஜூன் 15-ல் ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை வருமா? விஜய் போட்ட பிளான்.. பலருக்கும் போன மெசேஜ் உண்மையா? -
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: மீண்டும் சூடுபிடிக்கும் சிபிஐ விசாரணை.. 10 போலீசாருக்கு சம்மன் -
மோடி தலைமையில் நிதி ஆயோக் குழு கூட்டம் தொடங்கியது.. முதல்வர் விஜய் பங்கேற்றார்! அஜெண்டா என்ன? -
தவெகவின் வியூகம்.. புஸ்ஸி ஆனந்துடன் பேச்சுவார்த்தை நிறைவு.. அடுத்த வாரத்தில் இணையும் விஜயபாஸ்கர்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
பரந்தூர் விமான நிலையம்.. களத்தில் இறங்கிய மத்திய அரசு.. விஜய்க்கு பெரும் சிக்கல்! -
Singappen Force: சிங்கப் பெண் அதிரடி படை எப்படி செயல்படும்.. ஐஜி பவானீஸ்வரி விளக்கம் -
விஜய் அரசை தாண்டி.. பரந்தூர் விமான நிலையத்துக்கு புதிய சிக்கல்.. ஆந்திரா மூலம் வந்த புது பிரச்சனை! -
முதல்வர் விஜய்யை சுற்றி தலைமை செயலகத்தில் 4 பவர் சென்டர்கள்.. முன்னாள் அமைச்சர் உதயக்குமார் புகார் -
சோனியா காந்தியை நேரில் சென்று சந்தித்த முதல்வர் விஜய்.. இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாகும் தவெக! -
டெல்லியில் விஜய்.. நாளை பிரதமர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கிறார்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications