ஆட்சியில் பங்கு கேட்பது எப்படிங்க சதி ஆகும்? ஸ்டாலின் கருத்தால் கொந்தளிக்கும் மாணிக்கம் தாகூர்
சென்னை: (திமுக காங்கிரஸ் கூட்டணி: DMK Congress alliance) தோழமையில் மக்கள் பணியில் பங்கு கேட்டால் அது எப்படி சதியாகும்? என்று மாணிக்கம் தாகூர் எம்பி கேள்வி எழுப்பியிருக்கிறார். நேற்று தமிழகத்திற்கு கூட்டணி ஆட்சி ஒத்துவராது என்றும், திமுக காங்கிரஸ் கூட்டணியை பிரிக்க சிலர் சதி செய்துவருவதாக முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார்.
இந்த நிலையில் அதற்கு, 'கூட்டணி ஆட்சியா, ஒரு கட்சி ஆட்சியா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என்றும், 2006 தமிழக சட்டசபை தேர்தலில் மக்கள் தீர்ப்பை நாம் செயல்படுத்தாததும் நம் (காங்கிரசின்) தவறு.. என்று மாணிக்கம் தாகூர் கூறியிருந்தார்.

திமுக காங்கிரஸ் கூட்டணி
திமுக காங்கிரஸ் கூட்டணியில் தொடர்ந்து சலசலப்புகள் இருந்து வருகின்றன. முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் பங்கு இல்லை என்பதை திட்டவட்டமாகவே கூறிவிட்டார். அதே சமயத்தில் திமுக காங்கிரஸ் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என்றும், வரும் தேர்தலில் திமுக காங்கிரஸ் சேர்ந்தே செயல்படும் என்றும் தெளிவுப்படுத்திவிட்டார்.
இதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, ஆட்சியில் பங்கு இல்லை என்பது முதல்வர் ஸ்டாலினின் தனிப்பட்ட கருத்து, கூட்டணி ஆட்சியா இல்லையா என்பதை ராகுல் காந்தி, கார்கே ஸ்டாலினுடன் பேசி முடிவு எடுப்பார்கள். திமுக கூட்டணியில் தான் காங்கிரஸ் இருக்கிறது என்றும் சொல்லிவிட்டார்.
ஒரு கட்சி ஆட்சியா?
ஆனால் ஆரம்பத்தில் இருந்தே மாணிக்கம் தாகூர் மற்றும் பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோர் ஆட்சியில் பங்கு கோரிக்கையை வலியுறுத்தி வந்தனர். குறிப்பாக தவெக இந்த முறை களத்தில் இருப்பதால் அதனை காரணம் காட்டி திமுகவிடம் அதிக தொகுதிகளை பெறுவதற்கும், ஆட்சியில் பங்கு கோரிக்கையும் எழுப்பினர்.
இதற்கு ஆட்சியில் பங்கு கிடையாது என்பதை திமுக அமைச்சர்கள் மறைமுகமாக பதில் அளித்து வந்தனர். இந்த நிலையில் தான் ஸ்டாலினும் இதனை சொல்லி இந்த விவகாரத்தில் முற்றுப்புள்ளி வைத்த நிலையில், காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கூட்டணி ஆட்சியா? ஒரு கட்சி ஆட்சியா? என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என பதில் அளித்தார்.
2006 சட்டசபை தேர்தல்
மேலும் தமிழகத்தில் 2006 சட்டசபை தேர்தலின் போது மக்கள் தீர்ப்பை நாம் (காங்கிரஸ்) செயல்படுத்தாது தவறு என கூறியிருந்தார். அந்த தேர்தலில் திமுக பெரும்பானமை பெறவில்லை. திமுக வெறும் 96 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று இருந்தது. காங்கிரஸ் 34 தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தது. இதனால் காங்கிரஸ் துணையுடனேயே திமுக ஆட்சி அமைத்தது.
இதனை மேற்கோள் காட்டியே மாணிக்கம் தாகூர் கூறியிருந்தார். இதற்கு திமுக தரப்பில், திமுக காங்கிரஸ் கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை, ஒருசிலர் கூட்டணியை பிரிக்க சதி செய்து வருவதாக கூறியிருந்தனர். முதல்வர் ஸ்டாலினும் கூட்டணியில் சலசலப்பு என்பது கூட்டணியை முறிக்க நினைக்கும் திட்டமிட்ட சதி என கூறியிருந்தார்.
அது எப்படி சதியாகும்?
இதற்கு பதில் அளிக்கும் வகையில் தான் தற்போது மாணிக்கம் தாகூர் ட்விட் பதிவிட்டுள்ளார். "தோழமையில் மக்கள் பணியில் பங்கு கேட்டால் அது எப்படி சதியாகும்?" என்று அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார். இதனால் திமுக காங்கிரஸ் கூட்டணியில் அடிமட்ட அளவில் தொடர்ந்து மோதல் போக்கு நீடித்துக் கொண்டே வருகிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications