ஸ்டாலின் தலைமையில்.. திமுகவின் உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம் நவ.20ல் நடைபெறும் என அறிவிப்பு!
சென்னை: திமுகவின் உயர்நிலை செயல்திட்ட குழுக் கூட்டம் வரும் நவ. 20ம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். அண்ணா அறிவாலயத்தில் நவ. 20ம் தேதி காலை 10.30 மணியளவில் இந்த கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளன. இருப்பினும், தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் வேலைகளை இப்போதே தொடங்கியதாகவே தெரிகிறது.

குறிப்பாக திமுக மற்றும் அதிமுக இடையே கடந்த சில காலமாகவே அறிக்கை போர் தொடர்ந்து வருகிறது. இரு தரப்பும் அரசுத் திட்டங்கள் குறித்து மாறி மாறி கருத்துகளைக் கூறி வருகிறார்கள்.
திமுக: இது ஒரு பக்கம் இருக்க முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று கள ஆய்வு சென்று நடத்தத் திட்டமிட்டுள்ளார். முதற்கட்டமாகக் கோவையில் கள ஆய்வை நடத்திய அவர் அங்குள்ள திமுக நிர்வாகிகள் உடனும் ஆலோசனை நடத்தினார். இப்போதே திமுகவினரை அவர் களத்தில் இறங்கி வேலை செய்ய அறிவுறுத்தி இருக்கிறார்.
இதற்கிடையே திமுகவின் உயர்நிலை செயல்திட்ட குழுக் கூட்டம் வரும் நவ. 20ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக தலைமையிடமான அண்ணா அறிவாலயத்தில் நவ. 20ம் தேதி காலை 10.30 மணியளவில் இந்த கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்
அறிவிப்பு: இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் வருகிற 20.11.2024 புதன்கிழமை காலை 10.30 மணி அளவில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் நடைபெறும். அதுபோது உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
ரூ.258 கோடி போதைப்பொருள் வழக்கு பரபரப்பு: விஜய் அரசுக்கு எதிராக திமுக அதிரடி குற்றச்சாட்டு -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
திருமாவளவன் குற்றச்சாட்டால் ஆடிப்போன ராகுல், சோனியா.. அடுத்து என்ன செய்யப்போகிறது காங்கிரஸ்? -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால் -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
வைகோ வருத்தப்பட போறாரு.. நிர்வாகிகளை தட்டித் தூக்கும் திமுக! ஆர்டர் போட்ட ஸ்டாலின்! துரை தான் பாவம்! -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து











Click it and Unblock the Notifications