தமிழக மாநிலங்களவை தேர்தல்! திமுக சார்பில் 3 வேட்பாளர்கள் அறிவிப்பு! எம்பியாகும் கமல்ஹாசன்!
சென்னை: தமிழக மாநிலங்களவை தேர்தல் வரும் ஜூன் 19 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் திமுக சார்பில் 3 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அது போல் 2024-ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் ஒப்பந்தத்தின் படி ஒரு மாநிலங்களவை சீட் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு வழங்கப்படுவதாகவும் திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

திமுக வேட்பாளர்களாக வழக்கறிஞர் வில்சனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அது போல் கவிஞர் சல்மா, எஸ்.ஆர். சிவலிங்கம் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இருந்து ராஜ்யசபா எம்பிக்களாக கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை 25 ஆம் தேதி வழக்கறிஞர் வில்சன், தொ.மு.ச பேரவைத் தலைவர் சண்முகம், புதுக்கோட்டை எம்.எம். அப்துல்லா ஆகியோர் தி.மு.க சார்பாகவும், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தி.மு.க கூட்டணி சார்பாகவும் தேர்வாகினர்.
அது போல் அதிமுக சார்பில் சந்திரசேகரனும் அவர்களது கூட்டணி சார்பில் பாமக அன்புமணியும் ராஜ்யசபா எம்பிக்களாக தேர்வு செய்யப்பட்டனர். இந்த நிலையில் இவர்களது பதவிக்காலம் வரும் ஜூலை 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
இதையடுத்து தமிழக மாநிலங்களவை தேர்தல் வரும் ஜூன் 19ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஜூன் 2ஆம் தேதி முதல் வேட்புமனுக்கள் தாக்கல் தொடங்குகிறது. ஜூன் 9 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய இறுதிநாளாகும்.
இந்த நிலையில் சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கைகேற்ப திமுகவுக்கு 4 இடங்களும் அதிமுகவுக்கு இரு இடங்களும் கிடைக்கும். அந்த வகையில் 4 இடங்களில் ஒன்ற மநீமவுக்கு கிடைக்கும் என சொல்லப்பட்டுள்ள நிலையில் மீதி 3 இடங்கள் யாருக்கு என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில் இன்று வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது. அதில் 2025 ஜூன் 19 அன்று நடைபெறவிருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் 4 இடங்களில் 3 இடங்களுக்கு திமுக வேட்பாளர்களும் மற்றுமுள்ள ஒரு இடத்திற்கு ஏற்கெனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு இடம் ஒதுக்கப்படுகிறது.
திமுக வேட்பாளர்களாக பி.வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம், கவிஞர் சல்மா ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அண்ணா அறிவாலயம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மநீமவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் கமல்ஹாசன் போட்டியிடுவார் என அக்கட்சி தெரிவித்துள்ளது. இன்று நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு, செயற்குழு கூட்டத்தில் இரு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம் 1
2024 நாடாளுமன்ற பொதுத் தேர்தலின் போது திராவிட முன்னேற்றக் கழகத்துடன் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 2025-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் ஒரு இடம் ஒதுக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில், வருகிற ஜூன் 19-ஆம் தேதி நடைபெற இருக்கும் 6 தமிழக நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளராக, தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களை மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு, செயற்குழு ஏகமனதாக முடிவு செய்து அறிவிக்கிறது.
தீர்மானம் 2
மாநிலங்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளரான திரு. கமல் ஹாசன் அவர்களுக்குத் தங்களது மேலான ஆதரவை நல்கும்படி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளை மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு, செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
-
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு












Click it and Unblock the Notifications